August 19, 2011

உடல் ஆராய்ச்சிக்கு...உயிர் உலகநாயகனுக்கு..

வணக்கம்,

இந்த தலைப்ப பாத்த உடனே தெரிஞ்சுருக்கும்...இது உலக நாயகன் கமல்பத்தின பதிவு தான், அவர பத்தி என்ன எழுதுறது? ...புடிக்குதோ புடிக்கலையோஅவர பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு...அம்பது வருஷம் திரை உலகில்இருக்கிறது, நாலு தேசய விருது வாங்கினது, நெறைய படத்த ஆஸ்கருக்கு அனுப்பினது அப்படின்னு நெறைய பேருக்கு நெறைய விஷயம் தெரியும், இருந்தாலும் கமல் பத்தி எழுதனும்ன்ற ஆர்வம்...இத எழுததூண்டுச்சு...கூடுமான வரைக்கும் நீங்க கேள்வி பட்ட விஷயத்த எழுதாம, புதுசா இருக்குற மாதிரி பாத்துக்குறேன்...அவர் ரசிகன் அப்படின்றதால புடிச்ச விஷயம்தான் எழுதனும்னு இல்ல, பிடிக்காத விஷயமும் எழுதுவேன்..அபூர்வ ராகங்கள்படத்துல இருந்து ஆளவந்தான் வரை...சப்பாணி முதல் சப்புன்னு முத்தம்கொடுத்தது வரைன்னு ரொம்ப யோசிச்சு...அப்புறமா மேல இருக்குற பேறவெச்சேன்...
 
நினைவு தெரிஞ்சு, நான் முதல் முதலா தியேட்டர்ல போய் பார்த்த படம், சிகப்புரோஜாக்கள்...அதனால எனக்கு பரிச்சயமான முதல் நடிகர் கமல் தான்..சின்னவயசுல எல்லாருக்கும் புடிச்ச சார்லி சாப்ளின் வேஷத்துல வந்ததுனாலபுன்னகை மன்னன் படத்துல இருந்து பிடிச்ச நடிகரா ஆனார் கமல், பிற்பாடுஎல்லாருக்கும் புடிச்ச நாயகன்....ஹீரோன்னாலே எல்லாரையும் அடிச்சுபோட்டு வீரா வேசமா நடந்து வரத மட்டுமே நான் பாத்துருக்கேன்...ஆனாஜெயில்ல போலீஸ் கிட்ட அடி வாங்கி ரத்த களரியா பாத்ததும் ஏன் இந்தஹீரோ மட்டும் அடிவாங்கிட்டு வராரு அப்படின்னு என் பிஞ்சு மூளைக்குள்ளவந்த சந்தேகம் தான் என்ன அப்போ கமல் பின்னாடி ஓட வெச்சுது...தொடர்ந்துஇன்னொரு அதிர்சிகரமான ஜெயில பாத்தேன் மகாநதி படத்துல.. இப்படி தான்இருக்குமான்னு பாத்த எனக்கு அதிர்ச்சி...அப்படியே விடாம தொடர்ச்சியா அவர்படத்த பாத்து இந்தியன் படத்துல இருந்து கமல் வெறியனா ஆனேன்...இப்போவரைக்கும் அப்படி தான் ( ஆனா இந்த மன்மதன் அம்பு....என்னாலையே உக்காரமுடில)..
 
இப்படி சின்ன வயசுல இருந்து பாத்த சாப்ளின் செல்லப்பாவா, இந்தியன்சேனாபதியா, அப்புவா, ரங்கராஜ நம்பியா, ராகவனா, நல்ல சிவம்னு இப்படி பலரூபத்துல பாத்து அழுது இருக்கேன்...
இப்போ இருக்குற நடிகர்கள் நற்பணி மன்றம் அப்படின்ற பேர்ல ரசிகர்மன்றங்கள் நடத்தி தங்களோட அரசியல் ஆசைக்கு  உபயோகபடுத்திக்குறாங்க...ஆனா உச்சத்துல இருக்கும்போது ( 1986) தன்னோட ரசிகர்மன்றங்கள நற்பணி மன்றமா மாத்தி ...அரசியல் ஆசை இல்லாமஉண்மையிலேயே நற்பணி செய்யுறது இவர தான் இருக்கும். சினிமா தவிரமையம்` அப்படின்ற இலக்கிய பத்திரிகை நடத்தினது எத்தன பேருக்குதெரியும்னு தெரில..பரதம் கத்துகிட்டதால இயல்பா வந்த உடல் நளினத்தமாத்த கத்துகிட்ட கராத்தே,படத்துல பாடுறதுக்கு திரு.பால முரளி கிருஷ்ணா , குன்னகுடி வைத்தியநாதன் கிட்ட கத்துகிட்ட பாட்டும் வயலினும் இப்போவும்அவருக்கு உதவுது.. கடவுள பத்தின கொள்கைகள் எனக்கும் அவருக்கும்ஒன்னு அப்படீன்ற விஷயமும்..( இவரு இப்படி தான் எனக்கு தெரியருதுக்குமுன்னாடியே நான் அப்படி தான்...புரிஞ்சுதா....), பெரியார் பின்பற்றுதலும்பிடிக்க  காரணங்களுள் ஒன்று...ஆனால்........ 
`
பிடிக்காத பல விஷயங்களும் இருக்கு...  1974   19 வயசுல இவள தான் நான்கல்யானம பண்ணிக்க போரேன்னு அடம் பிடிச்சு, `இப்போ தான்டா நீசினிமாவுக்கு வந்துருக்க  உடனே கல்யாணம் வேணாம் டா` அப்படின்னுஅவங்கம்மா சொன்னதால அப்போ கல்யாணம் பண்ணாம 4 வருஷம் கழிச்சு 1978 திருமணம் செஞ்சுக்கிட்டாறு. அப்புறம் சரிகாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ சொல்றாரு திருமண உறவுல நம்பிக்கை இல்லைன்னு..இது மாதிரி இன்னும் நெறைய இருக்கு...தெளிவா பேசாதது, தமிழ் படத்துல ஒரு நாலஞ்சு மொழி பேச வெக்குறது, கட் பண்ணுவாங்கன்னு, எதிர்பாங்கான்னு தெரிஞ்சும் சர்ச்சைக்குரிய விஷயங்கள படத்துல வெக்குறது.. எந்தளவு இப்போ தமிழ்சினிமா முன்னாடி இருக்க அவர புகழ்ந்து   தள்ரோமோ, ஓரளவு தமிழ் சினிமா  குட்டி சுவர் ஆனதுக்கும் அவர காரணமா சொல்லலாம்..தமிழ் என் மூச்சு சொல்ற அவரால அவர் பொண்ணுங்களுக்கு தமிழ் உச்சறிப்ப சரியா  சொல்லி கொடுக்க முடியல, கேட்டா தனி மனித சுதந்திரத்துல தலையிட விரும்பலம்பாறு..
 
 உனக்குள்ள உலாத்திட்டு இருக்க  மிருகம் தான் எனக்குள்ள தூங்கிட்டுஇருக்குனு அவர் எழுதின வசனத்த எல்லா எடத்துலயும் எல்லாரும்உபயோகிக்க ஆரம்பிச்சுடாங்க..அவருக்குள இருக்குற அந்த மிருகம்முழிசுகிட்டா அவர் நடிக்கிற, இயக்குர படத்த தயாரிக்கிற தயாரிப்பாளர் ரொம்பபாடு படுவாங்க...தாணு ஒரு சிறந்த உதாரணம்..இந்தியால இருக்குற தலைசிறந்த நடிகர்கள் பட்டியல்ல இருக்குற ஒருத்தரோட படங்கள் வெளியிட சர்மாபடுவதும், ஆரம்ப நிலையிலேயே நின்னு போவாதும் கமல் ஒருத்தருக்கு தான் நடக்கும், அதுக்கும் கமலுக்குள்ள இருக்க அந்த மிருகம் தான் காரணம்...
 
எதையும் ஒளிவு மறைவில்லாம பேசுறது, தன மனசுக்கு பிடிச்சத செய்றதுஓரளவாவது தமிழ் சினிமாவ முன்னேதனும்னு நினைக்கிறது, சம்பாரிக்கிற காச சம்பாரிச்ச இடமான சினிமாவுலே போடறது, காப்பி அடிச்சாலும் வித்யாசத்த  விரும்புவது இப்படி இன்னும் நெறைய பிடிச்ச விஷயங்கள் இருக்கு, மேல சொன்னது பிடிக்காத விஷயங்கள் இன்னும் நிறையஇருந்தாலும்....
 
August 5, 2011

சூப்பர் சாமியாரும்....சுமாரான நடிகையும்...

வணக்கம்,

கதையோட பேர பாத்துட்டு ஏதோ விவகாரமான கதைன்னு நெனைச்சுட வேண்டாம்...தெரிஞ்ச விஷயம் தான், ஆனா கொஞ்சம் தெரியாத மேட்டரோட இது இருக்கும்....

நாடோடி தென்றல்ல உங்கள அறிமுக படுத்தின அவ்ளோ பெரிய பாரதி ராஜாவே உங்க கிட்ட இருந்து அந்த நடிப்ப வாங்கி இருப்பாரான்னு தெரில...ஆனா சுவாமிஜி கரெக்டா வாங்கி இருக்காரு....`நடிப்ப` .....

காவியத்தலைவி..நடிகையர் திலகம்...குல,குத்து விளக்கு ( குலகுத்துன்னு சேர்த்து படிசுராதீங்க) ரஞ்சிதா அப்புறம் உலகதுக்குக்கே பிராமச்சர்யத்த சொல்லி கொடுத்த சாமியார் குல திலகம்....திரு.நித்யானந்தாவோட சமீபத்திய டிவி பேட்டி..இத தான் நாம பாக்க போறோம்..

என்னமோ கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போன பிறகு முதல் முறையா திருப்பி அம்மா வீட்டுக்கு வந்த மாதிரி..ஒரே கண்ணீர், சிரிப்பு, கோபம்னு நவரசத்த போட்டு பிழிஞ்சு எடுத்து வந்த பத்திரிகை நிருபர்களுக்கு ஜூஸ் போட்டுகொடுத்தாங்க,,அவங்களும் சரமாரியா கேள்வி கேட்டாங்க.இவங்களும் அப்போ சொன்ன பொய்யே இப்போவும் சொன்னாங்க..இந்த ஜீவன் சொல்லுவாரே `நான்அவன் இல்லைன்னு` அது மாதிரி நான் அவ இல்லைன்னு சொன்னாங்க..இதுலவேற சன் டிவி காசு கேட்டு மிரட்டினாங்கலாம்...அவன் கிட்ட இல்லாத காசையா நீங்க கொடுத்துற போறீங்க...அப்புறம் உங்க போட்டோவ Morphing பண்ணிடாங்கன்னு...சன் டிவி Morphing பண்ணனும்னு முடிவு பண்ணபிறகு..போயும் போயும் உங்களையா Morphing பண்ணனும்...வேற நெறைய அழகான` நடிகைகளெல்லாம் இருக்காங்களே...இன்னொன்னு அந்த News of The World` Murdoch பண்ண மாதிரி சன் டிவி இழுத்து மூடம்னு...அந்த Murdoch 700 கோடி ரூபா மதிப்புள்ள Sky Network வாங்க போறாரு, அது எதாவது சட்டசிக்கல் போய் முடிஞ்சுரும்ன்ற பயத்துல மூடினாரு,, இந்த தினசரில விட்ட காச அவரு அந்த டிவி புடிப்பாரு..மத்த படை தான் செஞ்ச தப்புக்காக அவர் அத பன்னால.....அது கூட தெரியாத பச்ச புள்ளயா இருக்கீங்களே...கடைசியா சொன்னது தான் சூப்பர்...இப்போ ஆட்சி மாற்றம் வந்துருக்கு...ஜெயலலிதா மேடம் ஆட்சிக்கு வந்துருக்காங்க அவங்க எனக்கு நல்லது செய்வாங்கன்னு சொல்லி...அவங்களுக்கு வசதியா நில மோசடி, கொலை மிரட்டல் இப்படி புகார் கொடுத்து இருக்கீங்க...ஒன்னே ஒன்னு உங்களுக்கு சொல்லிக்கிறேன்...இல்ல அவங்களுக்கு தான் வேற வேல இல்லையா உங்க பின்னாடி அலையுரதுக்கு..உங்க வீடியோவ நான் பாக்கல...அதனால உங்க Performance அதுல எப்படி இருக்குன்னுதெரில...(மாசத்துக்கு இது மாதிரி 3 சாமியார் வீடியோ ரிலீஸ் ஆகுது....போர்அடிக்குது ) அதுல நீங்களா இல்லையான்னு முடிவுக்கும் நாங்க வரவிருமபல...ஆனா எதுக்கும் பொய் சொல்லாதீங்க...அந்த வீடியோல வரது உங்கசொந்த விஷயம்....ஆனா நீங்க தான் அத இப்போ பொது விஷயம்ஆக்கிட்டீங்க...தினமலர் பத்திரிகைல நடிகைகள பத்தி ரொம்ப மோசமா எழுதின லெனின் அப்படின்ற பத்திரிகை நிருபர எப்படி எல்லாம் திட்டி நடிகர்கள் விவேக், சத்யராஜ், ரஜினி பேசி இருக்காங்கன்னு கொஞ்சம் பாருங்க(Thanks: YouTube)....உங்களுக்கு ஏன் அவங்க ஆதரவு தந்து பேசல அப்படின்றத கொஞ்சம் யோசிங்க...அந்த வீடியோல எப்படி நடிச்சீங்க அப்படின்றத உங்கள அறிமுகபடுத்தின பாரதி ராஜ அய்யா கிட்ட தான் கேக்கணும்...பொண்ணுங்க தப்பு மட்டும்தாண்டா உங்க கண்ணுக்கு தெறியும்...மத்தவன் தப்பெல்லாம் தெரியாதுடா...அப்படின்ன்டு சொல்றவங்களும் இருப்பாங்க....அவங்க யாரும் இப்படி சாமியோரோடயோ, இல்ல மத்தவனுக்கு அறிவுரை சொல்ற ஆளுகிட்டயோ இப்படி ஒரு RelationShip Maintain பண்ணதில்ல.....

அடுத்து நமது அண்ணன் நித்யானந்தா கிட்ட வருவோம்..செம சூப்பர் பேட்டிங்க அது....``இந்த வீடியோல இருக்குற ஆள் நான்னே வெச்சுப்போம், அது ஒழுக்கம்சம்பந்தமான பிரச்சனை அத நீங்க கேக்க கூடாது....ஆன்மிகத்துல இருக்குற `பெரியவா` கேக்கட்டும்`` அப்படின்னு சொல்றீங்க...அப்போ ஏன் இப்போ இந்த பத்திரிகைகாரங்கள கூப்டீங்க...கதவை திற காற்று வரட்டும் சொன்னீங்க...காத்து வந்துதோ இல்லையோ...இத எழுதுறதுக்கு ஒரு கதை வந்துது...உங்க படம் ரிலீஸ ஆன அடுத்த நாளே...குமுதம் வார பத்திரிகைல நீங்க எழுதினத உடனே நிறத்தி உங்கள பத்தி ஒரு (மோசமான) கட்டுரை போட்டாங்களே...அதுக்கும் நீங்க கண்டனம் சொல்லி இருக்கணும்..அது ஏன் சன் டிவி, நக்கீரன் பத்திரிகை மட்டும்உங்க கண்ணு முன்னாடி நிக்குது....ஏன்னா அவங்க தானே உங்க காதல் காவியத்தரிலீஸ் பண்ணாங்க...அப்போ ஆட்சியாளர்களால் பயம், அவங்க கிட்ட தான்பத்திரிகை இருக்குன்னு சொன்னீங்களே..ஜெயா டிவி யாரோட சேனல்..எனக்குதெரிஞ்சு ஆனந்த விகடன் ஒன்னும் ஆளும் கட்சி சப்போர்ட் பண்ணலியே, நெற்றிக்கண் பத்திரிகை என்னாச்சு.....அவங்க கிட்ட போயிருக்கலாமே....உண்மையிலேயே நீங்க உண்மையானவராக இருந்தா.....இவரும் இந்த Morphing Technology பத்தி அன்னைக்கு ஒரு பெரிய Lecture கொடுத்தாரு..பத்திரிகை நிருபர்களும் நல்லா அசிங்கமா தான் கேள்விகேட்டாங்க...அட அவ்ளோ ஏம்ப்பா இந்து முன்னணியே இவங்களுக்கு சப்போர்ட்பண்ணலப்பா...இதுக்கு மேல என்ன வேணும்...

தப்பிக்கணும்...நல்லவன்னு சொல்லணும்....உங்க பக்தி பிசினச பெரிசாக்கணும்....அப்புறம் சந்தோஷமா இருக்கனும்...அதுக்கு தானே இந்த பேட்டி..ஜெயிலுக்கு போயிட்டு வந்ததால சுய சுத்த யாகம் அதாவது Self Purification யாகம்..கண்டபடி பயித்தியம் மாதிரி பொண்ணுங்கள ஆட வெக்குறது, அதுக்கு நடு நாயகமா நீ உக்காந்து லைவ் ஷோ பாக்குறது...கேட்டா அமெரிக்க பல்கலைகழகம் இப்படி பண்ணா ஞாபக சக்தி ஜாஸ்தி ஆகும் சொல்றாங்க, நாங்க அத செய்றோம்னு ஆங்கில படம் எடுக்குறீங்க....(அதுலயும் ரஞ்சிதா இருந்தாங்க)

உங்கள சொல்லி தப்பில்ல, இவ்ளோ நடந்ததுகப்புரமும்...உங்கள தேடி வராங்க பாத்திங்களா...அவங்கள சொல்லணும்...நாட்ல துப்பாக்கிய வெச்சு நூறு பேற கொன்னவன் கூட ஜாலியா சந்தோஷமா ஜெயில்ல பிரியாணி தின்ற அளவுக்கு சுதந்திரம் கொடுக்குற நாடு இது....நீங்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஊருக்குள்ள சுத்தலாம்...கலைஞர் சொல்லி இருக்காரு...`மனசாட்சி உறங்கும்போது தான், மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது..` அப்படின்னு...அதையேகூட நீங்க உதாரணமா சொல்லலாம்...சொல்லிட்டு குரங்கு மாதிரி ஊர் சுத்தலாம்...