July 3, 2011

தோழி - இரண்டாம் தாய், முதல் விமர்சனம்..

வணக்கம்,

இந்த செல்வராகவன் அப்படின்னு ஒரு இயக்குனர் இருக்காருல்ல..அவர் எடுத்த 7G Rainbow Colony படத்தையும் அவர் ஆனந்த விகடன்ல எழுதின `கனா காணும் காலங்கள் `என்ன மாதிரி சில ஆளுங்க தொடர சேத்து படிச்சிட்டு பீல் பண்றது ரொம்ப ஜாஸ்தியா போச்சு...அவங்கவங்களோட காதல் வராலாறுகள எல்லாருக்கும் தெரிய வெக்கணும்னு சுத்திட்டு இருக்காங்க (நான் உட்பட, யாரும் இதற்க்கு விதி விலக்கல்ல)அப்படி சுத்திட்டு இருக்குற, பீல் பண்ற கோஷ்டில மேல போட்ருக்கேன் பாத்தீங்களா ஒரு தலைப்பு அந்த புக் எழுதின திருவாளர். கந்தகிரியும் ஒருவர்..இதுக்காக அவரு அந்த புக்ல எழுதி இருக்குற மேட்டர், அவர் பீல் பண்றது எல்லாம் பொய் அப்படின்னு சொல்லல, அத பீல் பண்ற தைரியத்த செல்வராகவன் கொடுத்துருக்காரு..(புக்கோட அந்த கடைசி 10 பக்கத்த படிக்கும்போது நானே கொஞ்சம் பீல் ஆனேன்...)

இந்த புக் சுத்த பேத்தல், ஒரு ஒன்னுத்துக்கு உதவாத மேட்டர பக்கம் 1 இருந்து 173 வரைக்கும் இழுதடிசிருக்காறு அப்படின்னு சொல்ல நான் ஒன்னும் பெரிய விமர்சகரோ, அந்தளவுக்கு அறிவோ என்கிட்டே இல்ல, இந்த புக்க எழுதின கந்தகிரிக்கு இப்போ 23 வயசு தான் ஆகுது அவரோட முதற் முயற்சி இது, அதனால விமர்சனம் பண்ற அளவுக்கு அவர் இன்னும் வளரல ( தப்பா எடுத்துக்காதப்பா..) அவர் எழுதி இருக்காரு, அவரோட முதற் முயற்சிய வெச்சு நான் ஒன்னு எழுத போறேன்..அவ்ளோ தான்...இந்த 23 வயசுல லவ் பண்ணி முடிச்சு ஒரு புக்கே ரிலீஸ் பண்ணிட்டான், அதுக்கு தன் கை காசு ருபாய் 10,000 செலவு செஞ்சான் அப்படின்னு நெனைக்கும் பொது நான் என்னோட 23 வயச நெனைச்சு பாக்க ஒரு 5 வருஷம் முன்னாடி போக வேண்டி இருக்கு..என்னையெல்லாம் இப்படி ரூபாய் செலவழிச்சு உன்னோட லவ் அனுபவம் பத்தி ஒரு புக் எழுதுறான்னு சொல்லி இருந்தாங்கன்னா `BODY GUARD முனீஸ்வரன் கோவில்ல வெச்சு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணி இருப்பேன் எனக்கு லவ்வெல்லாம் ஒன்னும் கெடயாதுன்னு..இந்த கதையோட நிறை,குறை,நல்லது, கெட்டது அப்படின்னு நான் எதையும் சொல்ல போறதில்ல எனக்கு புடிச்சது புடிக்காதது...அத மட்டும் தான் சொல்ல போறேன்...

பிடிச்சது:
1.
முன்னமே சொன்ன மாதிரி இந்த வயசுல எல்லாத்தையும் முடிச்சிட்டு ஒரு புக் எழுதுற `அனுபவம்` கண்டிப்பா என்கிட்டே கிடையாது, அதுக்கே முதல்ல நான் தலை வணங்குறேன்..
2.
எழுதுறது எவ்ளோ கஷ்டம்னு சும்மா இந்த ப்ளாக்ல கிறுக்குற எனக்கு தெரியும். இந்த படிக்காம போய் Exam Hall ல மூணு மணி நேரம் சும்மா உக்கந்துருக்குற மாதிரி கஷ்டமான காரியம்...
3.
இத படிச்சதன் மூலமா அவன பத்தி, மன்னிக்கணும், அவர பத்தி தெரியாத பல நல்ல விஷயங்கள் எனக்கு தெரிய வந்துது..உதாரணமா சமூக சேவை, குழந்தைய தத்தெடுத்தது..படிக்கும் போது அவனுக்கு சாரி அவருக்கு இருந்த ஆசை, லட்சியம்,..இப்படி சில...
4.
இயல்பா பொறியியல் படிக்கிற மாணவர்களோட சவால்கள், pressure இதெல்லாம் எனக்கு ஓரளவு தெரிஞ்சாலும் இன்னும் தெளிவா புரிய வெச்சது..
5.
இதையெல்லாம் தாண்டி ஒரு நாளைக்கு அவர் பத்து மணி நேரமாவது வேலைல இருப்பாரு அதையும் தாண்டி இந்த புக்க முடிகனும்ன்ற ஆர்வம்...(உன் கால காட்டுப்பா..)..சும்மா வேலைக்கு போனோமா, சாப்டோமா, தூங்கினோமா அப்படின்னு அவங்க ஆளுங்களே நிறைய பேர் இருக்காங்க, அப்படி இல்லாம எதையாவது செய்யணுமேன்னு அப்படின்ற துடிப்பு...

பிடிக்காதது:
1.
போதும்யா காதல போதுமான அளவுக்கு எல்லாரு அடிச்சு துவைச்சு உஜாலா போட்டு கொடில காய வெச்சு க்ளிப்பு குத்திட்டாங்கய்யா...இந்த காலத்துல எல்லாரும் பண்றத தான்யா நீயும் நானும் பண்றோம்,பாக்குறோம் அதுக்காக ஒரு புக்க எழுதி எங்கள படின்னு கொடும படுத்தி அத என்ன ப்ளாக்ல எழுதனும்னு வேற சொல்லி நீ தீவிரவாதத்தின் உச்சதிக்கிற்கே போய்ட்ட டா , போதும் டா முடில....
2.
சின்ன வயசுல இருந்து இந்த காலேஜ் போற வரைக்கும் பெற்றோர்கள் இடத்தில் பாசத்திற்கு ஏங்கினேன்..அத அந்த பொண்ணு கொடுத்தா அப்படின்னு நீ சொன்னத நான் கடுமையா எதிர்க்கிறேன்...அது என்ன டா ஒரு பொண்ணு வந்த உடனே எப்படி டா இப்படி அனல் பறக்கும் வசனத்த பேசுறீங்க..உங்களுக்கு இப்படி பேச சொல்லி எவண்டா கத்து தரான்...20 வருஷம் உன்ன வளத்த பாவத்துக்காகவாவது அந்த வரிகளை நீ தவிர்த்திருக்கலாம்,அந்த புக்க எப்படி உங்கப்பாவ வேற படிக்க சொல்லி கொடுதுருக்க..அவர எப்படி புக்க படிக்க வெச்சியோ அதே மாதிரி உங்கள சப்போர்ட் பண்ணி ஒரு லூசு பய எழுதி இருக்கான்னு இதையும் படிக்க சொல்டா...
3.
இப்படி ஒரு புக் முழுக்க உங்க ரெண்டு பேரோட திருவிளையாடல்கள எழுதின சரி நடுவுல கொஞ்சம் மானே,தேனே , பொன்மானே போன்ற வசம் போடற மாதிரி பொறியியல் படிக்கிறப்ப வர presures handle பண்றது எப்படி, Campus Prepare பண்றது எப்படி, Project புடிக்கிறது, அத வெற்றிகரமா செய்றது எப்படி,குறைஞ்ச பட்சம் ஆரம்பத்துல வர Ragging ப்ராப்ளத்த சமாளிக்கிறது அப்படின்னு சில உண்மையிலேயே உருப்படியான விஷயத்த சேர்த்து இருக்கலாம்...அத விட்டுட்டு நீங்க தினமும் ராத்திரி 2 மணி வரைக்கும் sms அனுப்பினது, பஸ்ல போனது,டிக்கெட்எடுத்ததுன்னு புக் புல்லா எழுதி இருக்க....நடுவுல என்னமோ தசாவதாரம் கமல் மாதிரி Chaos Theory வேற..

இதையெல்லாம் ஏன் உனக்கு நான் சொல்றேன்னா உன்ன குத்தி காட்ட இல்ல, வருங்காலத்துல எழுத்து உனக்கு பொழுதுபோக்கா இல்லாம வேற விதமா இருந்தா அப்போ நீ இதையெல்லாம் தவிர்க்கணும்னு தான்( நான் இப்படி தான் அப்படின்னு என் ரேஞ்சு உனக்கு தெரியும் இப்படி எழுதுறதால என் மேல உனக்கு கோபம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்..)...சரி போகட்டும்....

கடைசியா கொஞ்சம் சொல்லிட்டு முடிச்சிடறேன்...நீ புக் எழுதுறத யாரும் தடுக்க போறதில்ல, ஆனா தயவு செஞ்சு இந்த காதல் அப்படின்ற விஷயத்த விட்டு வெளில வாங்க டா...உன்னோட அடுத்த முயற்சிக்கு என்னோட வாழ்த்துக்கள், ஆனா இந்த கதைய English Translation பண்ணி எனக்கு மெயில் அனுப்பி அத படிக்கிற கொடுமைய என்ன அனுபவிக்க வெக்காத. எவ்ளோ நல்ல விஷயங்கள் பண்ற, பண்ணிட்டு இருக்க, அது மாதிரி நல்ல விஷயத்துல நீ கவனத்த செலுத்து..நீ எழுதி இருக்குறத பாத்தா கண்டிப்பா அவ உனக்கு வேணாம்னு எனக்கு தோணுது..(இத நாம தனியா Disscuss பண்ணுவோம்)..

அவ கிட்ட இருந்து போன் கால் வருமான்னு நீ வெயிட் பண்ணது போதும், நீ செய்ய வேண்டியது, முடிக்க வேண்டியது, நிறைவேத்த வேண்டியதுன்னு இந்த உலகத்துல நிறைய இருக்கு,தயவு செஞ்சு போய் அந்த உருப்படியான வேலைய பாக்க ஆரம்பிச்சுறு....

நீ எடுக்கற ஒவ்வொரு அடிக்கும்,மறுபடியும் என் வாழ்த்துக்கள்...