February 12, 2010

ஒரு முட்டாளின் கதை...

வணக்கம்.

இக்கட்டுரையில் வரும் அணைத்து சம்பவங்களும், கதா பாத்திரங்களும்...முற்றிலும் உண்மையே....

எல்லாரையும் பத்தி எழுதறத விட நம்மள பத்தியே எழுதினா என்னனு நெனைச்சு இது வரைக்கும் நாம " வாழ்க்கைல என்ன சாதிசிருக்கோம்" அப்படின்றத எழுதலாம்னு ஒரு நப்பாசை தான்...இதெல்லாம் எழுதுறதுக்கு நீ என்ன அப்துல் கலாமான்னு கேக்காதீங்க...அதான் சொல்லிடேனே..நப்பாசைன்னு....சரி நாம என்னெல்லாம் "சாதிச்சிருகோம்னு"....பாப்போம்..நம்ம போட்டோவ போடலாம்னு நெனைச்சேன்..அத பாத்துட்டு இவன் மூஞ்சி மாதிரி கதையும் இருக்கும்னு நெனைச்சு ( அப்படி தான் இருக்கும் அது வேற விஷயம்) படிக்காம போய்ட்டா...

சரி மேட்டருக்கு வருவோம்.....இத எழுதுற இதே பிப்ரவரி மாசம் தான் நான் பொறந்தது...பிப்ரவரி மாச கடைசில ஒரு Sunday மதியம் சரியாய் 12 .05 க்கு உச்சி வெயில்ல ஒரு பைத்தியக்காரனா ஆகுறதுக்கான கரெக்ட்டான நேரத்துல பொறந்தேன்..நம்மளோட குழந்தை பருவம் தான் இருக்குறதிலேயே ரொம்ப அமைதியானது...எந்த ஒரு சேஷ்டையும் கிடையாது ...ரொம்ப அமைதியா இருந்தேன்னு சொன்னா அது இந்த பருவம் இது மட்டும் தான் எனக்கு...ரொம்பவே அமைதி அது முடிஞ்சு இந்த ஸ்கூல் படிக்கிற காலம்..( உண்மையா வேற சொல்லனுமா..) அதே அமைதி இங்கயும் தொடர்ந்துச்சு படிப்புலையும் சேர்த்து...ஒன்னும் பெரிய 100 மார்க் எடுக்குற அளவுக்கு புத்திசாலி கெடயாது பாஸ் பண்ணா போதும்னு நெனைக்குற மக்கு பிளாஸ்திரி தான் நான்....அப்படியே தட்டு தடுமாறி..திக்கி தெணறி..பத்தாவதுல எனக்கே தெரியாம மொத்தமா 72% எடுத்தேன் ( இப்போ வரைக்கும் ஆச்சர்யம் தான்) வழக்கம் போல +2 ல திருப்பியும் எனக்குள்ள இருந்த அந்நியன் ( அதான் மக்கு பிளாஸ்திரி ) வந்துட்டான் இந்த வாட்டி 65% தான் அதுக்கே நான் மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தா எப்படி சந்தோஷ படுவான்களோ ..அத விட ஜாஸ்தியா பீல் பண்ணேன்..( தூ...) இதுக்கு நடுவுல கிரிக்கெட் வேற, ஒரு நாளைக்கு 16 மணிநேரம் படிச்சவன பாத்துருக்கேன்..ஆனா கிரிக்கெட் விளையாடி பாத்து இருக்கீங்களா ( இபபடி தான் எங்கப்பா எல்லார்கிட்டயும் என்ன பத்தி புகழ்வாறு....) என்ன ஒரு பேரு பெற்றேன்..ஸ்கூல் வாழ்கையிலும் ஒன்னும் பெரிய சேஷ்டை கெடையாது ( அப்போ தான் ஆரம்பிச்சுது ) கொஞ்சம் ஜாஸ்தி பேசுவேன் அவ்ளோ தான்....அடுத்தது தான் முக்கியமான கட்டம்..... காலேஜ்......

அது வரைக்கும் நாய் மாதிரி நம்மள கட்டி போட்டே வளர்த்தாங்களா ...திடிர்னு பஸ் ஏறி போய்...நந்தனம் காலேஜ்ல சேர்த்தாங்க...நந்தனம் தான் என்வாழ்கைல நந்தவனத்த காட்டுச்சு...செரி படிக்கலன்னாலும் ரொம்ப கட்டுபாடா வளந்த என்ன அவுத்து விட்ட மாடு மாதிரி நந்தனம் என்ன மாத்துசு..கட் அடிக்கிறது அப்படின்ற வார்த்தையே தெரியாத எனக்கு அதுக்கப்புறம் அது ஒரு வாடிக்கயாவே ஆயுடுச்சு...இத்தனைக்கும் அறிவாளிங்க படிக்கிற க்ரூப்பான கெமிஸ்ட்ரி தான் எனக்கு கெடைச்சது...( எப்படி தான் தெரில... செரி விடுங்க...) இதுக்கப்புறம் நம்ம லைப் மாறிச்சு பாருங்க.....மொதல்ல நாம யாருன்னு ஊருக்கு காட்டணும்னு சொல்லி நாட்டமா சரத்குமார் மாதிரி ஊர்ல இருக்குற அத்தன வம்பு வழக்கு, பஞ்சாயத்து எல்லாம் நம்ம தலைல தான் இருக்குற மாதிரி எல்லாத்துக்கும் முன்னாடி ஓட வேண்டியது..இத பண்ணான்....... அவன் அத பண்ணான் டெய்லி ஒருத்தன் எங்கப்பாகிட்ட போட்டு கொடுப்பானுங்க ( பரதேசி பசங்க )...இதுக்கு நடுவுல தண்ணி வேற....அதுக்கும் ஒரு 2,3 தடவ வீட்லயே மாட்டி இப்போ என்ன....பெரிய தப்பு பண்ணிட்டான கேட்டு..எங்கப்பா என்ன வெளில தள்ளி....யம்மா யம்மா அதெல்லாம் ஒரு தனி எபிசோடாவே போடலாம்....

அடுத்த segment காலேஜ் வாழ்க்கைல எல்லார்க்கும் வரது தான். கருமம் புடிச்ச லவ்..நம்ம ஏரியாவுல இருக்குற ஒரு பொண்ணு தான்....தெலுங்கு பிரஹமான பொண்ணு ( இத சொல்றதுக்கு எனக்கே கொஞ்சம் வெக்கமா தான் இருக்கு என்ன பண்றது ) 2001 கடைசில ஆரம்பிச்சு கிட்ட தட்ட 2006 ல முடிஞ்சுது...நம்மளோட காதல் காவியம்...கிட்ட தட்ட 5 வருஷம் நல்ல தான் போச்சு என்ன நமக்கு தான் அத எப்படி தொடர்றதுன்னு தெரியாம சொதப்பிட்டேன்...( நாம கொஞ்சம் தென்ன மரம் மாதிரி இருக்குறதா பசங்க சொல்வானுங்க இதே Height Factor வெச்சு தான் அந்த பொன்னையே மடக்கினேன் ).நம்ம வாழ்க்கையே மாறினதுக்கு கொஞ்சம் காரணம் இந்த பொண்ணுன்னு சொல்லலாம் ( லாம்....லாம்...) இல்லாட்டி எதாவது ஒரு MLA கிட்டயோ இல்ல எதாவது ஒரு Gangster கிட்டயோ அடியாளா சேந்து வாழ்க்கைல settle ஆகி இருப்பேன்..( என்ன பண்றது விதி யார விட்டுது ) எங்கப்பா என்ன Biology Group ல சேக்கும் போதே ஏதோ பிளான் பண்ணிருக்காரு போல...அதெல்லாம் யாருக்கும் தெரியும் அப்போ..அவர் ரூட்ல என்ன கூட்டிட்டு போக பாத்தாரு...நடக்கலையே...நடக்க விடலியே... 3 வருஷ காலேஜ் வாழ்கை முடிஞ்சு ( நல்லா நோட் பண்ணுங்க காலேஜ் வாழ்கை தான் முடிஞ்சுது...ஆனா படிப்பு முடியல..... :-) ) நல்லா ஒரு வருஷம் வீட்லயே ரெஸ்ட் எடுத்தேன்..அப்போ சினிமாவுல டைரக்ட் பணன்னும்னு ஒரு 8 மாசம் அலைஞ்சு திரிஞ்சேன் செட் ஆகல..அதுக்கப்புறம் என்ன தோணுச்சோ தெரில திடிர்னு Medical Transcription படிச்சேன் அதுக்கப்புறம்...நம்மாளு திருவான்மியூர்ல ஒரு கம்பெனில வேல பாத்தா..எங்க சொந்தகாரன் ஒருத்தன புடிச்சு Nittany Decisions ல சேந்தேன்....நம்ம ஆளு அங்க இருந்து கோடம்பாக்கத்துக்கு தாவினா......நாமளும் ஒடனே வேலைக்கு சேந்த பத்தே நாள்ல அங்க இருந்து ( குரங்கு மாதிரி ) தாவி திருப்பியும் என் பிரெண்டு மூலமா அங்க ஒரு Medical Transcription கம்பெனில சேந்தேன்.. ஒரே வாரத்துல சண்ட.....கோடம்பாகதுக்கே வேல தேடி ஒரு Share Market Company ல வேல அங்க ஒரு 15 நாள்...நமக்கு இது இன்றேஸ்ட் வே இல்லையேன்னு 15 நாள்ல வெளில வந்தாச்சு...( நமக்கும் கோடம்பாக்கத்துக்கும் அப்படி ஒரு ராசி, அப்பவாவது உஷாராகி அந்த பொண்ணு பின்னாடி சுத்துரத நிறுத்தி இருக்கலாம் )அப்புறம் அடையார்ல ஒரு மெடிக்கல் கம்பெனில Sales Rep வேல...இங்க ஒரு சாதனை செஞ்சேன் என்னன்னா ஒரு மாசம் இருந்தேன் இங்க..அங்கயும் வேலைய விட்டுட்டு ..சும்மா இருந்து.....நம்மாளு கிட்டயும் அப்பா கிட்டயும் திட்டு வாங்கி...கடைசியா அண்ணா சாலைல CAMS நு ஒரு ICICI Mutual Fund back office ல தெனமும் 90 ரூபாய் சம்பளத்துல...ஒரு பெரிய உத்தியோகம் கெடைச்சுது .....போகும் போதே.....இங்கயாவது எந்த சண்டையும் போடா கூடாது டா சாமின்னு....சேர்ந்தேன்..90 -- 100 ஆச்சு....அங்கயும் நமக்கு நிலை கொள்ளவில்லை தாவுரதிலேயே இருந்துது மனசு...இதுக்கு நடுவுல ஒரு, ஒரு வருஷம் நாம பெரிய பு**** மாதிரி Key போர்டு வேற கத்துகிட்டேன்..( ஆக மொத்தத்துல எல்லா விஷயத்தையும் சொதப்புரத தவிர நாம உருப்படியா எதுவுமே செய்யல அதான்..Morale இந்த கதைக்கு..) நம்மளோட காட்டு மிராண்டி தனத்த தாங்கின,தாங்கிகிட்டு இருக்க, தாங்க போற என்னோட அம்மா....உதவாக்கர தனத்த பொறுத்துகிட்ட அப்பா....இதையெல்லாம் தாண்டி நம்மள organize பண்ண என்னோட கேர்ள் பிரெண்ட் இபபடி...சமுதாய சிக்கல்ல இருந்ததால உடனே நான் எந்த முடிவு எடுக்கல..போச்சு ஒரு 2 வருஷம் அங்க...2005 ல இருந்து 2007 வரைக்கும்...நடுவுல லவ்வும் புட்டுகிச்சு ( காரனத்த அலசி ஆராய வேண்டாமே ) ...

இப்படியே ஒன்னுத்துக்கும் யாருக்கும் உதவாம உதவக்கறையா இருந்த என்ன ஓரளவு இப்போ இருக்குற மாதிரி கொஞ்சம் சுமாரான ஆளா மாத்தினது 4 விஷயம்..முதல் விஷயம் அம்மா கண்டிப்பா....என்னெல்லாம் குழந்தையா இருக்கும்போதே கள்ளி பால் ஊத்தி கொன்னுருக்கணும்...(எப்படியோ எஸ்கேப் ஆகி இவ்ளோ அழிச்சாட்டியம் பண்ணி...ரைட் விடுங்க..) 2. கேர்ள் பிரெண்ட் அவ இல்லன கண்டிப்பா படிப்ப முடிச்சிருக்க மாட்டேன்.....இன்னும் மோசமா போயிருக்க வாய்ப்பும் இருக்கு....அடுத்தது என்ன மாத்தினது கேக்க சிரிப்பா கூட இருக்கலாம்...ஆனா உண்மை அதான்.....சினிமா & புத்தகம்....இது ரெண்டும் தான் தான் கற்கால மனிதனா இருந்த என்ன தற்கால manidhanaa ஆக்குச்சு...இன்னைக்கு இவ்ளோ சித்தாந்தம், வேதாந்தம் பேசுறேன்ன அதுக்கு காரணம் புக்ஸ் தான்....

அந்த கம்பெனில இருந்து மாறி அப்புறம் sify ல ஒரு ரெண்டரை வருஷம் குப்ப கொட்டி.....இப்போ ஹைதராபாத் வரைக்கும் எப்படியோ தெரியாம வந்துட்டேன்..நானெல்லாம் குரோம்பேட்டைய தாண்டுவனநெல்லாம் எனக்கு சந்தேகம் இருந்துது.....( அம்மாடி தாண்டிட்டேன் )....இன்னும் இந்த Dressing விஷயத்துல நான் கொஞ்சம் பின் தங்கி இருகேனொன்னு ஒரு டவுட் நமக்கு இப்போவும் இருக்கு..வேலைக்கு போற நேரம் தவிர...மத்த நேரத்துல நான் பண்ற டிரெஸ்ஸ பாத்துட்டு நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் என்னடா என்னமோ சினிமால வர அடியாள் மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர டீசெண்டாவே இல்லைம்பாங்க ...என்ன பண்ண நம்ம மொகறகட்டை அப்படி.....

லவ்வு புட்டுகிட்டப்புரம் சந்தோஷமா சிரிச்சிகிட்டே அடுத்த நாள் நான் வேலைக்கு போயிருக்கேன்...வேற பொண்ண பாக்க்கலாம்ன்ற சந்தோஷத்தோட... வாழ்க்கைல நான் செம அடி வாங்கினப்பலாம் நான் அழுதது இல்ல....ஆனா எங்கம்மாவ விட்டு வந்தப்புறம் தொடர்ச்சியா....20 நாள் அழுதுட்டு இருந்தேன்...நமக்கு அழ தெரியும்ன்றதே எனக்கு அப்போ தான் தெரியும்... ஊற விட்டு வந்ததுக்கப்புறம் எசகு பிசகான இங்கிலீஷ், எக்கு தப்பான ஹிந்தி, தட்டு தடுமாறி புரிஞ்சிக்கிற தெலுங்கு இதையெல்லாம் வெச்சு காலத்த ஓட்டிட்டு இருக்கேன்....இப்போதைக்கு பணம் சம்பாரிக்குரத தவிர வேற எதையும் சாதிச்சதா எனக்கு நினைவு வரல...அதையும் மீறி ஏன் இத எழுதினேன்ன...நாளபின்ன நெறைய பணம் சம்பாரிச்சு...என்ன மாதிரியே ஒருத்தன கூட்டிட்டு வந்து இவனுக்கு அட்வைஸ் பண்ணுங்க நம்ம கிட்ட சொல்லும்போது இத நான் நெனைக்கணும்,படிக்கணும் அதுக்கு தான்...தவிர நம்ம ஊர்ல படிச்சிருக்கானா,நல்லவனாநேல்லாம் பாக்குறதில்ல...காசு வெச்சுருக்கானா அப்போ அவன் நல்லவன் தான், அவன் யாருக்கு வேணாலும் அட்வைஸ் பண்ணலாம்னு நிலைமை வந்துருச்சுல்ல....அதான்...இந்த மட்டிலும் ஏதோ ஒரு முட்டாளின் கதைன்னு பெருமையா போடற மாதிரியாவது இருக்கேன்..( இல்லாட்டி Confessions of an Alcoholic....எழுத வேண்டி இருந்துருக்கும்....செரி அடுத்து நம்ம முன்னேற்றத்துக்கு பின்னாடி இருந்தவங்கள பத்தின அடுத்த ப்ளாக் ல பாப்போம்...,விஷாலோட தீராத விளையாட்டு பிள்ளை ரிலீஸ் ஆயுடாச்சாமே அதையும் சிரிசிட்டே பாப்போம் )...

ஜெய் ஹிந்த்...