November 19, 2010

இரண்டாவது திருமணமும் மூன்றாவது தேனிலவும்..

டைட்டில் பாத்துட்டு ஏதோ குத்து மதிப்பான கதைன்னு நினைச்சுக்க வேணாம்..பிறருக்கு இன்பத்தை கொடுத்து தாங்கள் துன்பத்தில் இருக்கிறோம்னு சொல்லி, எப்படி சூப்பரான இன்பத்தை தேடி போற சில சினிமாக்காரங்கள பத்தி தான் இப்போ பாக்க போறோம்..

தான் கஷ்ட படும் போது கூட கஷ்டப்பட்டு, கூடவே கண்ணீர் சிந்தி, வீட்ட எதிர்த்து உங்க பின்னாடி வந்து, கேவலமா சிரிக்கிறவங்கள சமாளிச்சு உங்களையும் மேய்ந்டைன் பண்ணி, நீங்களும் ஒரு பெரிய எடத்துக்கு வருவீங்க அப்படின்ற நம்பிக்கையோட உங்களோட வாழ ஆரம்பிச்சு பொண்ணுங்களுக்கு நம்ம பிரகாஷ் ராஜ், பிரபு தேவா, பேரரசு இவங்க மூணு பேரும்திருப்பி என்ன கைம்மாறு செஞ்சுருக்காங்கன்னு பாக்கலாம்...

முதல்ல பிரபு தேவா: பெரிய டான்ஸ் மாஸ்டருக்கு பையனாகவும், இன்னொரு பெரிய டான்ஸ் மாஸ்டருக்கு தம்பியாவும் இருந்த பிரபு தேவா 1996 ல Mr.Romeo படத்துல நடிசிருக்கும்போது கூட டான்ஸ் ஆடின ரமலத் பொண்ண லவ் பண்ணி கலைபுலி தாணு, பி. வாசு இவங்க உதவியோட உங்க டான்ஸ் உதவியாளர்கள் ராபின், ஜானி, குமார் இவங்க கையெழுத்தோட கல்ய்ணாம பண்ணீங்க..ஆனா இப்போ கோர்ட்ல எங்க திருமனத்த நாங்க சட்டப்படி பதிவு பன்னால, அதனால இது செல்லாதுன்னு அறிவிக்கனும்னு சொல்லிருக்கீங்க...மூணு கொழந்த பொறந்து, அதுல ஒன்னு உங்க வில்லு படத்த பாத்து இறந்து போனதுக்கப்புறம் உங்களுக்கு நயன்தாரா மேல லவ் வந்துருக்கு..அதுவும் நம்ம நயன்தாரா அக்கா இருக்காங்களே கண்ணகிக்கு கசின் சிஸ்டர் மாதிரி நடந்துகிட்டாங்க சிம்பு விவரம் நடந்தப்போ, ஆனா இப்போ அது எப்படி 3 குழந்தைக்கு அப்பாவ சைட் அடிக்கிறோமே அவன் பொண்டாட்டி புள்ளைங்க என்னாகும்னு கவலையே இல்லையா உங்களுக்கு, விபச்சாரிய விட கேவலமா போச்சு உங்க நெலம, இந்த லட்ச்சனத்துல உணகளுக்கு சிறந்த ஜோடி விருது கொடுத்துருக்காரு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் அவரோட பத்திரிகை south scope. வெளங்கிடும் பத்திரிகை....

அடுத்து பிரகாஷ் ராஜ் பிரபு தேவா எவ்வளோ தேவலாம் எல்லா ரணகலதுக்கு நடுவுலயும் கிளு கிளுப்ப அவருக்கு நயன்தாரா அப்படின்ற சூப்பர் பிகர் கூட இருக்குது...ஆனா பிரகாஷ் புடிச்சது...தூ..தன்னோட 6 வயசு பய்யன் ஆதித்யா செத்து போன thunbaththinaala இவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணி தேத்திகிட்டாறு. நல்லது...பிரகாஷ் ராஜ் , பிரகாஷ் ராயா இருக்கும் போதே `லவ்` பண்ணி கல்யாணம் கட்டிகிட்டாராம்...இதுக்கு பேரு லவ் வேற..கூடவே இருந்து எனக்கு டைம் இல்ல நாடோடிகள் கடைசி சீன பாத்து therinjokkanga ..இத பாது பொறுத்துக்கலாம் விளக்கம்னு சொல்லி பிரகாஷ் ராஜ் பேசுறத தான் எங்களால பொறுத்துக்க முடில...செல்லம் நீங்க பண்றீங்களே நடிப்புன்னு ஒன்னு அத விட ரொம்ப கேவலமா இருக்கு செல்லம்..

அடுத்து பேரரசு இவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டதுக்கான காரனத்த சொன்னாரு பாருங்க...சத்தியமா அவரு டைரக்ட் பண்ண அத்தன படங்களையும் பாத்துடலாம் போலருக்கு, aந்த காரணம் அத விட கேவலமா இருந்துது. பிரசவத்துக்கு போன இவரு பொண்டாட்டி திரும்பி வரலையாம், அப்போன்னு பாத்து இவருக்கு Typhoid வந்துருச்சாம் அப்போ கூடவே இருந்து கவனிசாங்கலாம் என்னயா உன் படம் Flash Back மாதிரியே கேவலமா இருக்கு...
2 குழந்தைக்கு அப்பவாயிட்ட பிறகு மனைவிய சொந்த ஊர்ல விட்டுட்டு இங்க இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி குழந்தையும் ஆகி...பத்திரிகை மூலமா எனக்கு ரெண்டாவது கல்யாணம் ஆயுருசுன்னு பொண்டாட்டிக்கு சொல்றது..புது trend தான்யா....

( நான் இன்னோன்னும்சொல்ல விரும்புறேன்..மேல சொன்ன 4 பேரும் நம்ம இளையதளபதி விஜய்க்கு மிக நெருங்கிய நண்பர்கள்....)

ஒரு படம் நடிச்சிட்டு அடுத்த ரஜினி நான் தான் அப்படின்னு சொல்ற நடிகர்களுக்கும், ஒரு படம் தெரியா தனமா ஓடிட்டா அடுத்து ரஜினிக்கு ஒரு கத வெச்சுருக்கேன் சொல்ற டிறேக்டருக்கும் ஒன்னு சொல்ல விரும்புறேன்...ரஜினி சூப்பர் ஸ்டாரா மட்டும் பாக்காம ஒரு மனிஷன பாருங்க...எவ்ளோ அமைதி, தன்னடக்கம், தனி மனித ஒழுக்கம், பேரையும் புகழையும் தலைக்கு ஏத்தாமஎப்படி இருக்குறதுன்னு மொதல்ல கத்துகோங்க அப்புறமா நீங்க சூப்பர் ஸ்டார் ஆகலாம், அவர டைரக்ட் பண்ணலாம்...

September 4, 2010

போதை ஹைதராபாதும் பேதை த்ரிஷாவும்...

நாம முன்னாடியே சொன்ன மாதிரி நாம ஹைதராபாத் வந்த நேரம் முதலைமச்சர் ரோசய்யால இருந்து மூலைல இருக்குற ராசையா வரைக்கும் ஒரே பிரெச்சன மயம்தான்....

இப்போ புதுசா சிக்கல்ல சிக்கி சிங்கி அடிக்கிறவங்க நடிகருங்க..நடிகர் ரவி தேஜான்னு இங்க ஒருத்தர் இருக்காரு..பெரிய ஹீரோ...அவருக்கு 2 தம்பிங்க...அவனுங்க தான் மாட்டி இருக்காங்க...அவனுங்க ஆம்பளைங்க..நமக்கு அவனுங்க எப்படி போன என்ன...இதுல முக்கியாமான நமக்கு ரொம்ப தெரிஞ்சவங்க ஒருத்தங்க பேரு சிக்கி இருக்கு...அவங்க யாருன்னா...கனவு கன்னி த்ரிஷா.....
இந்த கேசுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம த்ரிஷா எப்படி முன்னுக்கு வந்தாங்கன்னு பாப்போம்...

இவங்க பொறந்தது மே மாசம் நாலாம் தேதின்றதாலையோ என்னமோ...கத்திரி வெயிலோட ஆரம்பமான்னு தெரில லூசு தனமா நெறைய வேலைகள் செஞ்சு இருக்காங்க...ஸ்கூல் படிச்சது சர்ச் பார்க், காலேஜ் எத்திராஜ், இப்படி அவங்க சின்ன வயசுல இருந்தே ஏழைகளோட ஒன்னுக்கு ஒண்ணா பழகி படிக்குற வாய்ப்பு அவங்களுக்கு கெடைச்சிருக்கு...அப்புறம் மாடலிங் எல்லாம் பண்ணி Miss Chennai ரேஞ்சுகேல்லாம் வளந்துருக்காங்க..லேசா லேசா, மௌனம் பேசியதே மாதிரி படத்துல நடிச்சாலும் கல்யாணம் கட்டிட்டு ஓடலாமா இல்ல ஓடிட்டு இருக்கும்போதே கல்யாணம் கட்டிக்கலாமா அப்படின்ற கருத்தாழமிக்க பாட்டு மூலமா இந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு பரிச்சயம் ஆனாங்க...அப்புறம் நம்ம இளைய தலைவலியோட கில்லி படத்தின் மூலமா `உச்சத்துக்கு` போனாங்க.. அப்புறம் தெலுங்கு, ஹிந்தின்னு ஒரு ரவுண்டு வராங்க.
..

இதுக்கு நடுவுல அவங்களோட வீடியோ ஒன்னு வெளில வந்து வெற்றிகரமா ஒடிச்சு, அப்புறம் ECR ரோட்ல நண்பர்களோட குடிச்சிட்டு கும்மாளம் அடிச்சாங்க, பார்க் ஹோட்டல்ல பராக்கு பாத்தாங்கன்னு எதாவது ஒரு நியூஸ் வந்துண்டே இருக்கும்...நாமளும் அத படிச்சுட்டு சந்தோஷபட்டுடு இந்த பத்திரிகை காரங்களே இப்படி தான் எதாவது நடிகைன்னா வேணும்னே நெறைய எழுதுவாங்கன்னு நெனைச்சிட்டு இருந்தேன்.....ஆனா என்னை அறியாமை இருள் எந்த அளவுக்கு சூழ்ந்து இருந்துது என் முந்தைய கம்பெனி sify எனக்கு புரிய வெச்சுது..( இது இல்லாம அவங்க எனக்கு நெறைய புரிய வெச்சாங்க அது வேற விஷயம் ) chennailive.com ஒரு வீடியோ சைட் ஓபன் பண்ண த்ரிஷா, விக்ரம், மாதவன் எல்லாரும் வந்தாங்க...விசேஷமெல்லாம் முடிஞ்சு பார்ட்டின்னு ஒன்னு ஆரம்பிச்சுது அப்போ நான் பார்த்த காட்சி....கண்கொள்ளா காட்சி....காண கிடைக்காத காட்சி......நான் பிறவி எடுத்த பயனை எனக்கு புரிய,அறிய வைத்த காட்சி...சிகரெட்ட கைல எடுத்து ரஜினி மாதிரி சும்மா ஸ்டைலா வாய்குள்ள போட்டு சும்மா சுருள் சுருளா புக வருது ஒருத்தங்க வாய்க்குள்ள இருந்து...இந்த வாய்க்குரிய சிகாமநியோட முகத்த பாக்கலாம்னு பாத்தா அது நம்ம த்ரிஷா அக்கா...அது வரைக்கும் த்ரிஷா விசிரியா இருந்த எனக்கு இந்த காட்சிய பாத்தா உடனே அந்த ac குளிர்லயும் விசிறி எடுத்து விசிறி விடற அளவுக்கு வேர்த்து போச்சு..இத நான் தப்பா சொல்லல..அது வரைக்கும் பொண்ணுங்க நா இப்படி தான் இருப்பாங்க அப்படின்னு கனவுலயும் நேர்லயும் பாத்துட்டு திடிர்னு எனக்கு இந்த காட்சிய பாக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துது...த்ரிஷா ஒருத்தருக்காகவே something something எத்தன தடவ பாத்ருப்பேன்னு கணக்கு பண்ண முடியாது...
அவங்க தம்மடிச்சு பார்த்த அதிர்ச்சில இருந்து வெளில வரதுக்குள்ள...என் தம்பி வேல பாக்குற பார்க் ஹோட்டலுக்கு போனேன்....அங்க த்ரிஷா அக்கா விஷால் அண்ணன், நம்ம சின்ன தளபதி பரத் இன்னும் சில மூஞ்சிங்க தண்ணியடிச்சுட்டு ரோட்ல ஒருத்தன் TASMAC சரக்க புல்லா குடிச்சிட்டு எவ்ளோ அலம்பல் பண்ணுவானோ அத விட ஜாஸ்தியா இவங்க பண்ணிட்டு இருந்தாங்க...

அதுக்கெல்லாம் பயப்படாத த்ரிஷா இப்போ ஏன் இதுக்கும் மட்டும் ஏன் மறுப்பு அறிவிச்சுருக்காங்க...ஏன்னா தன்னியடிச்சாலோ , தம்மடிச்சலோ பேர் மட்டும் தான் பனால் ஆகும். அத அடுத்த படத்துல கவர்ச்சியா நடிச்சோ இல்ல CANCER Hospital அங்க இருக்குற பாதிக்க பட்ட குழந்தைகளோட நின்னு போட்டோ எடுத்தாலோ, இல்ல ரோட்ல கிடந்த நாய் குட்டிய எடுத்து வந்த வளக்குறேன் அப்படின்னு பேட்டி கொடுத்தாலோ மக்கள் ஒடனே த்ரிஷாவுக்கு தன்னியடிக்குரதுன்னாலே என்னனு தெரியாதுன்னு கற்பூரம் அடிச்சு சத்யம் பண்ணுவாங்க...ஆனா கஞ்சா கேஸ்ல மாட்டின இமேஜ் ஸ்பாயில் ஆகிறது இல்லாம...NON BAILABLE கேஸ் போட்டு 7 வருஷம் உள்ள தள்ளிருவான்...அதுக்கு முன்னாடி ஒரு பேட்டிய வெளில தள்ளி அண்டர் கிரௌண்ட்ல கொஞ்சம் காச உள்ள தள்ளி..மேட்டர முடிச்சிடலாம்...நம்ம ஊர்ல தான் அதுக்கு நெறைய வழி வகைகள் இருக்கே... இருந்தாலும் நீங்க புரட்சி தலைவியோட முன்னாள் வளர்ப்பு மகன் கிட்டயும், புரட்சி தலைவியோட உடன் பிரவ சகோதரியோட கணவர் நடராஜன் இருக்காரே அவரோட தோழி செரீனா கிட்டயும் இத பத்தி விசாரிச்சு Process என்னனு தெரிஞ்சு வெச்சிகோங்க..ஏன்னா இந்த விஷயத்துல உங்கள விட அவங்களுக்கு ரொம்ப அனுபவம் ஜாஸ்தி..

உலக அங்கீகாரம் கெடைக்கணும்னு தான் ஹிந்தி படத்துல நடிக்கிறேன்னு பேட்டி எல்லாம் கொடுத்து மக்களுக்கு நீங்க ஹிந்தில நடிக்குரதுக்கான காரனத்த சொன்னீங்க....கேக்கவே சந்தோஷமா இருந்துது...கமல், ரஜினி, ரஹ்மான், ஷங்கர், மணிரத்னம் இப்படி இந்த வகைல அங்கீகாரம் வாங்கி கொடுத்தீங்கன்னா சந்தோஷம்....இப்போ தெலுங்கு படத்துல நடிக்கிற மாதிரி நடிச்சீங்கன்னா.....நீங்க நெனைக்குற அங்கீகாரம் சீக்கிராமவே கெடைக்கும் ஆனா வேற விஷயத்துல.....

உங்கள நேர்மையா இருங்க , கேவலமான பழக்கத்துக்கு அடிமை ஆகாதீகன்னு அப்படீனெல்லாம் நான் உங்களுக்கு சொல்ல போறதுல்ல ஏன்னா நானே ஒரு முடிச்சவுக்கி ( அப்பா நம்ம நேம் வந்துடுச்சு )...ஆனா குறைஞ்ச பட்சம் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யும்போது மாட்டிக்காம செய்ங்க..இது கூட செய்ய தெரிலன்னா நீங்கெல்லாம் என்ன Celebrity..ஏதோ எங்கள மாதிரி சாதாரண ஆளுங்க மாட்னா பாரவல்ல எங்களால யாருக்கும் எந்த லாபமும் இல்ல...ஆனா நீங்கெல்லாம் அப்படியா..சமுதயத்த தாங்கி நிக்குற இரும்பு தூண்கள் அதாவது VVIP நீங்க மாட்டலாமா....பாத்து செய்ங்க..
ஜெய் ஹிந்த்..

June 5, 2010

இந்நாள் நடிகனுக்கு முன்னாள் ரசிகனின் கடிதம்....

வணக்கம் Dr.விஜய் அவர்களே...

உங்களுடைய சுறா திரைப்படத்தை பார்த்து தற்கொலைக்கு முயன்ற மக்களில் நானும் ஒருவன்..( நல்ல வேலை download செய்து பார்த்தால் பணம் மிச்சம் ). நீங்கள் சொல்வது போல உங்களுடைய கோடான கோடி ரசிகர்கள் இத்திரைக்காவியத்தை முதல் நாள் பார்க்கும் போது அவர்களுடைய மனநிலை எப்படி இருந்ததோ தெரியவில்லை...ஆனால் நாங்கள் சராசரியாகவே இருந்தோம்..ஏனென்றால் உங்களிடம் நாங்கள் எதையும் எதிர் பார்த்து வரவில்லை...உங்கள் படத்தின் கதையையும் சேர்த்து...

முன்னாள் ரசிகன் என போட்டதற்கு மன்னியுங்கள்...முன்னொரு காலத்தில்..உங்களுடைய ஆளுயர போஸ்டரை எங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒட்டி மகிழ்ந்து..காலையில் உங்கள் திருமுகத்தை முதலில் பார்த்து புல்லரித்து போன காலங்கள் உண்டு...என்று வரை அந்த பூரிப்பு நீடித்தது....தங்களுடைய `நெஞ்சினிலே` என்ற கலை காவியத்தை பார்க்கும் வரை...அன்று கிழித்தவன் தான்......இன்று வரை கிழித்து கொண்டே இருக்கிறேன்....நீங்களும் மாறிய பாடில்லை...

பொதுவாக கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் அடித்து துவைத்த வில்லன்கள் எத்தனை பேர்கள் இருப்பார்கள்..அவர்களே திருந்தி விட்டார்கள்....நீங்கள் இன்னும் திருந்த வில்லை...உங்கள் சமகால நடிகர்களை கொஞ்சம் உற்று பாருங்கள்.....
1. விக்ரம்....இவரை பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை....சேது,பிதாமகன்,காசி,ஜெமினி,தூள்,சாமி,அந்நியன் ஏன் தோல்வியே அடைந்திருந்தாலும் பரவாஇல்லை கந்தசாமி.

2. சூர்யா..உங்களுடன் நேருக்கு நேர் ,பிரெண்ட்ஸ் படத்தில் நடித்து உங்களுடைய நடிப்பிற்கும், நடனத்திற்கும் ஈடுக்கொடுக்க முடியாமல் திணறுகிறார் என்று விமரிசனம் செய்தார்கள்....அனால் இன்று...நந்தா, பிதாமகன்,காக்க காக்க, கஜினி, அயன் என்று அவர் தொட்ட உயரங்கள்....?

அவர்கள் நடித்த கடைசி பத்து படங்களின் போட்டோ ஆல்பமும், உங்களுடைய கடைசி பத்து படத்தின் போட்டோ ஆல்பத்தையும் எடுத்து பார்த்தால் உங்களுக்கே புரியும்....கண்டிப்பாக அவர்கள் அவர்களாகவே இருக்க மாட்டார்கள்.....அவர்களுடைய புகைபடத்தை பார்த்து என்ன படம் என்று சொல்லுமளவுக்கு அவர்கள் போட்ட வேடங்கள் அனைத்தும் பிரபலம்...ஆனால் உங்கள் ஆல்பத்தை பார்த்தால் உங்களுக்கே குழப்பம் வரும்...இது எந்த படம் என்று...குறைந்த பட்சம் முடியை கலைத்து விட்டுருந்தால் கூட தெரியும்...அதை கூட உங்களால் செய்ய முடியவில்லை...

அவ்வளவு ஏன்....உங்களுடைய எதிரி என்று நீங்கள் அழிக்க நினைத்த அஜித்....உங்களை போல் நடனத்தில்,தமிழ் வசன உச்சரிப்பில்,சண்டை காட்சியில்,நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதில்.....என்று திரைப்படத்திற்கு தேவையான அத்தனை முக்கியமான அத்தனை அம்சத்திலும் உங்களுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியே இருக்கிறார்..இப்பொழுது அவருக்கு கூடும் கூட்டத்தை நீங்கள் பார்கிறீர்கள் தானே....வாலி, வில்லன், முகவரி, சிடிசன், வரலாறு, கிரீடம், பில்லா இவற்றை ஒன்றோடொன்று நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்..அவர் பேசும் வசனங்களை வைத்து அவரை வம்பிக்கிழுப்பது..வயிற்றில் துணியை கட்டி கொண்டு தொப்பை இருப்பது போல் காட்சி தருவது...இதெல்லாம் படித்த ஆறறிவுள்ள, இயல்பான மனிதர்கள் செய்யும் செயலா, அல்லது ஏர்வாடியில் இருப்பவர்கள் செய்ய கூடியதா.. இப்படி நடந்து கொண்டால் படித்த கூட்டம் எந்த பக்கம் சாயும்...

இதெல்லாம் போதாது என்று உங்களுக்கு அரசியல் ஆசை வேறு..முன்பே எழுதி இருப்பது போல்..ராகுல் காந்தியை சந்தித்தது..உங்களுகென்று ரசிகர் மன்ற கொடி அதில் ` உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும்` என்று உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் வாசகம்,அவ்வளவு ஏன் உங்களுடைய தற்போதய காவியம்..சுறாவில் இலங்கை தமிழர், தமிழக மீனவர் பிரெச்சனை என்று உங்கள் மனம் போன போக்கில் வசனம் வேறு...நம்பிக்கையோடு இருங்கள் நல்ல காலம் வரும் என்று...

இப்போது ஹைதராபாத் வந்திருப்பதால்...நீங்கள் இங்கிருக்கும் மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் இவர்களிடமிருந்து நீங்கள் என்ன சுட்டு எடுத்து இருக்குறீர்கள் என்பது தெரிகிறது..இங்கிருப்பவர்கள் தமிழகத்தை பற்றி எப்படி மோசமாக பேசினாலும் பதிலடி கொடுக்க என்னால் முடிகிறது.....ஆனால் அவர்கள் உங்கள் பெயரை உச்சரித்த அடுத்த கணம்...நான் என் தோல்வியை ஒப்பு கொள்ள வேண்டிருக்கிறது...

உங்களுக்கு ஒரே வேண்டுகோள்..உங்களை நாங்கள் கார்கில் முனைக்கு சென்று தீவிரவாதிகளை அழிக்க சொல்லவில்லை, மரத்திற்கு மரம் தாவாமல் ஒரு படமாவது நடியுங்கள்...ஊரிலிருந்து கிளம்பி வந்து நீங்கள் சென்னையை அமைதி பூங்கவாகியது போதும்...எங்கள் மானத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் உங்களிடம் முறையிடவில்லை....உங்கள் மானம் காற்றில் பறந்து கொடிருக்கிறது...அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள்....

உங்களுடைய வேட்டைக்காரன், சுறா போஸ்டரில் அனுஷ்க்காவையும், தமன்னவாயும் வைத்து அடையாளம் சொல்லும், வேறு எந்த வித்யாசமும் இல்லாத இப்போதைய நிலைமையை மாற்றி உங்களை பார்த்து இது முந்தைய படத்திற்கு மாறுபட்ட படம் என்று சொல்ல வைக்கும் நிலைமையை வரவைக்க பாருங்கள்.....இந்த மாற்றத்திற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....

February 12, 2010

ஒரு முட்டாளின் கதை...

வணக்கம்.

இக்கட்டுரையில் வரும் அணைத்து சம்பவங்களும், கதா பாத்திரங்களும்...முற்றிலும் உண்மையே....

எல்லாரையும் பத்தி எழுதறத விட நம்மள பத்தியே எழுதினா என்னனு நெனைச்சு இது வரைக்கும் நாம " வாழ்க்கைல என்ன சாதிசிருக்கோம்" அப்படின்றத எழுதலாம்னு ஒரு நப்பாசை தான்...இதெல்லாம் எழுதுறதுக்கு நீ என்ன அப்துல் கலாமான்னு கேக்காதீங்க...அதான் சொல்லிடேனே..நப்பாசைன்னு....சரி நாம என்னெல்லாம் "சாதிச்சிருகோம்னு"....பாப்போம்..நம்ம போட்டோவ போடலாம்னு நெனைச்சேன்..அத பாத்துட்டு இவன் மூஞ்சி மாதிரி கதையும் இருக்கும்னு நெனைச்சு ( அப்படி தான் இருக்கும் அது வேற விஷயம்) படிக்காம போய்ட்டா...

சரி மேட்டருக்கு வருவோம்.....இத எழுதுற இதே பிப்ரவரி மாசம் தான் நான் பொறந்தது...பிப்ரவரி மாச கடைசில ஒரு Sunday மதியம் சரியாய் 12 .05 க்கு உச்சி வெயில்ல ஒரு பைத்தியக்காரனா ஆகுறதுக்கான கரெக்ட்டான நேரத்துல பொறந்தேன்..நம்மளோட குழந்தை பருவம் தான் இருக்குறதிலேயே ரொம்ப அமைதியானது...எந்த ஒரு சேஷ்டையும் கிடையாது ...ரொம்ப அமைதியா இருந்தேன்னு சொன்னா அது இந்த பருவம் இது மட்டும் தான் எனக்கு...ரொம்பவே அமைதி அது முடிஞ்சு இந்த ஸ்கூல் படிக்கிற காலம்..( உண்மையா வேற சொல்லனுமா..) அதே அமைதி இங்கயும் தொடர்ந்துச்சு படிப்புலையும் சேர்த்து...ஒன்னும் பெரிய 100 மார்க் எடுக்குற அளவுக்கு புத்திசாலி கெடயாது பாஸ் பண்ணா போதும்னு நெனைக்குற மக்கு பிளாஸ்திரி தான் நான்....அப்படியே தட்டு தடுமாறி..திக்கி தெணறி..பத்தாவதுல எனக்கே தெரியாம மொத்தமா 72% எடுத்தேன் ( இப்போ வரைக்கும் ஆச்சர்யம் தான்) வழக்கம் போல +2 ல திருப்பியும் எனக்குள்ள இருந்த அந்நியன் ( அதான் மக்கு பிளாஸ்திரி ) வந்துட்டான் இந்த வாட்டி 65% தான் அதுக்கே நான் மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தா எப்படி சந்தோஷ படுவான்களோ ..அத விட ஜாஸ்தியா பீல் பண்ணேன்..( தூ...) இதுக்கு நடுவுல கிரிக்கெட் வேற, ஒரு நாளைக்கு 16 மணிநேரம் படிச்சவன பாத்துருக்கேன்..ஆனா கிரிக்கெட் விளையாடி பாத்து இருக்கீங்களா ( இபபடி தான் எங்கப்பா எல்லார்கிட்டயும் என்ன பத்தி புகழ்வாறு....) என்ன ஒரு பேரு பெற்றேன்..ஸ்கூல் வாழ்கையிலும் ஒன்னும் பெரிய சேஷ்டை கெடையாது ( அப்போ தான் ஆரம்பிச்சுது ) கொஞ்சம் ஜாஸ்தி பேசுவேன் அவ்ளோ தான்....அடுத்தது தான் முக்கியமான கட்டம்..... காலேஜ்......

அது வரைக்கும் நாய் மாதிரி நம்மள கட்டி போட்டே வளர்த்தாங்களா ...திடிர்னு பஸ் ஏறி போய்...நந்தனம் காலேஜ்ல சேர்த்தாங்க...நந்தனம் தான் என்வாழ்கைல நந்தவனத்த காட்டுச்சு...செரி படிக்கலன்னாலும் ரொம்ப கட்டுபாடா வளந்த என்ன அவுத்து விட்ட மாடு மாதிரி நந்தனம் என்ன மாத்துசு..கட் அடிக்கிறது அப்படின்ற வார்த்தையே தெரியாத எனக்கு அதுக்கப்புறம் அது ஒரு வாடிக்கயாவே ஆயுடுச்சு...இத்தனைக்கும் அறிவாளிங்க படிக்கிற க்ரூப்பான கெமிஸ்ட்ரி தான் எனக்கு கெடைச்சது...( எப்படி தான் தெரில... செரி விடுங்க...) இதுக்கப்புறம் நம்ம லைப் மாறிச்சு பாருங்க.....மொதல்ல நாம யாருன்னு ஊருக்கு காட்டணும்னு சொல்லி நாட்டமா சரத்குமார் மாதிரி ஊர்ல இருக்குற அத்தன வம்பு வழக்கு, பஞ்சாயத்து எல்லாம் நம்ம தலைல தான் இருக்குற மாதிரி எல்லாத்துக்கும் முன்னாடி ஓட வேண்டியது..இத பண்ணான்....... அவன் அத பண்ணான் டெய்லி ஒருத்தன் எங்கப்பாகிட்ட போட்டு கொடுப்பானுங்க ( பரதேசி பசங்க )...இதுக்கு நடுவுல தண்ணி வேற....அதுக்கும் ஒரு 2,3 தடவ வீட்லயே மாட்டி இப்போ என்ன....பெரிய தப்பு பண்ணிட்டான கேட்டு..எங்கப்பா என்ன வெளில தள்ளி....யம்மா யம்மா அதெல்லாம் ஒரு தனி எபிசோடாவே போடலாம்....

அடுத்த segment காலேஜ் வாழ்க்கைல எல்லார்க்கும் வரது தான். கருமம் புடிச்ச லவ்..நம்ம ஏரியாவுல இருக்குற ஒரு பொண்ணு தான்....தெலுங்கு பிரஹமான பொண்ணு ( இத சொல்றதுக்கு எனக்கே கொஞ்சம் வெக்கமா தான் இருக்கு என்ன பண்றது ) 2001 கடைசில ஆரம்பிச்சு கிட்ட தட்ட 2006 ல முடிஞ்சுது...நம்மளோட காதல் காவியம்...கிட்ட தட்ட 5 வருஷம் நல்ல தான் போச்சு என்ன நமக்கு தான் அத எப்படி தொடர்றதுன்னு தெரியாம சொதப்பிட்டேன்...( நாம கொஞ்சம் தென்ன மரம் மாதிரி இருக்குறதா பசங்க சொல்வானுங்க இதே Height Factor வெச்சு தான் அந்த பொன்னையே மடக்கினேன் ).நம்ம வாழ்க்கையே மாறினதுக்கு கொஞ்சம் காரணம் இந்த பொண்ணுன்னு சொல்லலாம் ( லாம்....லாம்...) இல்லாட்டி எதாவது ஒரு MLA கிட்டயோ இல்ல எதாவது ஒரு Gangster கிட்டயோ அடியாளா சேந்து வாழ்க்கைல settle ஆகி இருப்பேன்..( என்ன பண்றது விதி யார விட்டுது ) எங்கப்பா என்ன Biology Group ல சேக்கும் போதே ஏதோ பிளான் பண்ணிருக்காரு போல...அதெல்லாம் யாருக்கும் தெரியும் அப்போ..அவர் ரூட்ல என்ன கூட்டிட்டு போக பாத்தாரு...நடக்கலையே...நடக்க விடலியே... 3 வருஷ காலேஜ் வாழ்கை முடிஞ்சு ( நல்லா நோட் பண்ணுங்க காலேஜ் வாழ்கை தான் முடிஞ்சுது...ஆனா படிப்பு முடியல..... :-) ) நல்லா ஒரு வருஷம் வீட்லயே ரெஸ்ட் எடுத்தேன்..அப்போ சினிமாவுல டைரக்ட் பணன்னும்னு ஒரு 8 மாசம் அலைஞ்சு திரிஞ்சேன் செட் ஆகல..அதுக்கப்புறம் என்ன தோணுச்சோ தெரில திடிர்னு Medical Transcription படிச்சேன் அதுக்கப்புறம்...நம்மாளு திருவான்மியூர்ல ஒரு கம்பெனில வேல பாத்தா..எங்க சொந்தகாரன் ஒருத்தன புடிச்சு Nittany Decisions ல சேந்தேன்....நம்ம ஆளு அங்க இருந்து கோடம்பாக்கத்துக்கு தாவினா......நாமளும் ஒடனே வேலைக்கு சேந்த பத்தே நாள்ல அங்க இருந்து ( குரங்கு மாதிரி ) தாவி திருப்பியும் என் பிரெண்டு மூலமா அங்க ஒரு Medical Transcription கம்பெனில சேந்தேன்.. ஒரே வாரத்துல சண்ட.....கோடம்பாகதுக்கே வேல தேடி ஒரு Share Market Company ல வேல அங்க ஒரு 15 நாள்...நமக்கு இது இன்றேஸ்ட் வே இல்லையேன்னு 15 நாள்ல வெளில வந்தாச்சு...( நமக்கும் கோடம்பாக்கத்துக்கும் அப்படி ஒரு ராசி, அப்பவாவது உஷாராகி அந்த பொண்ணு பின்னாடி சுத்துரத நிறுத்தி இருக்கலாம் )அப்புறம் அடையார்ல ஒரு மெடிக்கல் கம்பெனில Sales Rep வேல...இங்க ஒரு சாதனை செஞ்சேன் என்னன்னா ஒரு மாசம் இருந்தேன் இங்க..அங்கயும் வேலைய விட்டுட்டு ..சும்மா இருந்து.....நம்மாளு கிட்டயும் அப்பா கிட்டயும் திட்டு வாங்கி...கடைசியா அண்ணா சாலைல CAMS நு ஒரு ICICI Mutual Fund back office ல தெனமும் 90 ரூபாய் சம்பளத்துல...ஒரு பெரிய உத்தியோகம் கெடைச்சுது .....போகும் போதே.....இங்கயாவது எந்த சண்டையும் போடா கூடாது டா சாமின்னு....சேர்ந்தேன்..90 -- 100 ஆச்சு....அங்கயும் நமக்கு நிலை கொள்ளவில்லை தாவுரதிலேயே இருந்துது மனசு...இதுக்கு நடுவுல ஒரு, ஒரு வருஷம் நாம பெரிய பு**** மாதிரி Key போர்டு வேற கத்துகிட்டேன்..( ஆக மொத்தத்துல எல்லா விஷயத்தையும் சொதப்புரத தவிர நாம உருப்படியா எதுவுமே செய்யல அதான்..Morale இந்த கதைக்கு..) நம்மளோட காட்டு மிராண்டி தனத்த தாங்கின,தாங்கிகிட்டு இருக்க, தாங்க போற என்னோட அம்மா....உதவாக்கர தனத்த பொறுத்துகிட்ட அப்பா....இதையெல்லாம் தாண்டி நம்மள organize பண்ண என்னோட கேர்ள் பிரெண்ட் இபபடி...சமுதாய சிக்கல்ல இருந்ததால உடனே நான் எந்த முடிவு எடுக்கல..போச்சு ஒரு 2 வருஷம் அங்க...2005 ல இருந்து 2007 வரைக்கும்...நடுவுல லவ்வும் புட்டுகிச்சு ( காரனத்த அலசி ஆராய வேண்டாமே ) ...

இப்படியே ஒன்னுத்துக்கும் யாருக்கும் உதவாம உதவக்கறையா இருந்த என்ன ஓரளவு இப்போ இருக்குற மாதிரி கொஞ்சம் சுமாரான ஆளா மாத்தினது 4 விஷயம்..முதல் விஷயம் அம்மா கண்டிப்பா....என்னெல்லாம் குழந்தையா இருக்கும்போதே கள்ளி பால் ஊத்தி கொன்னுருக்கணும்...(எப்படியோ எஸ்கேப் ஆகி இவ்ளோ அழிச்சாட்டியம் பண்ணி...ரைட் விடுங்க..) 2. கேர்ள் பிரெண்ட் அவ இல்லன கண்டிப்பா படிப்ப முடிச்சிருக்க மாட்டேன்.....இன்னும் மோசமா போயிருக்க வாய்ப்பும் இருக்கு....அடுத்தது என்ன மாத்தினது கேக்க சிரிப்பா கூட இருக்கலாம்...ஆனா உண்மை அதான்.....சினிமா & புத்தகம்....இது ரெண்டும் தான் தான் கற்கால மனிதனா இருந்த என்ன தற்கால manidhanaa ஆக்குச்சு...இன்னைக்கு இவ்ளோ சித்தாந்தம், வேதாந்தம் பேசுறேன்ன அதுக்கு காரணம் புக்ஸ் தான்....

அந்த கம்பெனில இருந்து மாறி அப்புறம் sify ல ஒரு ரெண்டரை வருஷம் குப்ப கொட்டி.....இப்போ ஹைதராபாத் வரைக்கும் எப்படியோ தெரியாம வந்துட்டேன்..நானெல்லாம் குரோம்பேட்டைய தாண்டுவனநெல்லாம் எனக்கு சந்தேகம் இருந்துது.....( அம்மாடி தாண்டிட்டேன் )....இன்னும் இந்த Dressing விஷயத்துல நான் கொஞ்சம் பின் தங்கி இருகேனொன்னு ஒரு டவுட் நமக்கு இப்போவும் இருக்கு..வேலைக்கு போற நேரம் தவிர...மத்த நேரத்துல நான் பண்ற டிரெஸ்ஸ பாத்துட்டு நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் என்னடா என்னமோ சினிமால வர அடியாள் மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர டீசெண்டாவே இல்லைம்பாங்க ...என்ன பண்ண நம்ம மொகறகட்டை அப்படி.....

லவ்வு புட்டுகிட்டப்புரம் சந்தோஷமா சிரிச்சிகிட்டே அடுத்த நாள் நான் வேலைக்கு போயிருக்கேன்...வேற பொண்ண பாக்க்கலாம்ன்ற சந்தோஷத்தோட... வாழ்க்கைல நான் செம அடி வாங்கினப்பலாம் நான் அழுதது இல்ல....ஆனா எங்கம்மாவ விட்டு வந்தப்புறம் தொடர்ச்சியா....20 நாள் அழுதுட்டு இருந்தேன்...நமக்கு அழ தெரியும்ன்றதே எனக்கு அப்போ தான் தெரியும்... ஊற விட்டு வந்ததுக்கப்புறம் எசகு பிசகான இங்கிலீஷ், எக்கு தப்பான ஹிந்தி, தட்டு தடுமாறி புரிஞ்சிக்கிற தெலுங்கு இதையெல்லாம் வெச்சு காலத்த ஓட்டிட்டு இருக்கேன்....இப்போதைக்கு பணம் சம்பாரிக்குரத தவிர வேற எதையும் சாதிச்சதா எனக்கு நினைவு வரல...அதையும் மீறி ஏன் இத எழுதினேன்ன...நாளபின்ன நெறைய பணம் சம்பாரிச்சு...என்ன மாதிரியே ஒருத்தன கூட்டிட்டு வந்து இவனுக்கு அட்வைஸ் பண்ணுங்க நம்ம கிட்ட சொல்லும்போது இத நான் நெனைக்கணும்,படிக்கணும் அதுக்கு தான்...தவிர நம்ம ஊர்ல படிச்சிருக்கானா,நல்லவனாநேல்லாம் பாக்குறதில்ல...காசு வெச்சுருக்கானா அப்போ அவன் நல்லவன் தான், அவன் யாருக்கு வேணாலும் அட்வைஸ் பண்ணலாம்னு நிலைமை வந்துருச்சுல்ல....அதான்...இந்த மட்டிலும் ஏதோ ஒரு முட்டாளின் கதைன்னு பெருமையா போடற மாதிரியாவது இருக்கேன்..( இல்லாட்டி Confessions of an Alcoholic....எழுத வேண்டி இருந்துருக்கும்....செரி அடுத்து நம்ம முன்னேற்றத்துக்கு பின்னாடி இருந்தவங்கள பத்தின அடுத்த ப்ளாக் ல பாப்போம்...,விஷாலோட தீராத விளையாட்டு பிள்ளை ரிலீஸ் ஆயுடாச்சாமே அதையும் சிரிசிட்டே பாப்போம் )...

ஜெய் ஹிந்த்...

January 12, 2010

இரண்டாயிரத்தில் ஒருவன்...

வணக்கம்....

எப்போ பாத்தாலும் விஜய், விஷால் இல்லனா ராமதாஸ் மாதிரி சின்ன பசங்கள பத்தி தான் பேசுவீங்களா.....அவங்கள தவிர நாட்ல எவ்ளோ பெரிய மனுஷங்கெல்லாம் இருக்காங்களே..... அப்படின்னு யாரும் கேக்கல....நானே நெனைச்சு இப்போ ஒரு பெரிய ஆளை பத்தி எழுத போறேன்..இதுல சந்தோஷம் என்னன்னா அந்த பெரிய என் நண்பன், எங்களோட தலைவன்..அவன பத்தி சாரி அவர பத்தி எழுதுறதே எனக்கு ஒரு பாக்கியம் தான்.....நம்மளோட முதல் ப்ளாக்ல சொல்லிருகேன்ல நண்பர்கள் பத்தின்னு அந்த நண்பர் தான் இவரு....

அவர பத்தி எதுல ஆரம்பிக்குறதுன்னே தெரில.....இருந்தாலும் ஆரம்பிக்கிறேன்...அவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அவர் பேசுற மொழியும் அப்பப்பா........ பொன் எழுத்துக்களால் பொரிக்க பட வேண்டியவை..அவர் போடற டிரஸ் தினம் ஒரு பேஷன் ஷோ....அவருடைய ஆர்குட் வலை தளம் எல்லாருக்கும் ஒரு பாடம்.....அவரோட வேல செஞ்ச அந்த 2 வருஷம் 9 மாசங்கள்ல நான் கத்துகிட்டது....கணக்கு பண்ண முடியாது.....இவ்ளோ பெரிய ஆளு யாரு...அவரு பேரு என்ன.......எப்படிங்க ஹீரோ முதல் சீன்லயே வந்துருவார என்ன முதல்ல சம்பவம் என்னன்னனு பாப்போம் பேரு கடைசீல.....அவரு பெற கேட்டு நானும் மொதல்ல பேஜாரா ஆனேன்...நீங்களும் ஆவீங்க.....

2007 வது வருஷம் பிப் 16 ஆம் தேதி....மோத மொதல்ல நான் கம்பெனிகுள்ள கால எடுத்து வெச்ச நாள்....எனக்கு என்ன வேலன்னு சொல்லி தரவேண்டியது தான் சாரோட முதல் அசைன்மென்ட்.......நான் 10.45 கு அவரோட எடத்துல உக்காந்தேன்....சார் எங்கன்னு கேட்டேன்..வருவாருன்னு சொன்னாங்க......சாரும் வந்தாரு ஆனா 11.30 மணிக்கு......வந்த உடனே...நாலு சாட் விண்டோவ ஓபன் பண்ணாரு...ஆர்குட்டையும் ஓபன் பண்ணாரு......நமக்கு இதெல்லாம் பத்தி அப்போ சுத்தமா எதுவும் தெரியாது வேறயா....இது தான் வேல போலருக்கு நெனைச்சிட்டு சார பாத்துட்டு இருந்தேன்......சாரும் ஒரு மணி நேரத்துக்கும் மேல `வொர்க்` பண்ணிட்டு இருந்தாரு....கடைசியா என்கிட்டே ஒன்னு சொன்னாரு....இது தான் மொத்த வேலையும்.....இத தான் நீங்க பாக்கனும்னு....நானும் குத்து மதிப்பா தலைய வேற ஆட்டினேன்....அப்போ அவருக்கு தலையாட்ட ஆரம்பிச்சவன் தான் அதுக்கப்புறம்.....பல தடவ அவரோட கருத்துக்கு தலைய ஆட்டிருகேன்.....

இந்த சாக்ரடீஸ், பிளாடோ, சுவாமி விவேகானந்தர் இவங்கெல்லாம் இருக்காங்கல்ல அந்த வகைல அவங்க கூட சேர வேண்டியவாறு நம்ம ஆளு அவ்ளோ கருத்துக்கள மக்களுக்காக உதிர்திருக்காறு...இன்னும் அவரு மண்டைக்குள்ள நெறைய இருக்கு........கருத்து....

அவரு காலவெள்ளம் அடித்து செல்ல முடியாத பல வராற்று சம்பவங்கள செஞ்சு தன்னோட பேர பொன் எழுததுக்கல்ளால் பொறிச்சி வறுத்து வெச்சுருக்காரு...

காஞ்சிபுரத்துக்கு திருமணத்துக்கு போனது...( இத ஒரு தனி எபிசொடாவே எழுதலாம் ) ,சத்யம் கம்பெனில வேலா பாத்தது, ECR ல வீடு வாங்கினது, 40,000 ரூபா கொடுத்து AC டெம்போ வண்டில வேர்ல்ட் டூர் போனது, பொண்ணுன்னு நெனைச்சு இன்னொரு பையனோட சாட் பண்ணது...தான் இருக்குற இடமான திருவல்லிகேனிக்கு பின் கோடு தப்பா சொன்னது.....வீட்டுக்கு எதிர்க்க இருக்குற பறக்கும் ரயில் எங்க இருக்குனு கேட்டு சாதனை செஞ்சதுன்னு.இப்படி அவரோட பயணம் ரொம்ப பெரிசு...

இவருக்கு ஏன் இரண்டாயிரத்தில் ஒருவன்னு பேர் வந்துதுன்னு தெரியுமா....ஒரு சின்ன தகராருல....

"வீட்ல வந்து பார்ரா எனக்குன்னு 2000 பேர் இருக்காங்க என்னமோ நீ மட்டும் தான் எனக்கு பிரெண்டு மாதிரி சீன் போட்ற...."

அப்படீன்னு தலைவன் திடீர்னு ஒரு நாள் பஞ்ச் டயலாக் பேசினான். என்னனு விசாரிச்சா 2 பேர்க்குள்ள சண்டைல அவங்க ஏரியாவுல இருக்குற அவன் பிரெண்ட்ஸ்ஓட என்னிக்கையாம்..... ஆனா இப்போ அது ஒன்னு கொறஞ்சு போச்சு எப்படின்னா...அந்த 2000 பேர்ல இப்போ ஒன்னு கொறைஞ்சு போச்சு எப்படின்னா...அந்த ரெண்டாயிரம் பேர்ல செத்து போன மைக்கேல் ஜாக்சனும் ஒருத்தர்....

ஒரு தடவ உற்ச்சாக பானம் குடிக்க போனோம். குடிப்பதற்கான காரணம் காஞ்சிபுரம் குமாருக்கு கல்யாணம். குடிக்க போன தேதி ஆகஸ்ட் 14 ஆம் தேதி...
நான் அத அடிப்பேன் இத அடிப்பேன்னு சொன்ன நம்மாளு ஒரே ஒரு பீரோட செட்டில் ஆயிட்டாரு அதையும் முழுசா குடிசாரான்னு கேட்டா ......இல்ல.....அதுல நாங்க ( நான் ) குடிச்சிட்டு பதி தண்ணிய கலந்துட்டோம்.........இதெல்லாம் அவோரோட சாதனைக்கு ஒரு சான்று.....

அவரோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் இருக்கு பாருங்க அடடா அத சொல்லியே ஆகணும்...நாமெல்லாம் டி ஷர்ட் நு ஒன்னு போடுவோமே....அதெல்லாம் அவருக்கு இடுப்புக்கு மேலேயே நின்னுடும் அதுக்கப்புறம் அது கீழ எறங்கி வராது......jeans நு ஒன்னு சொல்லுவாங்களே அதெல்லாம் நமக்கு இடுப்புல தான் நிக்கும்...ஆனா அவருக்கு..........தொடைல கூட நிக்காது.......அவர் அதுக்குன்னு ஒரு பெல்ட் வெச்சுருக்காரு...அத போட்டு தான் நிருத்துவாறு.......

இது தவிர மயிலாப்பூர்ல சங்கீதா ஹோடெல தேடினது....லேட்டா வந்துட்டு சீக்கிரமா வந்த மாதிரி சைன் போட்டது....Whall We meet, Have a nive day இப்படி போன்ற பொன்மொழிகள உதிர்த்ததுன்னு தலைவன் தன்னோட பேரையும் புகழையும் நிலை நாட்டி இருக்கான்....

எப்பவுமே குறை சொல்றது தான....அப்படின்னு யோசிக்க வேணாம் இந்த குறைகள விட நிறைய நிறைகள் இருக்கு நம்ம தலைவர் கிட்ட...

இத்தனை கொடுமைகள நாங்க ( நான் ) பண்ணியும் ஒரு நாள் கூட சார் எங்க கிட்ட கோப பட்டதே கிடையாது....பிரியாணியோ, தயிர் சாதமோ எங்களுக்குன்னு ஒரு பெரிய பங்க கொடுக்காம அவன் சாப்டதே இல்ல....( சொல்ல போனா அவன் பங்கையும் அவன் சாப்டதில்ல.....அதுக்கு இன்னொருத்தர் இருக்கார்....முதலாளி ).

போன வருஷம் திருநெல்வேலி போன போது சாரோட jockey காணாம போய்டுச்சு ( என் மேல கூட அவருக்கு ஒரு டௌட் இருக்கு.....சத்தியமா அத நான் எடுக்கல...) அத கூட பெருந்தன்மையா மன்னிச்சிட்டாறு...

அடுத்து அவரோட தமிழ் பற்று.....அவர் பேசுற தமிழ விட்ருங்க...அது தான் நமக்கு தெரியுமே.......ஆனா A.R.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கினதுகேல்லாம் எங்களுக்கு ட்ரீட் வெச்சாருன்னா அவரோட தமிழ் பற்ற பாத்துகோங்க....

இந்த ஒரு பக்க ப்ளாக்ல ஒரு முழு சரித்திரத்த சொல்ல முடியாது....அவர் ஒரு சகாப்தம்......உயர்ந்த மனிதன்......அவரோட வாழ்கைய ஒரு பக்கத்துல சொல்றதுன்றது அகத்திய முனிவர் கங்கா நதிய கமண்டலத்துல அடைச்ச மாதிரி அத எல்லாம் என்னால பண்ண முடியாது........அதனால இன்னொரு தடவ கூட நான் அவர பத்தி எழுதலாம்.....ஏன்னா இன்னும் எழுதாத கதைகள் நெறைய இருக்கு.....இதுக்கு பார்ட் - 2 கூட எழுதலாம்.....தப்பு இருக்கும் பட்சத்தில் திருத்தி கூட எழுதலாம்.....

இவ்ளோ சொல்லியாச்சு....அவரோட பேர சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு....

ராஜாதி ராஜ... ராஜ கம்பீர..ராஜ குலோத்தூங்க.....ராஜ குலத்திலக........
SHAIK FAREED...........

அப்படியே நம்ம தலைவனோட திருமுகத்தையும் பாருங்கய்யா......அந்த பால் வடியற முகத்த...