December 30, 2009

வேட்டைக்காரன் லாஜிக்கை விட்ட கோட்டைகாரன்.....

வணக்கம்.......

என்ன இருந்தாலும் நமக்கு ரொம்ப புடிச்சவங்கள பத்தி அடிக்கடி எழுதணும் படிக்கணும்னு எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும் இல்லையா...அது போல தான் எங்களுக்கு விஜய பத்தி எழுதலன்னா...சாப்பாடு தூக்கம் இருக்காதுன்றத விட...எங்களால செரியா மூச்சு கூட விட முடியாதுன்றது தான் உண்மை....

செறி விஷயத்துக்கு வருவோம்.....வேட்டைக்காரன்......எதுக்காக இந்த டைட்டில் வெச்சாங்க இந்த படத்துக்கு.....சமுதாயத்துல ரொம்பவும் பின்தங்கிய சமுதாயத்த சேர்ந்த ஒருத்தன் அதே சமுதாயத்துக்குள்ள இருக்குற மூடநம்பிக்கைகள், போலி மனிதர்கள் இதையெல்லாம் வேட்டையாடி எப்படி முன்னுக்கு கொண்டு வரான் அப்படின்றது தான் கதையா...கண்டிப்பா இல்ல....இப்படியெல்லாம் நாம மூளைய கசக்க அவங்க வேலைய தரல......நாம இந்த மாதிரி விஷயத்த எல்லாம் விஜய் கிட்ட எதிர் பாக்கலாமா....

தன் தகுதி என்னன்றது இப்போ தான் நம்ம இளையதளபதிக்கு கரெக்டா புரிஞ்சுருக்கு....அதாவது +2 , 4 வாட்டி பெயில் ஆனவரா அய்யா வராரு..( உண்மை அது தான் ). தலைவர் அதுக்கு ஒரு காரணமும் சொல்றாரு...அது என்ன பெரிய காரணம்....அதாவது தன்னோட மானசீக குரு தேவராஜ் IPS இதே மாதிரி +2 நாலு வாட்டி எழுதினாராம்.....அடடா....இல்லாட்டி இவரு கலெக்டர் ஆயிருப்பாறு....
செறி மன்னிசிட்டோம்.....நீங்க போலீஸ் ஆகணும்றது தான் உங்க குறிக்கோள் அப்படி சொல்றீங்க....அதையும் பொறுத்துகிட்டோம்.....அதுக்காக நீங்க எதாவது பயிற்சி செய்ற மாதிரி ஒரு சீனாவது வெச்சுருகலாமே டாக்டர் சார்.........போலீஸ் வேல என்ன நீங்க நடிக்கிற படம் மாதிரி ரொம்ப சுலபம்னு நேனைசுடீங்கள சார்...

செறி பரவால்ல அதையும் விட்ருவோம்.........சென்னைக்கு வரீங்க.......காலேஜ்ல செர்ந்துட்றீங்க.....பாடம் நடத்துற வாத்தியாருக்கும் உங்க வீணா போன உதவக்கற உபதேசத்த கொடுக்கனுமா...அவங்க அதுக்கப்புறம் ராஜினாமா பானிட்டு போனாங்களே அதகூட ஏன் நீங்க படத்துல சேக்கல.....

சென்னைக்கு வரும்போதே நீங்க உங்களுக்கே அக்கா மாதிரி இருக்குற அனுஷ்கா கிட்ட நீங்க முள்ளமாரித்தனம் பண்றீங்க....சகிச்சிகிட்டோம்.....உபதேசம் பண்ற சாக்குல ஒரு பொண்ண உஷார் பண்ண பாத்தீங்க ஆனா அது உங்களுக்கு செட் ஆகல. அதனால அந்த பொண்ணோட அப்பாவ தாஜா பண்ணி ஆட்டோ ஓட்டறீங்க ...பார்ட் டைம்ல......அதுக்கு என்ன காரணம்......அந்த தேவராஜ் IPS ஆட்டோ ஒட்டி தான் IPS ஆனாரு அதானே.....கருமம்டா......

அது எப்படிங்க உங்களுக்கும் விஷாலுக்கும் ஆண்டவன் மூளைய ஆட்டுக்கு இருக்குற அளவுக்கு கூட இல்லாம உங்களுக்கு கொஞ்சமா கொடுத்துருக்காரு....உங்க படத்துல வர வில்லன் நகை கடைக்கு வருவாராம் அங்க ஒரு பொண்ண பாப்பாராம் ஒடனே வீட்டுக்கு பொய் மெரட்டி தூக்குவாராம்...என்னமோ கோயில் பிரசாதம் கொடுத்து அனுப்புற மாதிரி RAPE பண்ணிட்டு அனுப்புவாராம்....அவங்களும் வீட்டுக்கு சத்தம் போடாம போவாங்களாம்.......என்னையா அநியாயம் இது.......யோவ் விஜய் இது 2010 யா இன்னும் எத்தன நாளைக்கு இப்படி......திருந்துயா...

இதே தான் படமா இதுக்கு மேல வேற ஒண்ணுமே இல்லையா......இருக்கு விஜய்க்கு ஆட்டோ கொடுத்த அவரோட காலேஜ் பொண்ண வில்லன் பிரசாதம் கொடுக்க சாரி வழக்கம் போல தூக்க பாக்குறாரு....வில்லன் வர்றாரு விஜய்....அடிக்கிறாரு.....அதுக்கப்புறம் வில்லன் வழக்கம் போல ஹாஸ்பிடல்ல கோமால போய்றாரு....அதுக்கப்புறம் இன்னொரு வில்லன் இருக்காரு பாரதியார நடிச்ச சாயாஜி ஷிண்டே பாவம் யா அவரு....எத்தன படத்துல தான் அவருக்கு இப்படி ரோல் தருவாங்கன்னு தெரில...விஜய அர்ரெஸ்ட் பண்ணி சென்னைல ஜெயில்ல போடறாங்க...என்கௌண்டர்ல விஜய போட்டு தள்ள பாக்குறாங்க சென்னைல இருந்து போலீஸ் ஜீப்ல இருந்து தப்பிச்ச நம்ம விஜய் சாவிய வாயாலேயே பிடிச்சு தன்னோட கை விலங்க அவுத்து......சென்னைல இருந்து சாலக்குடி பக்கத்துல இருக்குற அதிரபள்ளி பால்ல்சுக்கு (புன்னைகை மன்னன்ல கமல் ரேகா தற்கொல பண்ணிப்பான்களே அந்த எடம்).......சுமார் 400 அடி உயரத்துல இருந்து குதிச்சு....கால் முட்டில ஒரு சின்ன கீரளோட தப்பிக்கிராறு......இப்பவாவது உஷார் ஆகி தேட்டர விட்டு வெளில வந்துருக்கலாம்....

அதுக்கப்புறம் அடிக்கிறாரு பாருங்க ஒரு கூத்து....அடிபட்டு கோமால கெடக்குற வில்லனோட அப்பா சலீம் கௌஸ் வராரு.....விஜய் +௨, 4 வாட்டி பெயில் ஆகி படிச்சதாலையோ என்னமோ தன்னோட அத்தன எடத்துக்கும் இன்ப சுற்றுலா கூட்டிட்டு போறமாதிரி கூட்டிட்டு போய் காட்றாரு....நடுவுல வேதனாயகம்னா........பயம்......அப்படின்னு சொல்லி விஜய பயமுருத்துறதா நேனைச்ட்டு நம்மல பயமுறுத்துராறு....அப்புறம் MLA ஆகமலையே திடிர்னு மந்திரி ஆகுறாரு...மந்திரி ஆனாலும் தன்னோட டீ கடையே கதின்னு கெடக்குறாரு...

படத்துல நல்ல விஷயமே இல்லையா.....இருக்கு...
1. வில்லன் போலீசா இருக்குற சாயாஜி ஷிண்டே தன்னோட சின்ன வீட வில்லன் தன் வசபடுதினவுடனே சாயாஜி ஷிண்டே திருந்துற சீன்...
2. நம்மள விட விஜய் நல்ல காமெடி பண்ணுவாரு தெரியாம கஷ்டப்பட்டு காமெடி பண்ண முயற்சித்த சத்யன்...
3. தன்னோட கடைசி தம்பி மாதிரி இருக்க விஜய தன்னோட ஹீரோ வா நடிக்க அனுமதிச்ச அனுஷ்கா அப்பபோ விஜய லவ் பண்றது,பாடல் காட்சிகள்ல பாவாடை தாவணி போன்ற தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமா உடை அணிஞ்சு இருக்கிறது....
4. இது வரைக்கும் எந்த படத்துலயும் வராத புதுமை ஒன்னு இருக்கு...புலி உருமுதுன்ற பாட்ல விஜய் எப்படி உழைச்சு முன்னேருராருன்றத......வித்யாசமா காமிச்சிருக்காங்க......
5. விஜய் அந்தோனி. பேர்லயே விஜய் இருக்குறதால இவருக்கும் நல்லாவே காப்பி அடிக்க வருது........2008 ல ரஹ்மான் ஆஸ்கார் வாங்கின மாதிரி இந்த படத்துக்கு 2 விஜயும் வாங்குவாங்கன்னு ரசிகர்கள் எதிர் பாக்கலாம்....
6. போலீஸ் IPS வர தேவராஜ் குடும்பத்த வீட்டோட கொளுத்தி....அவரையும் குருடாக்கி தமிழ நாட்டுல சட்டம் ஒழுங்கு எவ்ளோ பாதிக்க பற்றுக்கு.....ஒரு பெரிய போலீஸ் அதிகாரிக்கே இந்த நெலம பாருங்கன்னு நமக்கு விஜய் சொல்ல வராரு...போலீஸ் கண்ணா குருடாக்கினதுக்கு பதிலா எங்க கண்ணா குருடாக்கி இருக்கலாம் டா சாமி....
6. இத்தனை நடந்தும் விஜய் இத 250 நாள் ஒட்டி `சாதனை` படைச்சு அந்த கருமத்தையும்......சன் டிவி ல போட்டு கழுதருப்பானுங்க....

அய்யா படத்தயாரிப்பாளர்களே அவனுக்கு கூட ஒன்னோ ரெண்டோ கோடிய கொடுத்து படமே எடுக்காம இருங்க....ஆனா இப்படி பட்ட சமுதாய விழிப்புணர்வு படங்கள் எதுவும் எடுக்காதீங்க....எங்களால தாங்க முடில.....

எங்க ராசி நல்ல ராசி.....

நம்ம தமிழ்நாட்ட விட்டு ஹைதராபாத் வந்து 2 மாசம் ஆக போகுது அதாவது 54 நாள்...

நாம வந்த நேரமா.....இல்ல ஆந்த்ராவோட அழகே இப்படி தானான்னு தெரில..இண்டர்வீவ் வந்தபோது அதாவது செப்டம்பர் மாசம் 7 ஆம் தேதி அதுக்கு 2 நாள் முன்னாடி ஆந்திரா முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இறந்து போனாரு. இப்போ நவம்பர் மாசம் நான் வந்ததுல இருந்து இந்த தெலுங்கான பிரச்சன போய்ட்ருக்கு. பந்துன்னு மட்டும் சொல்லி இது வரைக்கும் 4 நாள் லீவ் விட்டாச்சு..கடைகள ஓடைச்சாச்சு , பஸ்ஸ எரிச்சாச்சு...லீவு விட்டாச்சு....250 கோடிக்கு நஷ்டம் ஏற்படுத்தியாச்சு....... 12 நாள் உண்ணாவிரதம் இருந்து சாத்துக்குடி ஜூஸ் குடிச்சாச்சு..இதுக்கு மேல என்னன பண்ண போறாங்களோ.....

வந்தமா வேலைய பாத்தமா, சாப்டோமா, வீட்டுக்கு போனோமா, போற வழில ஆந்த்ரா பொண்ணுகள பாத்தமான்னு இல்லாம நம்மக்கு போற எடமெல்லாம் கெரகம் கூடவே சுத்துது...தமிழ் பேச ஆளில்லாம....செரியான சாப்பாடு இல்லாம கஷ்டபட்டுட்டு இருக்கோம் இதுல இவனுங்க வேற....

இத பாத்துட்டு நம்ம ஊர்ல மருத்துவர் அய்யா அதாங்க நம்ம ராமதாஸ் அந்த அர மண்டையன்......கடாய் தலையன் தமிழ்நாட்ட பிரிக்கணும்னு சொல்றாணமாம்
தமிழ்நாட்ட எத்தன பங்கா பிரிச்சாலும் இவனுக்கு ஆட்சி அதிகாரம் கெடைக்க போறதில்ல அப்புறம் ஏன்.....

இதனை கஷ்டத்துக்கு நடுவுலயும் ஊரு விட்டு ஊரு வந்தாலும் சில பிரச்சனைங்க நம்மள தொரத்த தான் செய்யுது. அது என்ன புது பிரச்சன !
நம்ம Dr.இளையதளபதி விஜயோட வேட்டைக்காரன் தான் அது.....நாம்மளோட அடுத்த அலசல் அதான்.........நன்றி......

ஜெய் ஹிந்த்.

November 11, 2009

நண்பருக்கு கடிதம்

நிறம் பார்த்து பேசும் மக்களுக்கிடையே, அவர்களின் தரம் பார்த்து பழகும் நண்பர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு,

தாய்நாட்டை தாண்டி சென்று 6 மாதத்திற்கு மேலாகிறது, தாய் மொழியை நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற தைரியத்தோடும் ,உங்களோடு இணைந்து ஒன்றாக பணி புரிந்தோம், ஆதலால் எங்களை நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் இம்மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன்......நமது தாய்மொழியில்.....

ஒன்றாக பணிபுரிந்த காலத்தில் நீங்கள் அலசி ஆராய்ந்த அரசியல் நிகழ்வுகளை இப்போது கேட்க முடியவில்லையே என்று அங்கு இருக்கும் மேஜை, நாற்காலிகள் நாதியற்று இருக்கின்றன, விளையாட்டை நீங்கள் விமரிசிப்பதை இனிமேலும் கேட்க முடியுமா என்று வினவுகின்றன.

பிரியா விடை அன்று உங்களுடன் உணவு உண்டதும், தாங்கள் கொண்டு வரும் தயிர் சாதத்தின் சுவையும் இப்பொழுதும் எங்களது நாவில் நடனமாடி கொண்டிருக்கின்றன.

என்ன செய்வது இவற்றை திரும்ப பெறுவது சற்று கடினம்....

திரை கடல் ஓடி திரவியம் தேடும் தங்களை போல் அல்லாமல், தமிழகத்தின் எல்லையை மட்டும் தாண்டும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியுள்ளது..

தங்க தமிழ் பேசும் தேசத்தை விட்டு , சுந்தர தெலுங்கு பேசும் திசையை நோக்கி செல்கிறேன்.....நான்.....

நீங்கள் எனக்கு திருப்பி அளிக்கும் பதில் அஞ்சலில் விபரத்தை கூறுகிறேன்.....

தாய் மொழி பேச முடியாமல் ஆங்கிலமே பேச வருகிறது என்றாலும் பரவில்லை --- தமிழ் வாழ்க...

அனேகமாக ஆங்கிலேயராக மாறியிருக்க கூடும் அதனாலென்ன...ஜெய் ஹிந்த..

தை திங்களில் உங்களின் திருமண அழைப்பிதழை உங்களிடம் இருந்து பெற காத்து கொண்டிருக்கும்,

உங்கள் அன்பு நண்பர்கள்........

October 15, 2009

டாக்டர் ராமதாஸ் என்கிற அரசியல் தீர்கதரிசி

வணக்கம்.

இத எழுத ஆரம்பிக்கும்போது ஒரு விஷயம் நான் யோசிச்சேன். அது என்னன்னா திருப்பியும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அன்பு சகோதரிய நான் மன்னிச்சிட்டேன் அவங்களும் என்ன ஏத்துகிட்டாங்க அப்படின்னு அறிக்கை விடலாம், மு.கருணாநிதி ஒரு அரசியல் சாணக்கியர், இலங்கை தமிழ் அகதிகளுக்கு உண்மையாக உழைத்த உத்தமர் அப்படி டகால்டி விடலாம், என் பாச தம்பி திருமாவளவன் தான் உண்மையான வீரன் அவனும் நானும் தான் 2011 ல உலகத்த ஆள போறோம்னு கூட பேத்தலாம்..........ஏன்னா நம்ம டாக்டர் அய்யா ஒரு முடிவு எடுத்துட்டார்னஅவர் பேச்ச அவரே கேக்க மாட்டாரு......

விஷயத்துக்கு வருவோம்......இப்போ அவரு ஆதிமுக கூட்டணிய விட்டு வெளில வந்ததுக்கு சில முக்கியமான காரணங்களா சில விஷயத்த சொல்லிருக்காரு

1. தானும் தன்னோட கட்சியும் சுத்தமா சுயமரியதய எழந்ததா சொல்லிருக்காரு ( என்னமோ இதுக்கு முன்னாடி சுயமரியாதய ஹோல் சேல வித்த மாதிரி பேசுறாரு)
2. கூட்டணி கட்சி தலைவியான ஜெயலலிதவ நேனைச்சாப்ப பாக்க முடிலயாம். நினைக்கும்போதெல்லாம் பாக்க அவங்க என்ன உங்க கேர்ள் பிரெண்டா......புரட்சி தலைவி....தங்க தாரகை.....இதய தெய்வம்....தமிழகத்தின் விடி வெள்ளியா....தமிழ் நாட்லயும், இலங்கைளையும் வாழுற தமிழ் மக்களுக்கு சேவை செஞ்சுட்டு இப்போ தான் போய் கொடனாடுல ரெஸ்ட் எடுக்க போனாங்க....அவங்கள நீ போய் பாத்து களைப்படைய வேச்சுடீங்கன்னா எங்கள எல்லாம் யார் காப்பாத்துவா சொல்லுங்க....
மொதல்ல பி.ஜெ.பி. அப்புறம் ஆதிமுக அதுக்கப்புறம் திமுக, இது சேரும்போது செத்தாலும் இனிமே ஜெயலலிதாவோடு கூட்டணி என்ற பேச்சுக்க எடமில்லைனு பஞ்சு டயலொக் வேற......அநேகமா இனிமே உங்கள சேக்கவே எல்லாரும் பயபடுவாங்கன்னு நெனைகிறேன்.

உங்களுக்கு ஒரு சூப்பர் யோசனை சொல்றேன் கேளுங்க...எப்படியும் நீங்க இன்னும் கொஞ்ச நாள்ல காணாம போய்டுவீங்க அப்போ உங்கள மாதிரியே காணாம போன கருமம் புடிச்சவனுங்க.... கொஞ்ச பேர் இருக்கானுங்க அவங்கெல்லாம் யாரு

1. கார்த்திக்
2. டாக்டர் கிருஷ்ணசாமி
3. சுப்ரமணியசாமி
அப்புறம் செண்டிமெண்டுக்கு இருக்கவே இருக்காரு நம்ம வைகோ....அவர அழ விட்டீங்கன்னா போதும்....அவரும் ஏதாவது வரலாற பேசி டைம் பாஸ் பண்ணலாம்.......

இன்னும் இத மாதிரி இருகரவங்களோட சேந்து ஒரு மெகா கூட்டணி அமைசீங்கன்னு வெச்சுகோங்க........வெளங்கிடும் அமெரிக்காவுக்கே நீங்க அதிபர் ஆனாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்ல.......எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல டாக்டர் இளயதளபதி கட்சி ஆரம்பிச்சுடுவாரு.....அவரு தலைமைல கூட்டணி அமைச்சு விஜய் கட்சி ஆரம்பிக்கவே நான் தான் உதவி பண்ணேன்னு சொன்னீங்கன்னு வெச்சுகோங்க....ஏதோ விஜய்க்கு கள்ள வோட்டு போடனும்னு நினைக்ரவனும் மனசு மாறி வேற யாருக்காவது போற்றுவான்......வோட்ட.......

இனிமே உங்கள பத்தி பேசி பிரயோஜனம் இல்ல...எங்களுக்கும் வேற வேல இல்ல. விஜய், விஷால் படம் எதுவும் ரிலீஸ் ஆகல.....அவங்க எதுவும் பிரஸ் மீட்டும் வெக்கல......மன்னிச்சிருங்க அதனால தான் உங்கள பத்தி எழுதி எங்க டைம் வேஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு......
டாக்டர் அய்யா ராமதாஸ்......வாழ்க.....
டாக்டர் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் ( அவர பத்தி எதுவுமே சொல்லலையப்பா ச்சே ) வளர்க......

September 30, 2009

டாக்டர் இளையதளபதி விஜயின் அதிரடி அரசியல் ஆசையும், ராகுல் காந்தியின் சினிமா ஆர்வமும்......

வணக்கம்,

கொஞ்சம் நாள் தமிழ்நாடே ச்தமிச்சு போற அளவுக்கு திடிர்னு ஒரு திடுக்கிடும் நிகழ்வு ஒன்னு நடந்தது. அது நம்ம குட்டி கமல் ஹாசன் டாக்டர் இளயதளபதி விஜயும் ராகுல் காந்தியும் சந்திச்சு பேசுனாங்க அப்படின்றது தான்.

என்ன பேசி இருப்பாங்க....... அரசியல் தான் பேசி இருப்பாங்க. விஜய் காங்கிரஸ்ல சேர போறார்னு எல்லா பத்திரிகையும் சொல்லுச்சு. ஆனா நம்ம ஆளு அதாவது டாக்டர் விஜய் நாங்க அரசியல் பேசல. இது என்னோட நலம் விரும்பி ஒருத்தர் ஏற்பாடு செஞ்ச சந்திப்பு, சினிமா சம்பந்த்தமா தான் பேசினோம் அப்படின்னு சார் சொல்லிருக்காரு. ராகுல் காந்தி ரொம்ப பாவம் யா, ஏன்ன இருக்குறதால விட்டுட்டு சினிமாவ பத்தி தெரிஞ்சுக்க வேல மெனக்கெட்டு டெல்லில இருந்து சென்னைக்கு வந்து சினிமாவ பத்தி விஜய் கிட்ட கேக்கநும்நு அவருக்கு தலை எழுத்து பாருங்க. அதுவும் இல்லாம நம்ம டாக்டர் விஜய் சினிமாவ பத்தி கரைச்சு குடிச்சவரு பாருங்க......

எனக்கு அரசியல் ஆசை இருக்கு, ஒரு பெரிய எடத்துக்கு வரணும், இன்னும் நெறைய சொத்து சேக்கணும், ஊர ஏமாத்தனும், ஊர அடிச்சு உலைல போடணும், இன்னைக்கு தான் நான் கட்சி ஆரம்பிச்சாலும் 60 வருஷமா அரசியல்ல இருக்குற ஒருத்தர எப்படி விமர்சனம் பண்ணனும், போட்டி நடிகர்கள வளர விடாம பண்ணனும், அப்படின்னு எல்லாரும் நீங்க சொல்வீங்கன்னு எதிர்பாப்பங்க தான், என்ன பண்ண அதெல்லாம் நாம் வெளில சொல்ல முடியாதுல்ல.. அதனால வழக்கம் போல அரசியலுக்கு வரவங்க எல்லாம் சொல்வாங்களே ஏழைங்களுக்கு சேவை செய்யணும், பசி பட்டினியா போக்கணும், லஞ்சத்த ஒழிக்கும், தமிழ்நாட முன்னேதனும் அப்படின்னு புருடா விடுவாங்களே அது மாதிரி ஏதாவது சொல்லிருக்கலாம், ஆனா நீங்க சினிமாவ பத்தி ராகுல் கிட்ட பேசினேன்னு சொல்றீங்க... ஏங்க டாக்டர் விஜய் தெரியாம தான் நான் ஒன்னு கேக்குறேன் ராகுலுக்கு உங்கள மாதிரி வேல வெட்டி எதுவும் இல்லாம வெட்டி வேல பாத்துட்டு இருக்காரு நேனைசீங்களா....

அங்க டெல்லில இருந்து வேலமேனகேட்டு இங்க வந்தது உங்க கிட்ட சினிமாவ பத்தி பேச தானா.....அப்படியே அவருக்கு சினிமாவ பத்தி கேக்கனும்னாலும்....அங்க அமிதாப் பச்சன் இருக்காரு, அமீர் கான் இருக்காரு.....அப்படி இல்லனலும் நல்ல படங்கள் இயக்குற பல நல்ல இயக்குனர்கள் இருகாங்க.....அதுவும் இல்லையா இங்க ரஜினி இருக்காரு, கமல் இருக்காரு, மணிரத்னம், ஷங்கர்னு இங்க நெறைய அறிவாளிங்க இருக்காங்களே....அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க முடியாத சினிமா விஷயத்தையா நீங்க தெளிவு படுத்த போறீங்க....சொல்லுங்க......அப்படின்னா கூட உங்களுக்கு சினிமாவ பத்தி என்ன சார் தெரியும்.....பேரரசு மாதிரி பெரிய இயக்குனர்கள அறிமுக படுத்துநதால உங்களுக்கு விஷயம் தெரிஞ்சுருக்குமொன்னு ராகுல் வந்துருக்கலாம்...சரி வந்துட்டாரு உங்க கடமை என்ன ராகுல் அய்யா நீங்க நெனைக்குற மாதிரி நான் அப்படி பட்டவன் இல்ல ஏதோ கொஞ்சம் நஞ்சம் நல்ல போய்ட்ருக்க தமிழ் சினிமாவ நானும், விஷாலும் சேந்து ஏதோ எங்களால முடிஞ்சா அளவு கெடுத்துட்டு இருக்கோம்.. சினிமாவ பத்தி நீங வேற யார் கிட்டயாவது கேளுங்கன்னு சொல்லிருகனுமா இல்லையா....அவர் கிட்ட பேசினது இல்லாம....பத்திரிகை காரங்கள கூப்டு என்னமோ SWINE FLU கு மருந்து கண்டு பிடிச்ச மாதிரி பெருமையா பேட்டி கொடுத்தீங்க....

மக்களே இன்னொரு கொடுமையான விஷயத்த நாம சிந்திச்சு பாக்கணும்..சினிமாவ பத்திதான் பேசினோம்னு சொன்னாரே டாக்டர் அய்யா விஜய் ..ராகுல் கிட்ட....அந்த கொடுமைய கொஞ்ச நெனைச்சு பாருங்க......தன்னோட அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன் இத பத்தி எல்லா சார் பேசி இருப்பாரு...அப்போ நம்ம ராகுலோட நெலமைய நெனைச்சு பாருங்க.....என்ன பண்ணி இருப்பாரு ஐயோ பாவம்......

அய்யா டாக்டர் விஜய் கொஞ்சமாவது உண்மை பேச கத்துகோங்க......அரசியலுக்கு வர ஆர்வமா இருந்தா வந்து தொலைங்க வந்து எங்க கழுத்த அறுங்க...அத விட்டுட்டு அரசியல் பேசல.....சினிமாவ பத்தி தான் பேசினோம்னு உங்க பட கதை மாதிரியே எங்க கிட்ட கத விடாதீங்க....

இப்போவே மக்கள் உங்களோட `நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்டன்ற பாட்ட, மக்கள் " நான் நடிச்சா தாங்க மாட்ட வாழ்கை பூரா தூங்க மாட்ட எம் படத்த பாத்துபுட்டு முழுசா வீடு பொய் சேர மாட்டனு ரீமிக்ஸ் பண்ண ஆரம்பிச்சுடாங்க...பாத்து நடந்துகோங்க..தலைவரே.......

இளயதளபதி டாக்டர் விஜய் பற்றிய போற்றுதல்கள் தொடரும்.........

August 13, 2009

சுதந்திர தினம்

இந்த பக்கம் வந்து கிட்ட தட்ட 2 மாசம் ஆகபோகுது. நல்ல மேட்டர் எதுவும் சிக்கலப்பா.... ( என்னமோ ஷங்கர் அவரோட எந்திரன் படத்துக்கு வசனம் எழுத கூப்ட மாதிரி தூ....). இப்போ கைவசம் 3, 4 மேட்டரோட வந்துருக்கோம்........

வடிவேலு வடை போச்சேன்னு சொல்ற மாதிரி இந்த வருஷம் சுதந்திர தினம் சனிக்கிழமை வந்து ஒரு லீவ் போச்சு....
வழக்கம் போல சனிகிழமைகள்ள `கோலா` கலமா கொண்டாடற மக்களுக்கு அதிர்ச்சி ஏன்னா அன்னைக்கு ஒயின் ஷாப் அத்தனயும் மூடி இருக்கும் .....

செரி விஷயத்துக்கு வருவோம் அப்படி இப்படின்னு சுதந்திரம் வாங்கிடோம்னு சொல்லி நாமளும் 62 வருஷத்த தள்ளிட்டோம்.
" உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஜனநாயகம் இன்னும் இருப்பதற்கு இந்தியாவே சிறந்த உதாரணம், வளர்ந்து வரும் நாடுகள்ல இந்தியா அதி வேகமா வளர்கிறது, இந்தியாவோட இறையான்மைக்கு சவால் விடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம், எல்லையில் தீவிரவாதத்தில் ஈடுபடுவோரை பூண்டோடு நசுக்குவோம் னெல்லாம் நம்ம ஆளுங்க கேப்டனுக்கு சரிசமமா பஞ்ச் டயலாக் கேக்கலாம். இந்த 62 வருஷத்துல நாம இழந்தது என்ன , பெற்றது என்ன, வளர்ச்சி எதுல, வீழ்ச்சி எதுல இப்படி கொஞ்சம் நாம பாக்கலாம்.

வளர்ச்சி :
மக்களை தொகை :
நாம உலகதுக்க் எந்த விஷயத்துல சவால் விட்ரோமோ இல்லையோ, இந்த விஷயத்துல தைரியமா விடலாம். 1915 ல பாரதியார் 30 கோடி முகம் உடையால் நு எழுதினாரு, 1993 ல கௌண்டமணி அண்ணன் உன்ன மாதிரி நாட்ல 80 கோடி பேர் இருகாங்க, அவங்கள திருத்துறது என் வேல இல்லன்னாறு, 16 வருஷம் ஆச்சு இன்னும் நம்ம ஆளுங்க திருந்தல..இப்போ இது 110 ல வந்து நிக்குது...அது செரி கல்யாணம் முடிஞ்சு `அந்த நைட்` முடிஞ்சு வெளில வரும்போதே விசேஷம் எதுவும் உண்டான்னு கேக்குற வம்சத்த சேர்ந்த வர்க்கம் ஆச்சே நாமெல்லாம்.. அப்புறம் எப்படி மக்கள் தொகை வளராம போகும்..இப்போவே இருக்குற பஞ்சமெல்லாம் பத்தாம நம்ம ஆளுங்க ப்ன்ஜத்த எல்லாம் புதுசா கண்டு பிடிக்க ஆரம்பிச்சுடாங்க... பாத்து மக்களே இன்னும் ஜாஸ்தி ஆக்கிடாதீங்க...( நமக்கும் ஒரு கல்யாணத்த பண்ணினா நாம ஏன் இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ண போறோம் சொல்லுங்க...நமக்கு செட்டும் ஆகல வீட்லயும் பண்ணி வெக்க மாற்றாங்கப்பா )

வளர்ச்சி 2 சினிமா :
இதுல வளந்த மாதிரி நாம எதுலயும் வளரல, அந்த காலத்துல. மகாலிங்கம், சின்னப்பா, கிட்டப்பா, பாகவதர்நெல்லாம் இருந்தாங்க. அதுக்கப்புறம் சிவாஜி,எம்.ஜி.ஆர்,ரஜினி, கமல் எல்லாரும் நெறைய உழைச்சாங்க, நல்லா நடிச்சாங்க பேரும் புகழுமா 30,40 வருஷம் இருக்காங்க, ஆனா இப்போ வரவனுங்க....தாம்பரத்துல அடிச்சா தண்டயர்பேட்டைல போய் விழற மாதிரி பல `புரட்சிகள` இங்க சில `தளபதிகள்` இப்போ செஞ்சுட்டு இருக்காங்க. காதல்ங்குறது உணர்வு இல்ல வெறும் matter தான் சொல்ற மாதிரி இப்போ பல `காதல் கதை ` வருது. பாக்காத காதல்,கேக்காத காதல்,நாக்கறுத்த காதல், மூக்கறுத்த காதல் , போன், E-Mail இப்படி எத்தனையோ காதல் படங்கள், ஏன் காதலே இல்லாம காதல் பண்ற படங்கள்.....நடுவால நாங்க தான் OSCAR வாங்க போறோம்னு ஒரு குரூப் வேற கெளம்பும்..எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா பு.............மூச்சு தான் வருது.....என்னவேனாலும் பண்ணலாம், எப்படி வேணும்னாலும் எடுக்கலாம் ( என்ன மாதிரி ஆளெல்லாம் இதெல்லாம் எழுதுறேன், அப்போ பாருங்க நெலமைய ) சுதந்திரத்தின் பயனை சினிமா உபயோகித்த விதம்.

வளர்ச்சி 3 அரசியல் :
சினிமாவுல கூட கொஞ்சம் குத்து மதிப்பா நடிச்சா போதும், நாமலே ஏதாவது தளபதி பட்டமோ சூரியன் பாடமோ கொடுத்துட்டு காலம் தள்ளலாம். ஆனா அரசியல்ல எல்லாமே தத்ரூபமா இருக்கனும். நடிப்பு, வசனம், செண்டிமெண்ட் இப்படி எல்லாமே, ஒன்னே ஒன்னுல ரொம்ப கவனமா இருக்கனும் அது டிரஸ். அப்படியே நல்லவன் மாதிரியே மூஞ்ச வெச்சுட்டு white & white ல உலா வரணும். அப்பதான் நீ அரசியல்வாதின்னே தெரியவரும் அதான் அரசியலுக்கான dress code. இது தவிர ஒரே நேரத்துல 10 பேற சமாளிக்கணும்,கதை சொல்ற திறமை இருக்கனும், நல்ல மெமரி இருக்கணும் இப்படி இன்னும் நெறைய விஷயம் irukku தொழில் ரகசியத்த வெளில சொல்ல முடியாது . நாம வளர்ச்சிய மட்டும் பாப்போம் .
daalmiyaapuramndra பெற கள்ளகுடின்னு மாத்த தண்டவாளத்துல தலைய கொடுக்க துணிஞ்ச நம்ம இப்போதைய முதல்வர் கலைஞ்சர், எங்கயோ இருந்த தமிழ் நாட்ட தன்னோட செயல் திட்டம் மூலமா முன்னுக்கு கொண்டு வந்த செயல் வீரர் காமராஜர், ஏழைகளின் துயர் துடைத்த எம்.ஜி.ஆர், அரசு மருத்துவமனைல கட்டில இல்லாததால தரைல படுத்த கக்கன் இப்படி நெறைய பேர் இருந்த காலம் போய் இப்போ 2 படத்துல நடிச்சதும் 3 வது படத்துலேயே அடுத்த முதல்வர் ஆயுட்றாங்க நெறைய பேர், கட்சியிலயோ அல்லது அமைகிற அரசுலயோ தன்னுடுய குடும்பத்தார் பதவி வகிக்க மாட்டங்க, அப்படி ஆச்சுன்னா என்ன சவுக்கால அடிங்கன்னாறு ஒருத்தரு,தாழ்த்தப்பட்டவர், சிறுபான்மை இனத்தவர் இவங்களோட முன்னேற்றத்துக்கு நம்முடைய கட்சி பாடு படும்னு july 16,1989 ,அன்னைக்கு கட்சி ஆரம்பிக்கும் போது சொன்னாரு ஒரு தலைவர், ஆனா இன்னிக்கு தன் மகனுக்கு எந்த அரசு மத்திய சுகாதார துறை அமைச்சர் கொடுக்குரான்களோ, தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுகிற கட்சிய அது வளந்துருக்கு. இப்போதைய அரசியலுக்கு இவரு ஒருத்தர் சிறந்த உதாரணம். சுதந்திரத முழுமையா உபயோக படுத்துறாரு. இது போக காமராஜர் ஆட்சி, Lap Top இல் செயல் திட்டங்கள், மக்களுடன் தான் கூட்டணி இப்படி சொல்லிட்டு இன்னும் இருங்காங்க. அவங்கள திருத்துறது நம்ம வேல இல்ல ........

கலை & இலக்கியம் :
திருக்குறள், இய்ம்பெருக்காப்பியம், அகநானுறு , புறநானுறு இப்படி நம்மாளுங்க உலகத்துக்கு ஏகப்பட்ட விஷயத்த சொன்னாலும் நம்மாளுங்க தேடி போய் வாங்குறது சரோஜா தேவி புக் தான் இங்கிலிஷ்ல சொன்னா Kushwanth Singhs COMPANY OF WOMEN ( நாங்களும் படிச்சிருக்கோம்). சுதந்திரத்துக்கு முன்னாடி நாமெல்லாம் அடிபட்டுகிட்டு இருந்த காலத்துலேயே நல்ல புக்ஸ்லாம் வந்துது எப்போ கேட்டுபோசுன்னே தெரில, இப்போ எந்த நடிகர் யார வெச்சுருக்காரு, யார் யாரெல்லாம் விவாகரத்துக்கு கேற்றுகாங்க, ராத்திரி பார் ல தண்ணி அடிச்சாங்களா , யார் யாரோட கள்ள தொடர்பு வேசுருகாங்கன்னு நாம தசாவதாரம் கமல் மாதிரி உலகளாவிய விஷயத்த தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம் அயிடோம், என்ன மாதிரி ஒரு சில்லற பய்யன் கொடுக்குற இந்த மாதிரி ஒரு சின்ன உதாரணமே இவ்ளோ கேவலமா இருக்கே இன்னும் நாம பாக்க வேண்டிய விஷயம் எத்தன இருக்கு....வேணாம் சாமி.....இன்னும் அத்தனை குப்பையும் தோண்டினா விஷ வாயு தாக்கி நாம மூர்ச்சை ஆயுருவோம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் நு பாடினது போய் இப்போ
எப்போ திருந்தும் இந்த மானிட மாக்கள் நு பாடி இருப்பாங்க நம்ம பெரியவங்க...

இதன இருந்தும் நாம நாம அன்றாட வேலையெல்லாம் செய்றோம், அவங்கள மாருன்னு சொல்றது பதிலா நாம மொதல்ல நம்மள மாத்திப்போம், தனி மனித ஒழுக்கத்தையும், கொஞ்சமா நேர்மயோடவும் இருப்போம் ( ரொம்ப ஓவரா போறேனோ, மன்னிச்சிருங்கப்பா ) .

வழக்கம் போல தீவிரவாத அச்சுறுத்தல், swine Flu இப்படி போன்ற ப்றேச்சனயோட தான் இந்த வருஷம் சுதந்திரதினம் வருது. நாம எப்பவும் போல லேட்டா எந்திருச்சு, TV ல ரோஜா படத்த பாக்க வேண்டியது தான்..

தமிழா தமிழா கண்கள் கலங்காதே......
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே....
வாழ்க ஜனநாயகம், வாழ்க சுதந்திரம்..
ஜெய் ஹிந்து..........

June 17, 2009

2011 இல் தமிழக முதல்வர் யாரு? அவருக்கு என்ன பேரு?

வணக்கம்,

இந்த கேள்வி ரொம்ப பேருக்கு ரொம்ப நாளா மனசுக்குள்ளயே கேட்டுட்டு இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

60 வருஷமா அரசியல்ல இருக்க கலைஞர்ல இருந்து 6 மாசத்துக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்ச கார்த்திக் வெரைக்கும்சொல்ற விஷயம் 2011 இல் நான் தான் தமிழக முதல்வர்.

எப்படி இவங்க எல்லாரும், எந்த அடிப்படைல இந்த விஷயத்த சொல்றாங்கன்னு தெரில. செரி நாம நம்ம விஷயத்துக்கு வருவோம். இப்படி 2011 இல் முதல்வர் நான் தான் சொல்ற கூட்டத்தோட இன்னொருத்தர் சேர போறாரு.

அவருக்கு அறிமுகம் ரொம்ப தேவ இல்ல. தமிழ் நாட்டுல இருக்குற மிக சிறந்த "நடிகர்கள்" அப்படின்னு ஒரு பட்டியல் போட்டா அதுல சார் பேர் தான் முதல் வரிசையில இருக்கும். நடிப்புல மர்லன் ப்ரண்டோவ மிஞ்சினவரு. ஸ்டைல் ல அழ பாசினோ வா மிஞ்சினவரு. அக்ஷன் ல அர்ணல்ட மிஞ்சினவருன்னு இப்படி பல பெற பின்னுக்கு தள்ளி இனிமே பின்னுக்கு தள்ள ஆளே இல்லாத ஒப்பற்ற நடிகர்.
அவர் ஏற்காத கதாபாத்திரங்களே கெடயாது.( தூ....) ,போடாத கெட் அப்பே இல்ல ( கர்மம்).தன்னோட பொறந்த நாளான ஜூன் 22 அம தேதி தனது அரசியல் பிரவேசத்த அறிவிக்கரத இருக்காரு. "நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன் இன்றைய தொண்டன் நாளைய தலைவன்" இப்படி ஒரு போன்மொழிய உதிர்த்த பொன்மன செம்மல்.

முன்னாடி என்னோட தலைவன் சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டு திரிஞ்சாரு, இப்போ திடீர்னு எம்.ஜி.ஆர்ர். ஓட தீவிர ரசிகர தன்ன சித்தரிக்க விரும்புராறு.
அது எதுக்குன்னுதான் தெரில.

இவர் யாரு, இவ்ளோ உயர்ந்த பண்புகள் உள்ள இந்த பண்பாளன் யாரு அப்படின்ற கேள்வி உங்களுக்கு வரும்.பதில் இதோ. அவர் இதய தளபதி,இனிய தளபதி,இளைய தளபதி டாக்டர் விஜய்.

நடிப்புல பல சாதனைகள முறியடிசுட்டு இனிமே முறியடிக்க ஒரு சாதனை கூட இல்லாததால இப்போ அரசியல்ல எறங்கி மக்களுக்கு " சேவை " செய்யலாம்னு முடிவு எடுடுருக்காரு நம்ம நடிப்பு புயல். கடைசியா அவர் நடிச்ச 3 கலை காவியங்களான அழகிய தமிழ் மகன்,குருவி மற்றும் வில்லு ஆகிய படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றி பெற்றதால அவருக்கு என்ன கேரக்டர் இனிமே கொடுக்கலாம்னு தமிழ் திரை உலகமே தலை சுத்தி கீழே உழுந்து கெடக்குது.மணிரத்னம் , ஷங்கரெல்லாம் ஊற ஓடிட்டத கேள்வி. இப்போ வேட்டைக்காரன் அப்படின்னு ஒரு புதுமையான படத்தில நடிச்சிட்டு இருக்காரு.

இதெலாம் முடிச்ச பிறகு உங்க உண்மை தொண்டன். அஞ்சா நெஞ்சன், மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடு பட வருகிறார் வருகிறார் உங்கள் இளைய தளபதி.

இது நடிச்சு சேவை புரிஞ்சதுல அவர் அவ்ளோ சொத்து எதுவும் சேக்கலீங்க. என்ன வடபழனி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல சஞ்சய் திருமண மண்டபமும், SSR பங்கஜம் திரை அரங்கு எதிர்ல ஷோபா கல்யாண மண்டபமும்அப்புறம் போருர்ல ஒன்னு, வடபழனில 2 வீடு. நீலாங்கரைல 2 வீடு icici பேங்க் ஷேர் நு அப்புறம் அவரோட " 200 நாள் ஓடின வெற்றி படங்களுக்கு " வாங்குற சம்பளம் இப்படி அவர் செர்த்துருக்க சொத்து ரொம்ப கம்மி. அதனாலேயே அவர் அரசியலுக்கு வரலாம்.

சின்ன வயசுலேர்ந்து ரொம்ப "கஷ்டப்பட்டு" வளர்ந்தவர்னு அவரே சொல்றாரு என்ன கஷ்ட பட்டாருன்றது அவருக்கு தான் வெளிச்சம்.சினிமா la நடிக்க வெக்க அவங்கப்பா ஒத்துகாததலா உதயம் திரியாரைங்கில் உண்ணாவிரதம் இருந்து சாதிச்சத பெருமையா குங்குமம் பத்திரிகைல பகிர்ந்துகிட்டாறு நம்ம இளைய தளபதி. அவ்ங்கப்பவ மொதல்ல அடிக்கணும் உண்ணாவிரதம் இருந்தப்ப அப்படியே போகட்டும்னு விடாம நடிக்க வெச்சு இப்போ பல பேரோட கழுத்த அருக்குராறு நம்ம டாக்டர்.

இப்போவே அவரோட தேர்தல் அறிகைலாம் பாக்க எங்களுக்கு பயங்கர ஆர்வமா இருக்குது. படத்துலலாம் எப்படி பஞ்ச் டயலாக் பேசுறாரு அதே மாதிரி மீட்டிங்ல பெசுவார்ல அத பாத்து கை கொட்டி சாரி கை தட்டி சிரிக்கலாம்ல. இன்னும் நாம என்னன்னா கொடுமையெல்லாம் அனுபவிக்கணும்னு இருக்குன்னு தெரிலையே.
பாப்போம் அதான் நம்ம தலைஎழுத்துனு இருந்தா யாரால மாத்த முடியும்.
கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிட்டு முடிச்சிடறேன்.

உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் இது நான் சொல்லங்க நம்ம தளபதியோட கொடில இதான் இருக்குது...

வாழ்க ஜனநாயகம்.....................

June 10, 2009

ரோதனை சாரி தோரணை

நம்ம புரட்சி தளபதி விஷால் நடிச்சு இப்போ வெளி வந்து " வெற்றிகரமா " "ஓடிட்டு " இருக்க தோரணை பத்தின சிறப்பு அம்சங்கல இப்போ நாம பாக்க போறோம் .

அம்சம் ஒன்னு : புரட்சி தளபதி பட்டத்த வாங்கின பிறகு வர மூணாவது படம் தோரணை.

அம்சம் ரெண்டு : காணாம போன அண்ணன இருவத்தி அஞ்சு வருஷம் கழிச்சு கண்டு பிடிக்கிற தம்பி பத்தின ரொம்ப வித்யாசமான கதை தான் தோரணை.

அம்சம் மூணு : இளைய தளபதி விஜய்க்கு போட்டியா நம்ம புரட்சி தளபதி விஷால் அதிகபட்ச பஞ்ச் டயலாக் பேசி நடிச்ச படம் தான் இந்த தோரணை

அம்சம் நாலு : கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த சில தமிழ் படங்கள்ல முக்கியமான எடத்த புடிச்ச படம் தான் தோரணை

அம்சம் அஞ்சு : கதையின் நடக்குற இடம் .இதுவேரைக்கும் எடுக்காத இடமான மதுரைல ஆரம்பிக்குது தோரணை

இப்போ படத்தோட கதைக்கு ( கர்மம் டா இந்த படத்துல கதை வேற இருக்கா ). சின்ன வயசுல தன்னோட அம்மா திட்டினாங்க அப்படின்ன்ற ஒரு காரணத்துக்காக ஊற விட்ட ஓடின அண்ணன நெனைச்சு அம்மா திடீர்னு ஒரு நாள் காலைல எழுந்த உடனே மனமுருகி நிக்குறாங்க. இத பாக்குற நம்ம ஹீரோ விஷால் உடனே தாயின் துயர் துடைக்க சென்னை போறாரு.
மதுரைல இருந்து சென்னைக்கு பஸ்ல வந்து கோயம்பேடுல இறங்குறாரு. அப்போ தான் ஒரு ட்விஸ்ட்தமிழ் சினிமா வோட விதி படி ஹீரோ எப்பவும் மதுரைல இருந்து தான் வரணும்,வந்து இறங்கின உடனே பஸ் ஸ்டாண்ட் லையே ஒரு மர்டர் நடக்கும். இங்கயும் நடக்குது. அப்புறம் இன்னொன்னு அது எப்படிங்க மதுரைல காணாம போன அத்தனை பேரு சென்னைக்கே வாரங்க
அது கூட பரவல்ல தேடி வரவங்களும் கரெக்டா சென்னைக்கே வருவாங்க என்னவோ போங்க.

சென்னைக்கு வந்த நம்ம ஹீரோ விஷால் இங்க ரெண்டு பொறிக்கி கும்பல் கிட்ட மாட்றாரு. அடடா யாரவது இது மாதிரி ஒரு தடவையாவது திங் பண்ணி இருக்காங்கள சொல்லுங்க.

அந்த ரெண்டு கும்பலையும் சமாளிச்சு,ஒரு பிகரையும் உஷார் பண்ணி, அண்ணனையும் கண்டுபுடிச்சு, தாயோட துயர் துடைச்சு, எப்படி நம்ம காதுல பூ சுத்துறாரு அப்படின்னு சொல்ல வர கருத்துள்ள படம் தான் தோரணை.

இந்த படத்தோட கதாநாயகிய பத்தி சொல்லலைன்னா நாக்கு இழுத்துக்கும். சும்மா சொல்ல கூடாது ஸ்ரேயா இந்த படத்துல " பிரமாதமா நடிசிருகாங்க ". விஷால் போட்ருக்க ஆடைகளுக்கே எழுவத்தி அஞ்சு லட்ச ரூபா தான் செலவாச்சாம் ஆனா ஸ்ரேயாவோட டிரஸ் ?? அவர் அணிந்த ஆடைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம். வர வர கைக்குட்டை வேலையும் கண்ணா பின்னானு ஏறிடுச்சு போலருக்கு . சரி அத விடுங்க.

இப்போ படத்தோட வில்லனுங்களுக்கு வருவோம் பிரகாஷ் ராஜ் & பொல்லாதவன் கிஷோர் இந்த படத்துல வில்லன். கொடுத்த காசுக்கு மேலேயே ரெண்டு பெரும் கத்தி இருகாங்க சாரி நடிச்சிருக்காங்க. இந்த ரெண்டு பேர்ல யாரு நம்ம தளபதியோட அண்ணன் ன்னு கண்டுபிடிக்கிறது தான் படத்தின் கதை, ட்விஸ்ட் அப்படின்னு சொல்லலாம்.

கீதா தளபதியோட அம்மாவா நடிசிருகாங்க. படத்துல ஒதைகனும்னு நாம நெனைச்சா அந்த ஆள் வேற யாருமில்ல கீதா தான். ஏன்னா பய்யன காணோம்னு அவங்க பீல் பண்ணதால தான் தளபதி சென்னைக்கு வந்து அழிச்சாட்டியம் பண்றாரு. பொய் தொலையுது விடுங்க.

தனி பட்ட முறைல பு.தா ( புரட்சி தளபதி ) அவர் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி நெறைய இருக்குன்னாலும் கொஞ்சமா கேக்குறேன் .

உங்களுக்கு ஏன் இந்த வேல. நீங்கெல்லாம் சினிமால நடிக்கிலன்னு யார் அழுதா. ஏன் யா கொஞ்சம் நஞ்சம் கரெக்டா இருக்குற தமிழ் பட உலகத்த கேடுக்குறீங்க.
" நீ அடிச்சா பணம் நான் அடிச்ச பொநம் " இந்த மாதிரி பஞ்ச் டயலாக் ல உங்களுக்கு தேவையா. யார் சொல்லி நீங்க இதெல்லாம் செய்றீங்க. சண்டகோழி ஏதோ தெரியுமா ஓடிடுச்சு. அதுக்காக எல்லா படத்துலேயும் ஒரே மாதிரி நடிச்சு ஏன் எங்க கழுத அறுக்குறீங்க. சத்யம் படதுகப்புரமவது திருந்துவீங்கன்னு நெனைச்சோம், திருந்தல. மனசாட்சிய தொட்டு சொல்லுங்க உங்க படத்த நீங்க தனிய உக்காந்து பாபீங்களா. ஆனா நீங்க மனசாட்சிய குத்தி முர்டேர் பண்ணிட்டு நல்லா தானே இருக்குன்னு சொல்வீங்க. அப்படி சொல்லும்போது நீங்க தோரணய பக்கனும்ன்றது தான் என்னோட பணிவான வேண்டுகோள் .

சத்யம் தவறினதுகப்புரம் இந்த தோரணை பாக்குறவங்களுக்கு சோதனை மற்றும் வேதனை.

June 8, 2009

நன்றி உரைக்கு நன்றி உரை

நம்ம பாட்னர் இருக்காரே ரொம்ப விவரமானவர்,வித்யாசமானவர்,விவகாரமானவர். அவர் உதயசூரியனுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிச்சு எழுதி இருக்காரே அத படிச்சாலே புரியும். கலைஞர் உடன் பிறப்புகளுக்கு முரசொலில எழுதுற கவிதை மாதிரி இருக்கு பாருங்க. அவர் மாதிரி கவிதை நடைல என்னால எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சத எழுதுறேன்.

இந்த நாடாளுமன்ற தேர்தல்ல தோத்தவங்க பொதுவா சொன்ன காரணங்கள் என்னனு நாம கொஞ்சம் இப்போ பாக்கலாம்.
எந்த பட்டன அழுத்தினாலும் அதாவது இரட்டை இலைல அழுத்தினா அது நேர உதயசூரியன்ல வோட்டு பசிவாச்சு.

அப்புறம் பணத்தால எத வேணாலும் வாங்கிடலாம் ன்ற போக்கு. பணம் கொடுத்து வோட்டு போட வெச்சுட்டாங்க .

தேர்தல் நிர்வாகம் ஆளும் கட்சிய கவனிக்கல. தேர்தல் நிர்வாகத்தோட கண்காணிப்புல ஆளும் கட்சி ரோவ்டிசம் பண்ணாங்க.

இல்ல நான் தெரியாம தான் ஒன்னு கேக்குறேன் 2 பேரையும் ( வேற யாரு நம்ம அன்பு சகோதரியும்,டாக்டர் அண்ணனையும் தான். ). ஒரு தடவையாவது மக்கள் கொடுத்த தீர்ப்ப ஏத்துக்கறோம். தோல்விய ஒப்புகறோம், எதிரி கட்சியா இல்லாம ஒரு நல்ல எதிர் கட்சியா நாங்க செயல்படுவோம் அப்படின்ற நல்ல வார்த்தையெல்லாம் உங்க வாய்ல இருந்து உங்க வாழ் நாள்ல வரவே வராதா. எப்போ தான்யா நீங்கெல்லாம் திருந்துவீங்க.

எப்பவும் அரைச்ச மாவேயதான் அறைபீங்களா. முன்னாடி வாரிசு அரசியல்னு சொன்னீங்க. உங்க வாரிசுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தும் அமைதி ஆயிடீங்க. இன்னொருத்தார் எனக்கு குடும்பமே கிடையாது, வாரிசே கிடையாதுன்னு சொன்னாங்க. ஆனா வளர்ப்பு மகனுக்கு நூறு கோடில கல்யாணமாம் , எப்போ நாங்கெல்லாம் தெரு கோடில நிக்கும் போது. குடும்பே இல்லன்னு சொல்றீங்க ஆனா சிறுதாவூர் பங்களா, கொடனாடுல எஸ்டேட், யாருக்குங்க இதெல்லாம்.நீங்க சொல்ற விஷயமெல்லாம் உண்மையாகவே இருந்தாலும் அதையே சொல்லி சொல்லி மக்களுக்கு மத்தியில உங்க madhippe கேட்டு poidum polarukku . டாக்டர் அய்யா இருக்காரு பாருங்க அவர் தான் உலகத்துலேயே ஒழுகதுக்கு பிறந்தவர் மாதிரி பேசுவார். என் குடும்பத்தார் யாரவது கட்சி பதவியோ அரசு பதவியோ வகித்தால் என்ன சாட்டையால் அடிங்கன்னாறு. அப்போ அன்புமணி யாருக்கு பொறந்தாரு.இந்த விஷயத்த கேட்டா உங்க கட்சிய சேர்ந்த தீரன் இப்போ எங்க இருக்காரு. என்ன கொடும டொக்டர் அய்யா இது.

உங்களுக்கு ஆளும்கட்சி மேல கம்ப்ளைன்ட் பண்ண இன்னும் நெறைய ஐடியா இருக்கு நான் வேணா எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் சொல்றேன்

டிவி ல ஜெய டிவி யா வெச்ச அது நேரா கலைஞர் டிவி க்கு போயடுதுன்னு புகார் கொடுக்கலாம்.

புரட்சி தலைவிக்கு வர மெசேஜ் எல்லாம் அழகிரியோட செல்லுக்கு போகுதுன்னு சொல்லலாம்.

மத்திய அமைச்சர் ஆவதற்கு எம்.பீ தேர்தலில் ஜெயிக்க தேவ இல்லை என்ற சட்டம் கொண்டு வர சொல்லி ஆர்பாட்டம் செய்யலாம்.

வைகோ மெகா சீரியலில் நடிக்க செய்து அவரை அழ வைத்து அனுதாப அலையை உருவாக்கலாம்.

தைலாபுரம் தோட்டத்துல விளையுற அதன மம்பாழத்தையும் கலைஞர் அவர் ஆளுங்கள விட்டு ராவோடு ராவா ராவிட்டு போயட்ராருன்னு காமெடி பண்ணலாம்.

இன்னும் நெறைய இருக்கு ஆனா அதனையும் பிரியா கொடுக்க எனக்கு மனசில்ல.
இதனால நாங்க சொல்ல விரும்புரதுன்னு ஒன்னே ஒன்னு தான். திருந்துங்க மேலும் மேலும் மக்களை முட்டாள் ஆக்காதீங்க. நல்லதோ கேட்டதோ உண்மைய முதல்ல ஒதுகொங்க. நாற்பதுக்கு நாற்பதுன்னு ஜெயிச்சப்ப சந்தோஷமா இருந்துட்டு இப்போ அணி மாறினவுடனே அப்போ கூட்டணி ல இருந்ததால ஒன்னும் பண்ண முடில இப்போ சகோதரி சொன்ன வுடனே தான் புரிதுன்னு ஒரு உலக மகா உண்மைய சொன்னாரு பாருங்க பா. மா.க நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அடடா அத மொதல்ல நிறுத்துங்க. தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தவ மாடு மேய்க்க சொன்ன மாண்பு நம்ம டாக்டர் அய்யாவையே சேரும் . அவரு அறிவுள்ளவருங்க மாடு மேய்ச்ச கூட போழைசிபாறு ஆனா நீங்க இப்படி எல்லாரையும் குறை சொல்லிட்டே அன்பு சகோதரி கூட காலம் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவீங்க .

இந்த விஷயத்துல அன்பு சகோதரியும் கொஞ்சமும் சலைச்சவங்க இல்ல கலைஞர மூட்டை மாதிரி தூக்கிட்டு வராங்கன்னு சொன்னவங்க, தானே ஒரு மூட்ட மாதிரி தான் இருகொம்ன்ற விஷயத்த மறந்துட்டாங்க. யாருக்கும் உபயோகம் இல்லாத மண் மூட்டை.

பேச்சுல கொஞ்சமாவது நாகரீகத்த வலத்துகொஅங்க. உண்மைய பேச கத்துகோங்க. இனிமேலாவது வாழுற காலத்துல மனுஷ ஜென்மங்களா வாழ முயற்சி பண்ணுங்க. நீங்க கும்புட்ற அந்த கடவுள் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கட்டும்.
வாழ்க ஜனநாயகம்.....!

May 22, 2009

கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா...

தமிழ்நாட்டுல திமுக தயவால 26 சீட் ஜெயிச்சதுக்கு அப்புறம் உங்க கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா... என்ன கொடுமை சார் இது..
ஏன்யா திமுக இல்லாம நீங்க தமிழ்நாட்டுல ஒரு சீட்டாவது ஜெயிச்சிருக்க முடியுமா ?
உங்க வெற்றிக்காக எங்க தலைவர் கலைஞர தேடி வந்தீங்க , அண்ணன் அழகிரியும் தளபதி ஸ்டாலினும் தேவைபட்டாங்க , உங்களால செலவு பண்ணமுடியாத தொகுதிகள்ல செலவுபண்ண திமுக தேவைப்பட்டது, இப்போ நீங்க மத்தியில ஆட்சி அமைச்சிடீங்க, அதுல மட்டும் திமுக மந்திரி பதவி கேட்டா அது அநியாயமா படுது.. உங்கள மாதிரி நன்றிகெட்டவங்கள எதால அடிக்கறது..

அண்ணன் KKSSR இல்லாம மாணிக் தாகூர் ஜெயிசிருப்பாரா..
அண்ணன் அழகிரி இல்லாம ராமசுப்பு, ஆரூன் ரஷீத், சித்தன் ஜெயிச்சிருபாங்களா...தயவு செஞ்சு நெனச்சி பாருங்க கதர்மக்களே..
டி ஆர் பாலுவுக்கும் , ராஜாவுக்கும் மந்திரி பதவி குடுக்க முடியாது, ஏன்னா அவங்க மேல ஊழல் புகாறு இருக்குன்னு சொல்றீங்களே, அப்போ நீங்க மந்திரி பதவி குடுக்கற எல்லாருமே யோக்கியனுங்களா, அப்புச்சிய
எடுத்துக்கோங்க அவரு மேல இல்லாத ஊழல் புகாரா, அப்படி பார்த்தா உங்க கதர் கட்சில எவன்யா யோக்கியம்?
திமுகவுக்கு போறாத வேளை, உங்களோட சப்போர்ட் இங்க சட்டசபைல தேவைப்படுது, உங்கள நம்பினதுக்கு நல்லாவே பட்டை நாமத்த போட்டுருக்கீங்க.. எங்களுக்கும் காலம் வரும், ஆனா அன்னிக்கு கோஷ்டியா உடஞ்சி கெடக்கற உதிரிங்க கூட இருக்கமாட்டாங்க, பாஜக கு தமிழ்நாட்டுல என்ன நிலைமையோ அதே தான் உங்களுக்கும். அது வரை ஆடுங்க!!!
கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா..

May 18, 2009

வெற்றி பெறசெய்தமைக்கு நன்றி

அதிகமான இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வை வெற்றிபெறசெய்த அனைத்து வாக்காளர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றி நன்றி நன்றி !!!

இந்த வெற்றி திமுகவின் வெற்றி, கலைஞரின் உடல்நலம் பாராது உழைக்கும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு தொண்டு செய்ய இன்னொரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்ட கழகத்தின் வெற்றி, ஈழபாசம் கொண்ட ஒரே உண்மையான தலைவர் என்று மக்கள் அங்கீகரித்த வெற்றி, குடும்ப அரசியல் என்று கேலிகூத்துக்கு எதிரான ஓர் வெற்றி, இந்த தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும் என்று கணக்கு போட்டவர்களுக்கு சவுக்கடி குடுத்த வெற்றி, முரசு தனியாக ஒலிக்க முடியாது என்று கேப்டனுக்கு உணர்த்திய வெற்றி, ஜேஜே தான் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பார் என்ற அளவுக்கு அவரை தலைமேல் தூக்கி வைத்து ஆடிய மீடியாவுக்கு எதிரான வெற்றி, வரலாறு காணாத தோல்வியை தழுவுவார்கள் என்று எழுதிய ரிப்போர்ட்டர், விகடன், துக்ளக் ஆகிய பத்திரிக்கைகளின் கணக்கெடுப்புக்கு எதிரான ஓர் வெற்றி, ஈழத்துக்கு குரல் கொடுக்கும் ஒரே தமிழன் என்று எண்ணிய வைகோ அவருடைய சொந்த தொகுதியில் தோற்கடிக்கபட்டதில் கிடைத்த வெற்றி, சூரியன் வெப்பத்தை ரெட்டை இலையும், மாம்பழமும், பம்பரமும், கதிர் அரிவாளும், முரசும் தாங்க முடியாது என்று உணர்த்தியதில் கிடைத்த வெற்றி, என்றென்றும் கலைஞர் வாழ்க என்று வளமுடன் வாழ்த்தி அவருக்காக வேலை பார்த்த ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் கிடைத்த ஒரு வெற்றி, தென்னகத்தை தன் நெஞ்சகத்தில் தாங்கிய அஞ்சாநெஞ்சன் அருமை அண்ணன் அழகிரிக்கு கிடைத்த வெற்றி, நம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி, தமிழுக்கு கிடைத்த வெற்றி, பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த நம் கலைஞர் மேல் மாறாது பற்று கொண்ட நம் இளைஞர் படைக்கு கிடைத்த வெற்றி, கைக்கு தமிழகத்தில் கைகுடுத்து மத்தியில் நிலையான ஆட்சி அமைய காரணமாக இருந்த உதயசூரியனுக்கு கிடைத்த வெற்றி, இது போன்ற மேலும் பல வெற்றிகளை வென்று குவிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறோம் நன்றி வணக்கம்...

May 3, 2009

உங்கள் பொன்னான வாக்குகளை..

தமிழ்நாட்டுல யாருக்கும் யாருக்கும் போட்டி என்பதே மறந்து போச்சு, ஏன்ன இந்த பாமக மற்றும் கம்யூனிஸ்ட் எல்லாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிட்டே இருக்காங்க!!
நீங்க அணி மாறுவதற்கு கூறும் காரணங்கள் நியாயமானதா இல்லையா என்பது பற்றி நான் பேச போவதில்லை..
ஆனால், அஞ்சு வருஷம் ஒரு வீட்ல இருந்துட்டு வெளியேறின பிறகு அந்த வீட்ல பயங்கர கஷ்டப்பட்டதாகவும், தண்ணி வராததற்கு அந்த வீட்டு முதலாளி தான் காரணம், அவரு என்னை சுத்தமா மதிக்கல, குடியிருக்கரவங்களுக்கு எதுவுமே செய்யல, எல்லோருக்கும் துரோகம் இழைக்கறார் அப்படின்னும் எதுக்குய்யா சொல்றீங்க.. அந்த வீட்ல இருந்த போது தண்ணி ஒழுங்க வரலே, அந்தாளு உங்கள மதிக்கலே, துரோகம் இழைச்சுடாங்கனு உங்களுக்கு தெரியலையா, அப்போ என்ன ம*** புடுங்கிட்டு இருந்தீங்களா அப்படின்னு கேட்கணும்னு எல்லோருக்கும் தோணுதே!
அதுக்கும் பல காரணங்கள சொல்வீங்க.. ஏன்னா நீங்க எல்லாம் மரங்கள வெட்டி போட்டுட்டு பசுமை தாயகம்னு பிரச்சாரம் பண்றவங்க...
அஞ்சு வருஷங்களுக்கு ஒரு முறை அல்லது பல முறை சிவப்பு தோழர்களின் மறுமலர்ச்சி நடக்கும், பாஜக ஆதரிச்சா அது உடனே மதச்சார்பற்ற கொள்கைக்கு இடையூறு வந்துடுமே அதனால அணுசக்தி ஒப்பந்தத்துல முதுகுல குத்தியதை மறந்து மன்னித்து திரும்பவும் கை கட்சிக்கு கை குடுப்பார்கள்...
அது வரையில் என்ன செய்வது கொள்கைகள் சுத்தமா ஒத்து போகாத சில கட்சிகளை சேர்த்து கொண்டு மூன்றாவது அணி, நான்காவது அணி என்று காமெடி பண்ண வேண்டியது... இதென்ன ஐபிஎல் கிரிக்கெட் னு நெனச்சீங்களா, எட்டு அணிகள் மோதுவதற்கு....
ஆக மொத்ததுல, இந்த தடவையும் மக்களாகிய உங்ககிட்டே தான் தீர்ப்பு இருக்கு, பல விஷயங்களை யோசிச்சி பாருங்க, அரிசி மற்றும் அத்தியாவசமான பொருட்கள குடுத்தது யாரு, இலவச டிவி குடுத்தது யாரு, மேம்பாலங்கள கட்டி குடுத்தவர் யாரு, சேதுசமுத்திர திட்டத்த தடுத்தவங்க யாரு, திடீர்னு ஈழபாசம் வந்தது யாருக்கு, சினிமா ஓட மாடேங்குதுனு அரசியல்ல சேர்ந்து டயலாக் பேசறவங்க யாரு, இதையெல்லாம் யோசிச்சி பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் குத்துங்கள்..ஏன்ன அவங்கள தவிர யாருக்கும் ஆள்வதற்கு அருகதை இல்லை, சொன்னத மட்டும் இல்லை சொல்லாததையும் செய்வாங்க....

April 30, 2009

செருப்பு பிஞ்சிடும் (பறந்திடும்)

டைட்டில் என்னடா இப்படி இருக்கேன்னு பாத்து யாரும் பயப்பட வேண்டாம். எந்த நேரத்துல திருவாளர் முன்டாசர் உலக நாட்டமை புஷ் மேல ஷூ எரின்ஜாரோ தெரில நம்மாளுங்க ஆளாளுக்கு எங்கயாவது பிரஸ் மீட் இருக்குன்னு தெரிஞ்சாலே கைல மைக், பேனாவோட போறாங்களோ இல்லையோ நல்ல பிஞ்ச செருப்பா பாத்து போட்டுட்டு போறாங்க. எதுக்கு கூட்டத்துல தொலைஞ்சுரும்ன்ற பயத்துலையா இல்ல நாம ரொம்ப சிம்பிள் ஆ இருக்குற மாதிரி காட்டவா அதுவும் இல்ல. அப்போ எதுக்கு. வேற எதுக்கு. அந்த கூட்டத்துலேயே இளிச்ச வாயன் யாரு........அந்த பிரஸ் மீட்டுக்கு கூப்டவன் தான். கூப்ட்டது யாரு. எல்லாம் ரொம்ப சின்ன பசங்க தான். மத்தியநிதி அமைசசர் பா. சிதம்பரம், பிரதமர் மந்திரி மன்மோகன் சிங்க், காங்கிரஸ் காரர் நவீன் ஜிண்டால், அதுக்கப்புறம் அத்வானி இப்போ கடைசியா எடயுரப்பா. என்ன தான் இவங்களுக்கு இப்படி சின்னதா தண்டனை கொடுதிடாங்கன்னு கஷ்டமா இருந்தாலும் அவங்களுக்கு உண்டான மரியாதைய நாம கொடுத்து தானே ஆகணும். பொருளாதாரம் பின்னால இருந்தாலும் பரவா இல்ல நாம மொதல்ல அணு சக்தி ஒப்பந்தத்த அமெரிக்கா காரன் கிட்ட போட்டுடுவோம்னு சொன்ன நம்ம சிங்குக்கும், பா.சி கும், ஊரு எக்கேடு கேட்டு போன நமக்கு என்ன நாம ஜெயிகனும்ன யார வேனாலும் எத்தன பெறேபட்ட வேணாலும் கொளுத்தலாம் , எத்தன பில்டிங்க வேணாலும் இடிக்கலாம் அப்படின்னு பில்லா அஜித் மாதிரி டயலாக் விட்ட அத்வானி மேலயும், பக்கத்து மாநிலத்து காரன் அவனுக்கு வர தண்ணிய வெச்சு அவன் மாநிலத்துக்கு குடி நீர் திட்டம் கொண்டு வந்தா திடு திப்புன்னு அந்த ஊருக்கு வந்து சும்மான காட்டியும் விஜயகாந்த் படத்துல வர மாதிரி ஒரு மப் எ கொண்டு வந்து ஹொகேனக்கல் நம்மக்கே சொந்தம் அப்படின்னு ஒரு ரகசியத்த வெளியிட்ட நம்ம எடியுரப்பா மேல நாம செருப்பு வீசி அசிங்கபடுத்தி இருக்கோம் . மக்களே தினக் பண்ணுங்க இதெல்லாம் ந்யயமா சொல்லுங்க. இப்படி பட்ட நல்லவங்க மேல நாம செருப்பு வீசலாமா .

அப்படி பாத்தா ஆபீஸ் கு போனா வேல செய்ய சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் ,இந்த வருஷம் சம்பள உயர்வு இல்ல nu சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் வீட்ல கேபிள்ல நாம `விரும்புற ` சேனல் வரமாட்டேங்குது அப்போ கேபிள்காரண அடிக்கணும் ,பவர் கட் ஆகுது அப்போ மின் துறை அமைச்சர அடிக்கணும் , இவ்ளோ ஏங்க TASMAC போனா நாம கேக்குற brand விட்டுட்டு மிச்ச எல்லா brandum இருக்குதுன்னு சொல்ரானன்களே அவனுங்கள அடிக்கணும் . அடிக்க முடியுமா. இல்ல அடிச்சிட்டு தான் வெளில வர முடியுமா. இப்படி மக்கள் எல்லாத்துக்கும் சட்டத்த தன் கைல sorrynga கால்ல போற்றுக்கத எடுத்தா என்ன ஆகும் யோசிங்க.

அதுவும் இல்லாம நம்ம ஆளுங்க எப்பவும் ஆசிட் முட்ட, கல்லு, பெட்ரோல் பாம்
இப்படி சின்ன சின்ன ஐடெம் எரிஞ்சு பழக்க பட்டவங்க, அதான் திடிர்னு செருப்பு மாதிரி ஒரு பெரிய மேட்டர எப்படி ஹேண்டில் பண்ணனும்னு நம்ம ஆளுங்களுக்கு தெரில...கூடிய சீக்கிரம் நம்ம ஆளுங்க அதுலயும் முன்னேறிடுவாங்க..... ....இனிமேல் மேல சொன்ன மாதிரி பெரிய மனுஷங்க மேல செருப்பு அடிச்சு
செருப்புக்கு கேவலத்த உண்டாகதீங்க.. அத விட அந்த மீடிங்க்கு போகாதீங்க போனா கோபம் வர தான் செய்யும் என்ன பண்றது........ பார்ப்போம் இத விட நல்ல விஷயத்தோட நாங்க உங்கள நாளைக்கு பாக்குறோம். இப்போ கெளம்புறோம்
கெளம்புறோம். ...

April 29, 2009

கேப்டன் நா சும்மா இல்ல

அன்புடையீர்,
வணக்கம், ஏற்கனவே என்னோட partner உங்களுக்கு மூன்று தடவ வணக்கம் சொல்லிட்டாரு, இதோ என்னோட வணக்கத்தையும் சேர்த்துகோங்க..

நான் முதன் முதலில் ஆரம்பிப்பது கேப்டன் பத்தின நியூஸ் ..இவரு ஏதோ இந்தியன் டீம் கேப்டன் அல்லது கப்பல் கேப்டன் அப்படின்னு நெனச்சிடாதீங்க ஏன்னா தமிழ்நாட்டுல பொறந்த குழந்தைக்கு கூட தெரியும் கேப்டன் நா அது விஜயகாந்த் தான் ..
இவரும் பலரை போல அரசியல் கடலில் குதிச்சி நீந்தி எப்படியாவது அடுத்தவன் துணையே இல்லாம ஜெயிக்கணும் நு துடிக்கராறு ஆனா எங்கள் முடிச்சவுக்கி சங்கம் சார்பாக அனைவருடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம், நீங்க படத்துல அடிக்கற ஒவ்வொரு பல்டிக்கும் கைதட்டி பிகில் அடிச்சோம் ஆனா நீங்க அரசியல்ல அடிக்கற பல்டிக்கு எங்களால ஈடு குடுக்க முடியல, எங்க தோல்விய ஒத்துகறோம் ...
என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வெய்யுங்கள், உங்களுக்கு ரேஷன் கடையிலிருந்து பொருட்கள் வீட்டுக்கு விநியோகம் செய்யபடும் அப்படின்னு சொன்னீங்க
சிகுன்குனியா வந்ததற்கு கலைஞர் தான் காரணம், நான் மட்டும் முதலமைச்சராக இருந்தால் தமிழ்நாட்டில் கொசுவே இருக்காது நு சொன்னீங்க
அய்யாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, அம்மாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, இந்த அண்ணனுக்கு ஒரு தடவ வாய்ப்பு குடுங்க அப்படின்னு கெஞ்சி கேட்டுன்டீங்க
திருமங்கலத்துல என்னடா நா , எல்லா கட்சிகாரங்க கிட்டேயும் காச வாங்கறதுக்கு பதிலா பண்ணி மேய்க்க போலாம் அப்படின்னு மக்கள் மேல உங்க கோபத்த காட்டினீங்க
மீட்டிங்ல மைக் ரிப்பேர் பண்றவனுக்கு அடி விழுது, எனக்கு மட்டும் இந்த தடவ வோட்டு போடல நா திரும்ப வந்து உங்களை உதைப்பேன் நு சொல்றீங்க
இலங்கையில் நடக்கும் அராஜகத்தை கண்டித்து அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் நு சொன்னீங்க சரி , ஏன் நீங்க ஓர் முன்னோடியா நின்று அத செய்யலே ?
மக்கள் கூட கூட்டணி நு சொல்றீங்க, அந்த மக்கள் ல உங்க மனைவியும் மைத்துனன் சுதீஷும் சேர்த்தி தானே ....
இதெல்லாம் ஒரு நல்ல அரசியல்வாதிக்கான அடையாளம் அல்ல ...
உங்கள் தவறை நீங்கள் எல்லா தொகுதிகளிலும் deposit இழந்ததும் அறிவீர்கள்...

April 28, 2009

வணக்கம்.........வணக்கம்.......... வணக்கம்..........

எல்லாரும் blog எழுதுறாங்களே நாங்களும் எழுதினா என்னனு ரொம்ப நாளா எங்க கிட்ட இல்லாத ஒன்ன கசக்கி பிழிஞ்சு ( அறிவ தான் சொல்றோம்) ரொம்ப யோசிச்சு எழுதலாம்னு முடிவு பண்ணோம் அதுலயும் என்ன பேர் வெச்சு ஆரம்பிக்கலாம்னு ஏதோ பெரிய பட்ஜெட்ல ரஜினிய வெச்சு படம் எடுக்க போற லெவல்கு ்யோசிச்சோம் பாருங்க. சரி அத விடுங்க. அப்புறம் ரொம்ப யோசிச்சதுல எங்க பேரையே வெச்சுடலாம்னு இந்த பேர வெச்சுட்டோம். இந்த blogல நீங்க அறிவு பூர்வமான,உங்க சிந்தனைய தட்டி எழுப்புற வகைல நிறைய விஷயத்த பாத்து படிச்சு கண்டிப்பா தெரிஞ்சுக்க போறதில்ல. ஒன்னுத்துக்கும் உதவாத ஏகப்பட்ட விஷயத்த பாக்க போறீங்க. நாங்க அடிக்கிற தமிழ்ல தப்பு இருந்தா தயவு செஞ்சு எங்கள மன்னிச்சிடுங்க. ஏன்னா நாங்களும் உங்கள மாதிரி சென்னை வாசி தான் அதனால நீங்க எங்க கிட்ட சுத்தமா தமிழ எதிர் பாக்க முடியாது . தப்பா பேசினாலும் நாங்க இங்கிலிஷ்ல தான் பேசுவோமே தவிர தமிழ் எங்க வாய்ல வராதே .

தினமும் நாம பாக்குற,படிக்குற, பேசுற விஷயத்த தான் நான் இதுல எழுத போறோம். ,மத்தபடி கதை,கவிதை,கட்டுரை எழுதுற அளவுக்கு நாங்களும் வளரல எங்க தமிழும் அதே மாதிரி தான் இன்னும் வளரல. சும்மா ஆபீஸ்ல இருக்கும்போது காபி பிரேக்ல , லஞ்ச்ல பேசுற தேவ இல்லாத விஷயத்த தான் இதுல நாங்க எழுத போறோம். நிறைய மக்களை பத்தி பேச போறோம். நாங்க எழுதபோர ஆளுங்க எல்லாம் ரொம்ப வித்யசமானவங்க. அஞ்சு வருஷம் கூடவே இருந்துட்டு வெளில போனவுடனே அசிங்கமா திட்றவங்களபத்தின அரசியல் நியூஸ், எத்தன படம் ஓடலன்னாலும் தன்னோட நடிப்ப மாத்தாம ( மன்னிகனும் நடிக்கவே செய்யாத) நடிகர்கள பத்தின சினிமா செய்திலும், தான் இருக்குற ஊரோட பின்கோட் கூட தெரியாம நம்ம கூட இருப்பானுன்களே நம்ம நண்பர்கள் அவங்கள பத்தியும். இன்னும் எங்கள பத்தி சொல்றதுக்கே நிறைய விஷயம் இருக்கு .

படிக்கிறவங்க சிரிக்கனும் நிறைய தினக் பண்ணனும் இது தான் நாங்க blog எழுதுவதற்கான உந்துதல்,காரணம் அப்படின்னு நீங்க நெனைச்சா வெரி சாரிங்க எங்கள மன்னிச்சிடுங்க. நாங்களே எங்க கை போன போக்குல எழுதுறோம். intro ve இவ்ளோ perisa irukkaennu ஓவரா திங்க் பண்ண வேண்டாம் முடிஞ்சுருச்சு. மறுபடியும் ஒரு நல்ல matter ஓட உங்கள சந்திக்கிறோம்.