January 25, 2017

போலீஸ் ஸ்டோரி

2001 - Iron Lady அம்மையார் ஆட்சிக்கு வந்த உடனே கலைஞர் கைது படலம் நடந்தது. அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமா திரு. ஸ்டாலின் தலைமையில பேரணி நடந்தது. தேனாம்பேட்டைல தொடங்கின பேரணி கடற்கரையை அடைஞ்சதும் நடந்த போலீஸ் வன்முறை இப்போ போராளிகளா இருக்குற எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. அந்த அடிதடிக்கு முன்னாடி இப்போ நடந்தது ஒண்ணுமே இல்ல. தினமலர், தினகரன், ஹிந்து, நக்கீரன் ஆண், பெண் பாரபட்சம் இல்லாம எல்லாரையும் போட்டு சாத்தி  எடுத்து போலீஸ். ஒரு 10 பேர் இறந்தும் போனாங்க. அவங்களோட சடலம் காமராஜர் சாலைல எத்தனை மணி நேரம் கேட்பாரற்று கிடந்துதுனு யாரையாவது கேட்டு தெரிஞ்சுக்கோங்க. இந்த அதிர்ச்சில சைதாப்பேட்டை MLA  வை.பெருமாள் மாரடைப்புல இறந்து போய் அந்த இடத்துல நடிகர் ராதா ரவி  MLA   ஆனார். தி.மு.க. MP வெற்றிச்செல்வன் பாராளுமன்றத்துல சட்டையை கழட்டி நீங்க அடிக்காத காட்டின வரலாறு நீங்க மறக்கலாம், நாங்க மறக்க மாட்டோம். இந்த அடிதடிக்கு Project Manager வேல பாத்தது போலீஸ் நண்பன் அயோத்திகுப்பம் வீரமணி. பிற்பாடு ஒரு 6 மாசத்துல என்கவுண்டர்ல போட்டு தள்ளுற அளவுக்கு  போலீஸ் எதிரி ஆயிட்டாரு. இந்த போராட்டது முன் நின்று  நடத்துனது  திரு. முத்துக்கருப்பனும், திரு. முகமது அலியும் என்ன ஆனாங்க. ``என்ன ரொம்ப நாலா Waiting List ல வெச்சு பெஞ்ச தேய்க்க விடறாங்கன்னு`` முத்துக்கருப்பன் கலைஞர் கிட்ட தான் வந்து முறையிட்டார்..

2002 -  புரசைவாக்கம் மோட்சம் திரை அரங்குக்கு பக்கத்துல இருக்குற கணேஷ் மெஸ்ல எதிர்க்க இருக்குற சட்ட கல்லூரி விடுதி மாணவர்கள் தகராறு பண்ணாங்கன்னு சொல்லி நடுராத்திரி உள்ள புகுந்து அடிச்ச அடி, அத வாங்கின ஒருத்தரும் அத மறந்துருக்க மாட்டாங்க. அதன் தொடர்ச்சியா, போராட்டம் பண்ண மேலூர் & சேலம் சட்ட கல்லூரி மாணவர்களையும்  இந்த போலீஸ் என்ன பண்ணுச்சுனு சொல்லி தெரிய வேண்டியதில்லை. சென்னை பொது மருத்துவமனையில அடிவாங்கின  மாணவர்களை பாக்க  போன மாணவர்களையும் எப்படி அடிச்சாங்கன்னு நானே சொல்லுவேன். ஏன்னா  நான் அப்போ நந்தனம் கல்லூரி மாணவன், நானும் லத்தில அப்போ அடி வாங்கினேன்..நந்தனம் கல்லூரிக்கும் போலீசுக்கும் இருக்குற நட்பு மார்க் அந்தோணிக்கும் மாணிக் பாஷாவுக்கு இருக்க கூடிய அளவுக்கு உயிர் நட்பு. எங்க காலேஜ் உள்ள இருக்கு மோட்டார் ரூம் உடைச்சு எங்க மேலயே பழியை போடற அளவுக்கு  நியாயவானுங்க.

இது போக டாஸ்மாக் விவகாரத்துல கல்லூரி மாணவர்களை அடிச்சது, கோவன் கைது, சசி பெருமாள் கைது, பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தி 7 பேர கொன்னது, இதுக்கெல்லாம் மேல கண்பார்வை அற்ற மாற்று திறனாளிகளை அடிச்சு ஊருக்கு  வெளில கொண்டு போய்  விட்டுட்டு வர அளவுக்கு புண்ணியவானுங்க சார் இவங்க. கூடன்குளத்துக்காக போராடின இடிந்தகரை சாதாரண மக்கள் இப்போ வரைக்கும் கோர்ட், கேஸ்னு சுத்துறது எத்தனை பேருக்கு தெரியும்..வெள்ளம் வந்தப்போ அவங்க வேல பொழைப்பையெல்லாம் விட்டுட்டு படகு எடுத்துட்டு வந்து காப்பாத்துனாங்களே அதுக்கு நீங்க காட்டுற நன்றி கடனாடா இது படுபாவிங்களா.

இது போக 20 கிலோ மீன திருடிட்டு பொய் பக்கத்துல இருக்குற லேடி வெல்லிங்டன் ஸ்கூல்ல வெச்சு சமைச்சு சாப்ட்ருக்கீங்க. கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி போன் கடைல புகுந்து திருடுன கும்பலுக்கும், பிரியாணி அண்டா திருடுன திருட்டு பசங்களுக்கும் உங்களுக்கு என்ன வித்யாசம்.. கேட்டா தி.மு.க. காரனுங்க போலீஸ் வேஷத்துல வந்து இதையெல்லாம் செஞ்சுட்டாங்கன்னு சால்ஜாப்பு வேற..அப்படி வேஷம் போட்டு வந்தவங்கள  கண்டுபிடிக்க துப்பு இல்லாதவங்களா நீங்க..

இந்த  ஆதி,  பாலாஜி, சீமான், கௌதமன், திருமுருகன் காந்தி எல்லாரையும் கவர் பண்ண News 7, புதிய தலைமுறை குப்பத்து ஜனங்களை அடிக்கிறப்போ எங்க போனாங்க. எனக்கு தெரிஞ்சு இவங்கள ஒருத்தன் கூட இதுக்கு சின்னதா ஒரு முனகல்  சத்தம் கூட வெளில விடலியே..

தீய சக்திகள் உள்ள புகுந்ததால் நாங்க வெளில போனோம் சொல்றீங்களே ஆதி அந்த தீய சக்தி யாரு. மோடியை திட்டினாங்க சசிகலாவை திட்டினாங்கன்னு சொல்றீங்களே..இவங்க 2 பெரும் முன்னாடி என்ன பண்ணாங்க, இப்போ மக்களை என்ன பண்ண போறாங்கன்னு தெரியாத தற்குறி கூட்டமா அங்க கூடி இருந்துது, இல்ல அது தெரியாம தான் நீங்க இவ்ளோ நாள் அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினீங்களா..Demonetization ``Dont  Panic `` புகழ் பாலாஜியை பத்தி சொல்லவே வேணாம். அரசியல்வாதீங்க வேண்டவே வேண்டாம் சொல்லிட்டு இப்போ எங்களுக்கு புரியல தெரியல அரசியவாதிங்க எங்கள   வழி நடத்துங்க சொல்றது எந்த மாதிரியான அறிவாளித்தனம்...

சுமார் ஒரு 25 வருஷத்துக்கு முன்னால திருவல்லிகேணில விநாயகர் ஊர்வலத்துல கலாட்டா பண்ணாங்கன்னு சொல்லி, அடுத்து வந்த மீலாது நபி விழாவுல முஸ்லீம் சகோதரர்களை என்ன பண்ணாங்கன்னு, இப்போ எரிஞ்சுதுன்னு சொன்னாங்களே ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன், அங்க முன்னாடி இருந்தவங்கள கேளுங்க, மனசாட்சி இருந்தா உண்மைய சொல்லுவாங்க. 

அய்யா குப்பத்து சகோதரர்களே, போராட்டம் சொல்லிட்டு எவன் வந்தாலும் உதவி பண்ணாதீங்க, வெள்ளம் வந்து ஊர் அடிச்சிட்டு போனாலும் பரவால்ல உங்க வேலையெல்லாம் விட்டுட எங்களுக்கு உதாவாதீங்க. அப்புற எப்பவும் போல உங்க ஆட்டோவை எரிப்பாங்க , குடிசையை கொளுத்துவாங்க, மீன திருடுவாங்க, அப்புறம் நிறைய   அடிப்பாங்க.. முன்னாடி நடந்தது போல நீங்க தான் மாட்டிட்டு முழிக்கணும்.

இதெல்லாம் சொல்ல நீ யாருடன்னு நீங்க கேக்கலாம். கம்யூனிஸ்ட்டா, சமூக போராளியா  இல்ல Facebook போராளியான்னு கேக்கலாம். இதுல எதுவும் இல்ல. அந்த ஐஸ் போலீஸ் ஸ்டேஷன் இருக்குல்ல அங்க இருந்து ஒரு 150 ஆடி  தள்ளி தான் நான் பொறந்து 15 வருஷம் வளர்ந்த  வீடு இருக்கு (இருந்துது) இந்த நடு குப்பம் நான் இருந்த வீட்ல இருந்து ஒரு 5 நிமிஷம் நடைதான். அவங்க கஷ்டம் எனக்கு தெரியும், அது அந்த ஊர் பாசம் மட்டும் தான்...

July 28, 2016

நானும் சேட்ஜிதான்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

நம்ம ஹரித்வார் புலவர் திருவள்ளுவர் எல்லா உயிரும் சமம், அவனவன் செய்ற வேலைல தான் விஷயமே இருக்குனு சொல்லிருக்காரு. இதெல்லாம் புரியாம 2 பேரா போய் ஒரு உலக மஹா மொக்க வாங்கின கதை தான் இது..

முன்னொரு காலத்துல காலேஜ் படிச்சு முடிச்சு வெட்டியா ஊர் சுத்திட்டு இருந்தப்போ நடந்தது இது. நான் இருந்த ஏரியாவுல பாலாஜி மஹால்னு ஒரு பிரம்மாண்டமான கல்யாண மண்டபம் இருந்துது..ஏரியாவுல இருக்குற அரசியல்வாதிங்க, பெரிய தலைங்க வீட்டு கல்யாணமெல்லாம் அங்க தான் நடக்கும், அது ஒரு பணக்கார ஸ்பாட் அப்படின்னு எங்க மனசுக்குள்ள நாங்களே பிக்ஸ் பண்ணிக்கிட்டு அந்த கல்யாண மண்டபத்துல நடக்குற கல்யாணத்த ஆஆன்னு வாய பொளந்துட்டு பாப்போம்..

இந்த ஹோலி இருக்குல்ல அப்போ எங்க ஏரியாவுல இருக்குற சேட் ஜீ எல்லாம் இந்த மண்டபத்தை புக் பண்ணி இந்த தாண்டிய டான்ஸ் ஆடுவாங்க. அது மூணு இல்லனா நாலு நாளைக்கு நடக்கும். இந்த தாண்டியா  டான்ஸ் குஜராத்தி ஆளுங்க ஆடுவாங்க, பொதுவா ஹோலி நேரத்துல கிருஷ்ணா லீலா காணசப்ட்ல ஆடுவாங்க. இங்க ஹைதராபாத்ல துர்கா பூஜையப்போ நடக்குது.

விஷயத்துக்கு,வருவோம், நம்ம ஏரியாவுல சேட்டு பொண்ணுங்க கலர் காலரா டிரஸ் போட்டுட்டு உலா வருவதை பாத்தா உடனே தான் பட்டாம்பூச்சி பறக்கும், மணி அடிக்கும், பல்பு எரியும், உள்ளுக்குள்ள உருண்டை எல்லாம் உருளுமே. அந்த டான்ஸ்ல நாம எப்படி உள்ள போய் அவங்களோட ஜாயின் பண்றது அப்படின்னு நானும் என்னோட உயிர் தோழர் சுரேஷும் ஆலசோனை செஞ்சோம்..உடனடியா நல்லா குளிச்சு முடிச்சு, மூஞ்சையெல்லாம் நல்லா கழுவி ஒரு 5 ரூபா Fair & Lovely (தங்கச்சிது தான், அப்போ மென்ஸ் கிரீம் வரல) எடுத்து மூஞ்சு மொத்தமும் பூசி ஒரு ஆதி காலத்து பைஜாமா ஜிப்பா எடுத்து மாட்டிட்டு சேட்ஜி மாதிரியே சைக்கிள்ல அந்த மண்டபத்துக்கு போனோம்..

சைக்கிள் மண்டபத்துக்கு கொஞ்சம் முன்னாடியே ரோட்ல நிறுத்திட்டோம். பொண்ணுங்க பாத்து கேவலமா நெனைக்க போகுதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நேரா உள்ள போக பாத்தோம்.அப்போ ஒரு கை  எங்களை தடுத்து நிறுத்திச்சு,  " தம்பிங்களா எங்க போறீங்க" அப்படின்னு நின்னுட்டு இருந்த செக்யூரிட்டி எங்களை கேட்டாரு, நான் ரொம்ப அப்பாவியா  "டான்ஸ் ஆட" அப்படின்னு சொன்னேன். "தம்பி இது பெரிய இடத்து பசங்க அவங்க பண்டிகையை கொண்டாட வந்துருக்காங்க, நீங்க எங்க போறீங்க மாப்ள மாதிரி" அப்படின்னாரு..பெரிய இடது பசங்க அப்படின்ற வார்த்தையை கேட்ட உடனே கோபம் தலைக்கேறுச்சு, ஒன்னும் பண்ண முடியாதே, உள்ள போக முடியாம போச்சுன்னா..சமாளிக்கலாம்னு சொல்லி.."பாய் சாப் மெய்ன் பி ஹிந்தி வாலா  ஹூன், ஓ மேரா தோஸ்த் ஹை, மெய்ன் அந்தர் ஜானா ஹை," அப்படின்னு ஹிந்தில நான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி பாத்தேன். ஒன்னும் நடக்கல, இதுக்கு நடுவுல உள்ள இருந்த சூப் பாய்ஸ் அண்ட் சூப்பர் கேர்ள்ஸ் எங்க நாங்க உள்ள வந்துருவோமோனு பயத்துலயே எங்களை பாத்துட்டு இருந்தாங்க.."போங்க போங்க ஆள பாத்தா தெரியாதா....சேட்டு பசங்கன்னு பொய் சொல்லி டப்பா ஹிந்தில பேசினா நாங்க ஏமாந்துருவோமா., போ போ ('ங்க' கட் ஆயிருச்சு)" அப்படின்னு எங்களை கழுத்த  புடிச்சு வெளில தள்ளாம வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா  அப்படின்னு டீசென்ட்டா பத்தி விட்டாரு..அவரை சொல்லியும் தப்பில்ல நாங்க 2 பேருமே சும்மா பளிங்கு கல் மாதிரி பல பளன்னு இருப்போம்..என்ன கலர் தான் கொஞ்சம் கம்மி..

கெத்த விட்டுட கூடாதே..அதனால வெளில வந்த உடனே.. "டேய் எங்களையே உள்ள  விட மாட்டேன்னு  சொல்லிட்டல்ல மகனே ஏரியா பக்கம் வாடா" அப்படின்னு ஏக வசனத்துல  வாடான்னு போடான்னு வடிவேலு மாதிரி கத்திட்டு இருந்தோம். நானும் என் நண்பனும் ஒருத்தருக்கு ஒருத்தர் தடுத்துக்கற மாதிரி எங்களை நாங்களே காப்பாத்திட்டு, "தலைமகனே கலங்காதே..அசிங்க பட்டு வருந்தாதே" எங்களுக்கு நாங்களே ஆறுதல் பாட்டு பாடி வீடு வந்து சேர்ந்தோம்..கொஞ்சம் தூரம் வந்தப்புறம் நம்ம நண்பர் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம  "போடா மயிறு, சொல்லிருந்தா  நான் வண்டி எடுத்துட்டு வந்துருபேன்ல" அப்டின்னான். ( அப்போ சார் யமஹா RX 135 வெச்சுருந்தாரு).

நம்ம நண்பர் இப்போ வேற ஊர்ல பெட்ரோல் பங்க் வெச்சுட்டார், நான் தெலுகு தேசத்துக்கு வந்துட்டேன்..இங்க இருந்து ஊருக்கு போயிட்டு, வீட்டுக்கு நடந்து போறப்ப இந்த செக்யூரிட்டி அண்ணன் (என்ன மரியாதை) சமயத்துல எதிர்க்க வருவாரு, சுந்தர். Cய பாத்த வடிவேலு மாதிரி அப்படியே சைடுக்கா திரும்பி நடந்து போய்டுவேன்..ஒரு 2 வாரத்துக்கு முன்னாடி ஊருக்கு போனப்போ அந்த கல்யாண மண்டபத்தை பாத்துட்டே போனேன், சுவத்துல  கண்ணயன், அந்த செக்யூரிட்டி அண்ணனோட பேரும் படமும் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருந்துது. வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசினதை நினைச்சு பல தடவ பீல் பண்ணி, எப்போவாச்சும் ரோட்ல போகும்போது மன்னிப்பு கேட்டுடலாம்னு நினைச்சிருக்கேன்'..இனிமே கேக்க முடியாது..அவரோட பேரு கூட அந்த போஸ்டர் பாத்து தான் எனக்கு தெரியும்..

மரியாதை இல்லாம பேசினதுக்கு மன்னிச்சிருங்கண்ணே.

July 21, 2016

முதல் நாள் முதல் காட்சி

இது ஒரு விபரீதமான, வித்யாசமான நோய். ஏதாவது புது படம் ரிலீஸ் ஆகும் போது அத முதல்ல நாம பாத்துட்டு, நான் முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டேன்ன்னு சொல்ற பெருமை, சொல்லி புரிவதில்லை. 2001ல் தீனா படத்துல அஜித் ரசிகன்ற பேர்ல ஆரம்பிச்சது, தொடர்ச்சியா அஜித் படம், கமல் படம், மணிரத்னம் படம், ஷங்கர் படம்னு முதல் நாள் பாக்குற வியாதி அப்படியே விரிவடைஞ்சுது. வகை தொகை இல்லாம சூர்யா நடிச்ச ஸ்ரீ , உன்னை நினைத்து, பாண்டவர் பூமி, Die Another Day, புன்னகை தேசம் இப்படின்னு ஏன் பாக்குறோம் எதுக்கு பாக்குறோம்னு தெரியாம 1st day 1st Show மோகம் தலைவிரிச்சு ஆடுச்சு.  நடுவுல ஆழவார், ரெட், ஆஞ்சநேயா, ஜி போன்ற அஜித் காவிய படைப்புகளும் அடங்கும்.

மெது மெதுவா, வேலை மற்றும் மற்ற கேளிக்கைகளில் கவனம் இப்படி சிதறினதால இந்த முதல் நாள் முதல் காட்சி மோகம் கொஞ்சமா குறைஞ்சுது. முதல் நாள் நைட் ஷோ, அல்லது இரண்டாவது, மூன்றாவது நாட்களில் பார்ப்பது அப்படி குறைஞ்சு இன்னைக்கு ஊரே பத்திட்டு எரியுற கபாலி படத்தை ஆறாவது நாள் தான் பாக்க போரேன். 

போன டிசம்பர்ல சென்னைல வெள்ளம் வந்து சாப்பாடு தண்ணி இல்ல, வேற வழி எதுவும் இல்லாதப்போ இந்த 10 ரூபா பால் பாக்கெட்லாம் 50 ரூபா வித்த மாதிரி இந்த கபாலி டிக்கெட் ஏடா குடமான ரேட்ல விக்குது. 2008ல ஜூன் 13, வெள்ளிக்கிழமை  தசாவதாரம் ரிலீஸ். அன்னைக்கு சாயந்தரம் கொடைக்கானல் போக பிளான் போட்டாச்சு. அதுக்காக வியாழக்கிழமை ப்ரெவீவ் ஷோவ வெற்றி தியேட்டர் ஷட்டர்ல மண்டைல அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட 200 ரூபா கொடுத்த பாத்தா மன தைரியம் இப்போ இல்ல (2008 ல 200 ரூபா டிக்கெட் விலை ஜாஸ்தி தான், 2010 ல எந்திரனுக்கே 150 தான் அதுவும் 2ஆவது நாள் .)

இப்போ புதுசா இன்னொரு ட்ரெண்டும் இருக்கு படம் ரிலீஸ் ஆகி அந்த 2,3 நாள்ல பாக்கலைன்னா நம்ம தற்கொலை பண்ணி செத்து போக சொல்வாங்க போலருக்கு. சமீபத்துல இந்த பாஹுபலி படத்துக்கு அந்த மாதிரி பில்ட் அப் கொடுத்தாங்க. அதையே தான் இப்போவும் கபாலிக்கு நடக்குது. எப்போ பாத்தாலும் படம் தான். முதல் நாள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்கள்ல பாக்குறவங்களுக்கும் ரஜினி முகத்தை தான் காட்ட போறாரு, முதுகை இல்ல.

இதுக்கு நடுவுல மழை வெள்ளத்துல ரஜினி சென்னைக்கு என்ன பண்ணாரு, அவர் படத்தை தியேட்டர்ல பாக்காதீங்க டவுன்லோட் பண்ணி பாருங்கன்னு ஒரு குரூப் சொல்லுது. ஏன் டா டேய்...மழை வெள்ளம் வந்தா காப்பாத்துறது ரஜினியோட கடமையா, அரசாங்கத்தோட கடமையா. அப்படியாப்பட்ட  அரசாங்கத்தையே ஒட்டு போட்டு திருப்பி ஆள  வெச்சுருக்கீங்க. இஷ்டம், வசதி , விருப்பம் இருந்தா தியேட்டர்ல  காசு கொடுத்து பாரு. இல்லையா ``திரைக்கு வந்து சில மாதங்களே ஆன`` அப்படின்னு ஜெயா டிவில  போடுவான் அப்போ பாரு. அத விட்டு உன்னோட திருட்டு தனத்தை இன்னொருத்தன செய்ய சொல்லாத.

இந்த மாதிரி நேரத்துல தியேட்டர் காரங்க இதை மாதிரி அநியாய விலைல டிக்கெட் கொடுக்கிறத அரசாங்கம் கட்டுப்படுத்தணும்னு சொல்றாங்க, பண்டிகை காலங்கள் ஆம்னி பஸ் டிக்கெட், பருப்பு விலை , தக்காளி விலை எல்லாம் ஏகபோகமா ஏறும்போது கேக்காத அரசாங்கமா இதை கேக்க போகுது...அவங்க தான் படத்தையே ரிலீஸ் பண்றாங்க..

இருக்கிறவன் காச கொடுத்து பாரு...இல்லாதவன் கொஞ்சம் வெயிட் பண்ணி 2,3 நாள் கழிச்சு பாரு அதுவும் இஷ்டம் இருந்தா.....ஒரு குடியும் முழுகாது..நல்லதே நடக்கட்டும்
November 20, 2013

நாயகன்

அடி நம்பர் 4:  `டேய் இன்னைக்கு காலேஜ்க்கு என்ன சட்ட போட்டுட்டு போன, எடுத்துட்டு வா பாப்போம்` . அடுத்த நொடி நான் என் சட்டய எடுத்துட்டு போய்  காட்டினேன்...``பளார்`` கன்னத்துல செம அடி.

அடி நம்பர் 3: நான் ஒழுங்கா உக்காந்து படிச்சிட்டு இருந்தேன் அப்போ `` போஸ்ட் ஆபீஸ்ல BE  Application Form  தராங்களே வாங்கலாமா..`` என்னோட பதில் `` வேணாம் வேணாம் எதுக்கு தண்டமா 450 ரூபா செலவு பண்ணனும்`` - பளார்.

அடி நம்பர் 2: Cricket  Ground  அடுத்த பந்த எதிர்பார்த்து தயாராகிட்டு இருந்தேன், அப்போ ஒரு உருவம் மைதானத்துகுள்ள வந்து, Stump உருவி, என்னைய அடி பின்னி எடுத்துது, கடைசியா வழக்கம் போல ``பளார்``

அடி நம்பர் 1: இந்த வாட்டி எதுவும் கேக்கல ஆனா `` பளார்`` அதுக்கப்புறம் கேள்வி ``இன்னைக்கு என்ன பண்ண காலேஜ்ல``. நான் `` ஒன்னும் பண்ணலியே`` , மறுபடியும் ``பளார்``

இப்படி ஒரு வாயில்லா பூச்சிய போட்டு பளார் பளார்னு அடிச்சது யாரு. 

அடி நம்பர் 1 சம்பவம் நடந்த அடுத்த நாள். எனக்கு Inorganic Chemistry  எடுக்குற professor பேரு பரமஹம்சம். பேருக்கேத்த  மாதிரியே அமைதியான சுபாவம். அவர் ரூம் கதவு தட்ற  சத்தம் கேட்டு நிமிர்ந்து பாத்துட்டு கேட்டாரு `` யார் சார் நீங்க, என்ன வேணும் உங்களுக்கு``. அப்போ என்ன `பளார் பளார்னு` அடிச்ச ஜீவராசி தன்னோட திருவாய் மலர்ந்து  சொன்ன பதிலுக்கு, கண்கள்ல நீர் மல்க உடனடியா பரமஹம்சம் சார் கொடுத்த reply `` அந்த தெய்வத்த  பெத்தெடுத்த தெய்வமா சார் நீங்க`` ......  யா, யூ  ஆர் ரைட்,  அந்த பளாருக்கு சொந்தக்காரர் My  Daddy. ( எங்க வாத்தியார் அடிச்ச இந்த பஞ்ச், பின்னாடி  Chemistry  Dept  பூரா பிரபலம் ஆச்சு).

சினிமாவுல எதிர் எதிர் துருவங்கள் ஒண்ணா சேர்ந்து அட்ஜஸ்ட் பண்ணி வாழறாங்க அப்படின்னு காமிக்கனும்னாலே, உடனே ஒரு பொன்னையும், பையனையும் தான் காட்டுவாங்க. ஆனா அத விட ஏகப்பட்ட விதத்துல மாறுபட்டு, பாக்குற சினிமா, சாபிடற சாப்பாடு, வெட்டுற முடி, பேசுற பேச்சு, நடக்குற நடை, உடுத்துற உடை அப்படின்னு நிறைய வித்யாசம் இருந்தும் பல வருஷம் ஒண்ணா இருந்து ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுத்து, கேக்காமலேயே தேவையான உதவியும், நல்ல உபதேசமும் கிடைக்குற உறவு தந்தை - மகன் உறவு என்பது அடியேனுடைய பணிவான கருத்து.

எல்லார் மாதிரியும் ``நான் சின்ன வயசுல கண் கலங்கினதே  இல்ல, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தாரு, எனக்கு பிடிச்சதுக்கு மறுப்பேதும் சொன்னதில்ல , My Daddy Strongest, Most loveable daddy, bla bla bla bla ....... அப்படி இப்படின்னு ஜல்லி அடிக்க போறதில்ல.தன்னோட கஷ்டமான சூழ்நிலையிலும், சாப்பாட்டுக்கு வழி இல்லைன்னாலும் எங்கள எப்படி கவனிசுகிட்டாறு அப்படின்ற செண்டிமெண்ட் கதைய சொல்லி கண்கலங்க வெக்க போறதில்ல. நான் ஏகப்பட்ட தடவ ஏடாகூடமா பண்ண அயோக்ய தனத்த எப்படி ப்ராக்டிகலா சமாளிச்சாரு அப்படின்னு ஒரு சின்ன விரிவுரை அவ்ளோ தான்.

 1969 ஒரு கார்த்திகை தீபம் அப்போ எங்க தாத்தா, அதாவது எங்கப்பாவோட அப்பா, நெஞ்சு வலியில  இறந்து போனாரு, 10th பரீட்சை எழுத வேண்டிய எங்கப்பாவ வழக்கம் போல `குடும்ப சூழ்நிலை - வேலைக்கு போகணும்` அப்படின்ற வார்த்தைகள் சுட பாத்துச்சு, கூட்டு குடும்பமா ஏகப்பட்ட பேர் இருக்குற இடமாச்சே, சென்னைல Saphire Theatre ல டிக்கெட் கிழிக்கிற வேலையோட சேர்த்து படிப்பையும் கவனிச்சு பரிட்சையும் எழுதி இருக்காரு. இது போக காபி அரைக்குற மில், அப்படி இப்படின்னு இன்னும் நிறைய வேலைகள் இருக்கு. தன் சொந்த உழைப்புல காலஜெல்லாம் படிச்சு Civil Supplies, Directorate of  Medical Education, TANSI  இப்படி போன்ற அரசு உத்தியோகத்துல உக்கார்ற அளவுக்கு தலைவன் கிட்ட சரக்கு இருந்தும், வழக்கம் போல கலையார்வம் எந்த வேலைலயும் நிலையா இருக்க விடல. அதோட என்னையும் சேர்த்து எங்கப்பாவ ஏமாத்தினவங்க லிஸ்ட் எடுத்தா, இது வரைக்கும் நயன்தாரா கழட்டி விட்ட ஹீரோஸ்  லிஸ்ட்ட விட பெரிசா இருக்கும், அதனால இருக்குற சொத்தும் கை விட்டு போச்சே தவிர, புதுசா கைக்கு எதுவும் வரல..

ஆனா அதுக்கு நேரெதிரா, ``பள்ளிக்கூடம் காலேஜ் அப்படின்னு வாழ்க்கைல 21 வருஷம் போயிருச்சு, அடுத்து வேலைன்னு இன்னொரு 30 வருஷம் போயிரும், நடுவுல ஒரு வருஷம் ரெஸ்ட் எடுதுக்குரேன்னு`` சொன்ன என்கிட்ட மறுபேச்சு பேசாம ஓகே சொன்னாரு. உதவாக்கரை, இப்படியே அவன விட்டா ஒண்ணுமில்லாம போய்டுவான் அப்படீன்னு கேள்வி கேட்ட ஆளுங்களுக்கும் சளைக்காம (என்ன எந்த வேலைக்கு அனுப்பாம) பதிலும் சொன்னாரு. இதுக்கு நடுவுல காதல் பஞ்சாயத்து வேற. இப்படி தான் முடி வெட்டனும், இப்படி தான் டிரஸ் போடணும், இத பண்ணு இத பண்ணாத அப்படின்னு எந்த கட்டு பாடும் இருந்ததில்ல ( ஒரு தடவ சரோஜா தேவி புக் படிச்சு கூட மாட்டி இருக்கேன், அதுக்கே ஒன்னும் பன்னல..), .2 விஷயத்த தவிர ஒன்னு ஒழுங்க படிக்கணும், இன்னொன்னு வழக்கம் போல காதல்( அதெல்லாம் தனி தனி எபிசொட் இருக்கு படிச்சு தெரிஞ்சுக்கோங்க).தண்ணி அடிக்கிறதே நாங்கெல்லாம் வீட்ல சொல்லிட்டு தான் போவோம், அடிகாதன்னு சொல்லாம, எதுவா  இருந்தாலும்  அளவா இரு  அப்படின்னு அட்வைஸ் தான் கிடைச்சிருக்கு.

திருவல்லிக்கேணி இருசப்ப கிராமணி தெருவுல இருந்து ஹிந்து ஹை சஸ்கூலுக்கு கூட்டிட்டு போக ஆரம்பிச்சு - பார்த்தசாரதி கோவில் பக்கத்துல இருக்குற ரகு மாஸ்டர் கிட்ட புல்லாங்குழல் கத்துக்க கூட்டிட்டு போக  தொடங்கி, அப்படியே அது நுங்கம்பாக்கதுக்கு ஷிப்ட் ஆனப்பவும் ஜெர்க் ஆகாம, வேலைக்கு போக ஆரம்பிச்சபுரமும் சாலிக்ராமத்துல Keyboard கிளாஸ் கொண்டு பொய் விடறதுல தொடங்கி,இப்போ என் ஜாதகத்த கைல வெச்சுகிட்டு  சுத்திட்டு தான் இருக்காரு. 

இந்த மனுஷன எந்த வகைல ஏமாத்தலாம்னு யோசிச்சு யோசிச்சு, என் மண்டைல 4444 முடி கொட்டினது தான் மிச்சம். எங்க இருந்துதான் அந்த அறிவு வருதோ. படிப்பு, வேலை, கலை, இசை அப்படின்னு எந்த விஷயத்த பேசினாலும் அத பத்தி பேசி , நம்ம கிட்ட எதிர் கேள்வி கேட்டு மடக்கவும் செய்வாரு. சரி நாம அதானே படிக்கிறோம் அதனால Chemistry  பத்தி கேக்கலாம்னு பாத்தா நமக்கு அத பத்தி ஒன்னும் தெரியாது....இப்போவும்  வேற ஒண்ணுமே கிடைக்காத பட்சத்துல கிடார்ல `` எங்க A minor  வாசி பாப்போம், C, Am, F sharp, G  வாசி பாப்போம்னு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் மண்டைல மத்தளம் வாசிச்சிட்டு தான் இருக்காரு.

சின்ன வயசுல இருந்து நான்  இந்த பைக், இத்யாதி, இத்யாதி போல ஓரளவு  ஆடம்பரமா எதையும் அனுபவிச்சதில்ல அப்படின்னு ஏகப்பட்ட தடவ எங்க 2 பேருக்கும் வாய் தகராறு முத்தி இருக்கு (  2 மாசம் வரிக்கும் பேசாம இருந்துருக்கோம்...). ஆனா அடிபடையா  கிடைக்க வேண்டிய நிறைய விஷயம் அவருக்கு இது வரைக்கும் கிடைச்சதே இல்ல அப்படின்ற உண்மை எனக்கு இப்போ வரைக்கும் உரைச்சதே இல்ல.. வழக்கம் போல எல்லா அப்பாவையும் போல, எந்த பண்டிகைக்கும் எங்க அப்பா புது துணி எடுத்தோ, போட்டோ நான் பாத்ததே இல்ல. நாமளாவது இந்த கம்ப்யூட்டர் காலத்துல Facebook, Whatsapp, தண்ணி அடிப்பது, ஆபீஸ்ல கேக் வெட்டுவதுன்னு,  ஏதோ அப்படி இப்படின்னு நம்ம பிறந்த நாளை  ஓரளவுக்காவது கொண்டாடி இருப்போம். என் நினைவு தெரிஞ்சு December 8, ரொம்ப சாதரணமா போகுமே தவிர, பிறந்த நாள் அப்படின்னு எந்த சலுகையும், செலவையும் எடுதுகிட்டதில்ல.

Sachin Tendulkar  ரிடைர் ஆகுரானு தெரிஞ்ச உடனே Facebook  Status, ஒரே அழுகாச்சி, போச்சே, போச்சே,இனி ஒருத்தன் இப்படி கிடைப்பானா அப்படின்னு பீல் பண்ண நான்...இந்த வயசுலயும் ரெஸ்ட் அப்படின்ற வார்த்தைய கேள்வி படாத, கண்டிப்பா இது மாதிரி ஒரு ஆளு சப்போர்ட்டுக்கு எனக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்சும், எங்கப்பாவ பத்தி ( எல்லாருடைய அப்பாவும் தான்) கொஞ்சம் கூட பீல் பண்ணாத இந்த கேடு கேட்ட ஜென்மத்த என்ன சொல்றது..

அத நினைக்குற அளவுக்கு ஒரு மனித மனம் எனக்கு சீக்கிரம் வரணும்னு எனக்கு நானே prayer  பண்ணிக்கிறேன்...

June 7, 2013

பெண் - செய்முறை விளக்கம் & ஆய்வியல் அறிக்கை.

Aim: குறிக்கோள்:
எப்படி  தான் அவங்கள புரிஞ்சுக்குறது அப்படின்னு இன்னொரு அட்டெம்ப்ட்.

Apparatus Required: தேவையானவை:
ஒரு அப்பா, ஒரு அம்மா. ஒரு அண்ணன், ஒரு மண்டபம், கொஞ்சம் சொந்தகாரங்க, சமையல், ஒப்பனை, அலங்காரம், இதெல்லாம் பண்ண கொஞ்சம் பேரு. அப்புறம் கடைசியா கல்யாணம்.

Procedure செய்முறை விளக்கம் 1:( திருமணத்திற்கு முன் )
1. வீட்டை விட்டு வெளில வந்து தெரு முனைக்கு போனா இடது பக்கம் ரேஷன் கடை, வலது பக்கம் கரண்ட் பில் கட்ற எடம், நேரா போனா மளிகை கடை. இது எதுவுமே கூகுள் மாப்ஸ் வெச்சு கொடுத்தா கூட தெரியாதுன்னு சொல்றது.
2. துணி துவைப்பது என்றால் என்னவென்று கேட்பது, சமையல் அப்படியொரு வார்த்தையை செவி வழியா கூட கேட்டரியாதது.
3. Bus ல ஏறினா உடனடியா சீட் இருக்கானு பாக்குறது, கிடைக்காம நின்னுட்டு போனா மயங்கி விழுறது, வாந்தி எடுப்பது.
4. ``என்ன கவனிக்காதீங்க, அவனையே கவனிக்கிறீங்க`` அண்ணனை பார்த்து அம்மாவிடம் தேவ இல்லாம சவுண்டுவிட்றது.
5. 8 மணிக்கு காலேஜ் போகணும்னா 7.45க்கு படுக்கையை விட்டு எழுந்திருப்பது.
6. கல்லூரிக்கு நினைக்கும் போதெல்லாம் கட் அடிப்பது.
7. அப்பாவிடம் அடாவடித்தனம் செய்வது, அம்மாவிடம் அடங்காபிடாரிதனம் செய்வது, அண்ணன் மீது அடிக்கடி அவதூறு வழக்கு போடுவது.

Procedure செய்முறை விளக்கம்: 2 ( திருமணத்திற்கு பின்  )
1.  சென்னை முகப்பேரிலிருந்து புரசைவாக்கதிற்க்கு  பேருந்தில் தனியாக ரேஷன் கடைக்கு செல்வது.
2. ``நீ துணி துவைக்கிற லட்சணம் தெரியாதா` அப்படின்னு
தன்னோட +2 ல இருந்து துணி துவைக்கிற அண்ணனை ஓட்டுவது. புத்தகம் எழுதும் அளவுக்கு சமையல் தெரிந்து வைத்திருப்பது (நல்ல பாலில் காபி போட்டாயா  என அம்மாவிடம் கேட்பது).
3. 8 மாதம் நிறை மாத கர்ப்பிணியா இருக்கும்போது தினசரி பஸ்ல காலேஜுக்கு வந்து போனது.
4. ``என்னை கவனிக்காதீங்க அவனையே கவனீங்க`` அப்படின்னு அவங்களுக்கே  பிறந்த குழந்தையை காட்டி கலாய்ப்பது.
 5. 8 மணி காலேஜுக்கு 7.45வுக்கே காலேஜ்ல இருப்பது. ( 1+ மணி நேரம் பஸ்ல வரணும்) 
 6. 18ஆம் தேதி பிறக்க போகும் குழந்தைக்கு அதற்க்கு முன் வந்த 8ஆம் தேதி வரை காலேஜ், எக்ஸாம் எல்லாவற்றையும் (உள்ளே) சொல்லி கொடுத்தது.
7. அப்பாவிடம் அடாவடித்தனம் பண்ணுவது, அம்மாவிடம் அடங்காபிடாரிதனம் பண்ணுவது, அண்ணன் மேல் இப்போது அடிக்கடி அவதூறு வழக்கு மேல் வழக்கு போடுவது.

Result  முடிவு: அத விடுங்க பாஸ் நம்மளோட அடுத்த ஆபரேஷன் யாருக்கு....( எங்களுக்கு தான்) ...

June 19, 2012

இந்த கட்டுரையின் பெயர்.....

மேற்கொண்டு படிக்கிறதுக்கு முன்னாடி..எல்லாரும் அவங்கவங்க கண்ண ஒரு 20 செகண்ட் மூடுங்க..இந்த உலகத்துலேயே உங்களுக்கு பிடிக்காத ஒருத்தர நினைச்சுக்கோங்க...எவ்வளவு முடியுமோ..ஒரு டாப் 5 கெட்ட வார்தையால அவன திட்டுங்க..இதுல முதல் வார்த்த என்னவா இருக்கும்னு கண்டிப்பா என்னால சொல்ல முடியும்...உங்களுக்கு பிடிக்காதவன் ஒருத்தன் தான்..ஆனா நீங்க திட்டின அத்தன கெட்ட வார்த்தையும், அவனோட அம்மா,தங்கை, அக்கா, மனைவி இப்படி அவன் உறவு முறைல இருக்குற எதாவது ஒரு பொண்ண இழுத்து, அவள அசிங்க படுத்துற மாதிரியே இருக்குமே..

இந்த ஆணாதிக்கம், பெண்ணடிமை இது மாதிரி என் அறிவுக்கு எட்டாத விஷயத்த நான் பேச போறதில்ல..நம்ம சௌகர்யத்துக்கு பொண்ணுங்க பேர நாம எப்படி எல்லாம் யூஸ் பண்றோம் அப்படின்னு சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன்.நம்ம பாட்னர் ``என்ன டா உனக்கு பாக்க ஆரம்பிச்சுட்டாங்களா `` ``வேலைக்கு அனுப்புவியா டா``அப்படின்னு அவன் கேட்ட கேள்விக்கும், அதுக்கான என் பதில்ல இருந்து இது தொடங்குச்சு..

காலம் முழுசா நாம அம்மா, தங்கை, காதலி, மனைவி இப்படி பல ரூபத்துல ஒரு பொண்ண சார்ந்து தான் வாழுறோம், ( ஒரு சுடு தண்ணி வெக்க கூட நமக்கு தெரியாது), ஆனா ஒரு காதல் தோல்விக்கு அப்புறமா இந்த பொண்ணுங்கள நாம பேசுற பேச்சு இருக்கே...எப்படி ஆரம்பிக்குது இது..எவன் ஒருத்தன் காதல்ல விழுறானோ மொதல்ல போய் அவன் பிரெண்டு கிட்ட சொல்லுவான். முக்கால்வாசி நண்பர்களின் பதில் `அவ வேணாம் மச்சான் ``ஐட்டம்`` டா அவ` அப்படின்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுவானுங்க..இங்க ஆரம்பிக்குது..நாளைக்கு அந்த பொண்ணையே நம்மாளு லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு..``கை வெச்சுட்டியா டா..சீக்கிரம் டா..இல்லனா ஏமாத்திருவாளுங்க டா..``..லவ் பண்ண பொண்ணு வேற வழி இல்லாம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டா  ..``நம்பர் வாங்கி வெச்சுக்க டா..பின்னாடி யூஸ் ஆகும் ``அப்படின்னு சொல்லி அவன் முன்னாடி சொன்ன வார்த்தைய நம்மள வெச்சு உண்மையாக்க பாப்பான்..இப்படி ஒவ்வொரு ஸ்டெப்லயும் நம்மள தப்பா வழி நடத்துறது..யாருன்னு நமக்கு நல்லா தெரியும்.ஆட்டோக்ராப் சேரன் மாதிரி பசங்க 4 லவ் பண்ணா  பிரச்சினையே இல்ல..ஆனா..அதே பொண்ணு ஒரு லவ் பண்ணிட்டு..வேற யாரையாவது கல்யணம் பண்ணிட்டா..முடிஞ்சுது கத...இதுக்கு நடுவுல..``வேணாம் மச்சான் வேணாம்.இந்த பொம்பள காதலு`` அப்படின்னு பாட்டு வரும்போது..ஒஹ்ஹ்ஹ்ஹ அப்படின்னு ஒரு கூட்டம் தன்னோட கேர்ள் பிரெண்ட் பேரோட ஒரு கெட்ட வார்த்தையும் சேர்த்து கத்தும்..

அன்புக்கு தெரசா, அறிவுக்கு கல்பனா சாவ்லா, தைரியத்துக்கு அதிக பட்சமா ஜான்சி ராணி இல்லனா குறைஞ்ச பட்சம் ஜெயலலிதா அம்மையார் அப்படின்னு கொஞ்சமா குடுக்குற உதாரணமும் நாம வெளில இருந்து தான் எடுக்குறோம்...மூணு பெண் குழந்தைங்க சின்னதா இருக்கும்போதே புருஷன இழந்து, நிறைய போராடி, அவங்கள கரை சேர்த்து இன்னைக்கு பல பேரோட ஜாதகத்த கைல வெச்சுகிட்டு யாருக்கெல்லாமோ உழைச்சிட்டு இருக்குற எங்க அத்த மாதிரியோ,தான் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்பாவ யாரு பாத்துப்பான்னு சொல்லி கல்யாண வயச எப்பவோ தாண்டி இன்னமும் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குற எங்க ஏரியா வித்யா டீச்சரையோ, என்ன காரணம்னே தெரியாம விட்டுட்டு போன புருஷன பத்தி ரொம்ப கவலை படாம எனக்கும் சேர்த்து எங்க ஏரியால பாதி பேருக்கு ஹிந்தி அறிவ ஊட்டி விட்ட மீரா மேடம் மாதிரியோ, அவ்ளோ ஏன் இப்போ காதல் திருமணம் பண்ணி 6 மாசத்துல அவங்க வீட்டு ஆளுங்களோட ஒரிஜினல் கலர் தெரிஞ்ச பின்னாடியும் அவனோட தான் வாழ்வேன்னு சொல்ற நண்பனின் தங்கட்சியயோ நாம என்னைக்கு கணக்குல எடுத்துகுரதில்ல, உதாரனாமாவும் சொல்றதில்ல..

இத எழுதும்போது கூட ஒருத்தன் கேட்டான், ``நீ என்ன நயன்தாரா ரசிகனான்னு``.அவனுக்கு, எனக்கும், எல்லாருக்கு சேர்த்து ஒன்னு சொல்றேன்..இந்த நயன்தார, ரஞ்சிதா பின்னாடி எல்லாம் பிரபு தேவா அப்படின்ற உத்தம புருஷனும், ராஜசேகர் என்கிற நித்யானந்தா அப்படின்ற ஒழுக்க சீலனும் இருக்கான்ற உண்மை நமக்கு புரியணும்.``ஏன் சார் கேமராவ பொண்ணுங்களுக்கு முன்னாடி, பின்னாடி இப்படி டைட் க்ளோஸ் அப் வெக்குரீங்கன்னு`` கேட்டா `` டிஸ்த்ரிபியுடர் கேக்குறாங்க சார்``..அப்படின்னு பொய் சொல்றத நேர்ல பார்த்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கு..   காதலுக்காக வீட்டு சுவர எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணி இப்போ சந்தோஷமா இருக்குற  தேவயாணி கூட அந்த துறைல இருக்குறவங்க தான்..

``அண்ணா 2 நாள் ஊர  சுத்தி பாக்க பெங்களூர் வந்த என்னாலேயே இந்த சாப்பாட அட்ஜஸ்ட் பண்ண முடியலையே..நீங்க எப்படின்னா இத தாங்குறீங்க``அப்படீன்னு உண்மையான வருத்தத்தோட கேட்ட என் சித்தி பொண்ணும், ஒரு அண்ணனா கல்யாணம் அப்படின்ற அடிப்படை கடமைய மட்டும் செஞ்ச எனக்கு ,எல்லா பிறந்த நாளும் எனக்கு காலெண்டர்ல    இன்னொரு நாள் தான், எனக்காக கேக் வெட்டின முதல் ஜீவராசி என தங்கச்சி தான்,அப்பாவ தவிர புது உடுப்பு எடுத்து கொடுத்தும் அவ தான்,ஊற விட்டு போரேன்னு தெரிஞ்சதும் தேவையானது வாங்கினது முதற்கொண்டு பேக்  பண்ணி முடிச்சு கண் கலங்கி ஸ்டேஷன்ல டாடா காட்டினதும் அவ தான், இன்னும் கொஞ்ச மாசத்துல எனக்கு தாய்மாமன் அப்படின்ற அந்தஸ்த கொடுக்க போறா. ``டேய் இந்த பச்ச பாட்டில்ல ரசம் இருக்கு 2 நாள் வரும், அந்த ஸ்வீட் டப்பால குழம்பு இருக்கு பிரிட்ஜ் இல்லாமையே 3 நாள் வரும், அதுல சிக்கன் இருக்கு..இப்படின்னு ஊருக்கு போறப்ப எடுத்துட்டு போற பெரிய லக்கேஜ் மாதிரி சாபிடற வஸ்துவ மட்டும் கொடுக்குற அம்மாவை பத்தியே தனியா எழுதலாம்..

காதல் தோல்வியே வந்தாலும்..TR  மாதிரி நாகரீகமா சோகத்த  வெளிபடுத்துங்க, அவர் பையன் மாதிரி வெளிப்படுத்த வேண்டாம்....

ஒரு மணிக்கு ஒரு தரம் போன் பண்ணி ``சாப்டியாடா ``, வெளில போனா ``பத்திரமா போடா``..``குழந்தை என்ன பண்றா`` இப்படின்னு விசாரிக்கும், தன்  மனைவிக்காக என்னவெல்லாம் செய்வார் என்பதும்,ஒரு பெண் குழந்தைக்காக எந்த எல்லையை தொடவும், அந்த குழந்தைக்காக கீழிறங்கி வந்து ஒரு குழந்தையாகவே மாறும், ஒரு உன்னத ஆத்மாவிடம் இரண்டரை வருடம் பணி புரிந்த பெற்ற அறிவு, அருகில் அமர்ந்து அதை பார்த்து ரசிக்கவும் செய்த கண்களுக்கு..இனி தப்பான பார்வையை, செய்கையை, நினைப்பை பெண்களின் பக்கம் வீச கூடாது என பிரார்த்திக்கிறேன்..

தன்னை வருத்தி பிறருக்கு வெளிச்சம் தருவதற்கு உதாரணமாக இனி மெழுகுவர்த்தியை சொல்லாமல் ,ரத்தமும் சதையுமாக உள்ள..பெண்களை சொல்லுவோம்... 

March 12, 2012

காதலில் சொதப்பியது எப்படி - 1

கடந்த ஒரு 2  மாசமா நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.. ஏன்...காரணம்..இங்க கந்தகிரின்னு ஒருத்தன் அவன் காதல் கதைகள் எழுதி..அத என்ன படிக்க வெச்சு பயங்கரமா இம்சை படுத்திட்டான்..இந்த மாதிரி கதையெல்லாம் படிச்சதுக்கப்புறம்..நான் அப்போ பண்ணது இத விட எவ்ளோ சுவாரஸ்யமா இருந்துதுன்னு எனக்கு புரிஞ்சுது..தவிர.இந்த கூட்டத்துக்குள்ள ஒருத்தர் ரொம்ப நாளா இந்த கதைகள கேட்டுட்டு இருக்காரு...அவர் பேரு பரத்..அவருக்கு இந்த உண்மை சம்பவம் சமர்ப்பணம்..இப்போ விஷயத்துக்கு போவோம்...

இந்த அண்ணா ஹஜாரே இருக்காருல,ஊழலுக்கு எதிரா சண்டையெல்லாம் போடறாரே, அவரு இப்படி ஊழல் லஞ்சமெல்லாம் எதிர்த்து சண்ட போடணும்னு ஆரம்பிச்சா முதல்ல காதலுக்கு எதிரா தான் சண்ட போடணும்..ஏன்னா இதெல்லாம் அங்க இருந்து தான் முதல்ல ஆரம்பிக்குது.. ஏரியால சின்ன பசங்கள மிரட்டி அல்லது சாக்லேட் கொடுத்து அந்த அக்கா பேர கண்டு பிடிடா, எந்த ஸ்கூல் டா, எப்போ டா ட்யுஷன் போவாங்க..இப்படின்னு அது ஆரம்பிக்கும்..(பால் மனம் மாறா பாலகனான என்னையும் இப்படி ஒரு 2 பேர் யூஸ் பண்ணி இருக்காங்க.). +2  படிக்கும் போது நான் படிக்கிற அதே டியூஷன் செண்டர்ல நம்ம ஆளும் படிச்சாங்க(அவங்க +1 .கதைல பல ப்ளஸ்கள் இருக்கும் போலருக்கே..), அப்போ பேர கண்டுபிக்க `பத்து ரூபா` கொடுத்து ஒரு 5 ஸ்டார் சாக்லேட் வாங்கி கொடுத்து (எவ்ளோ பெரிய அமௌன்ட்) `அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது பேர கேட்டுட்டு வந்து என் கிட்ட சொல்டா` அப்படின்னு எங்க தெருல இருக்குற என் பேரையே கொண்ட ஒருத்தன நான் நியமிச்சேன்(அதுக்கே அவன்  2 நாள் எடுத்துகிட்டான்)...அப்போ விளையாட்டா ஆரம்பிச்சது தான்.இது நடந்தது 2001 ல..இன் பிட்வீன் நான் காலேஜ் சேர்ந்து படிப்புல (ஆஹா..) கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்..அவங்க +2 ...எப்படி இருந்துருப்பாங்கன்னு சொல்லவே வேணாம்..

 2002  அப்போ ஆரம்பிச்சதது ஏழரை..படிப்புல பிஸி ஆனேனே அப்படியே பிசியாவே இருந்துருக்கலாம்..2 பேரும் ஒரே காமனான பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணி பஸ் ஏற வேண்டிய காட்டாயதுக்கு ஆளானோம்.10 ரூபா செலவு பண்ணி பேரெல்லாம் கண்டு பிடிச்சோமே அதுக்காகவாவது கொஞ்ச நாள் பாலோ பண்ணுவோம் அப்படின்னு யாருக்கும் தெரியாம எனக்கு நானே சபதம்  போட்டேன்..வழக்கம் போல பின்னாடி சுத்தும்போது ஏற்படும் நிராகரிப்பு, கண்டுக்காம போவது, அவமானம், வேண்டுமென்றே சக `மாணவ`நண்பர்களுடன் பேசுவது இப்படின்னு எனக்கு ரத்த கொதிப்பு வர அளவுக்கான செய்கைகள் ஜாஸ்தியா இருந்துது.நானும் என் பங்குக்கு பஸ் ஸ்டாண்ட்ல சாட்டைல தன்னையே அடிசிகிட்டு கால்ல விழுந்து பிட்சை எடுக்குற சிறுமிக்கு 2 ரூபா அட்வான்ஸ் லஞ்சம் கொடுத்து `அந்த அக்கா கால்ல விழுந்து, சாட்டையால அடிச்சிட்டே பிச்சை கேளு, அவங்க காசு கொடுத்தாலும் வாங்க கூடாது, நீ அப்படி பண்ணா,நாங்க உனக்கு புது 5 ரூபா காயின் தரோம்`அப்படின்னு சொல்லி,, அந்த காரியத்த கச்சிதமா முடிச்ச அந்த பொண்ணுக்கு சொன்ன காச கொடுக்காம ரன்னிங்க்ல பஸ்ல ஏறி நாங்க எஸ்கேப் ஆகி போக, நம்ம ஆளு அங்கேயே அழ, பஸ் ஸ்டாண்ட்ல நின்ன அத்தன பேரும் அத பாக்க அந்த ரணகள காமடிய நினைச்சா..(வேண்டாம் நினைக்க வேண்டாம்..)...`ஏன் டா இப்படி பண்றீங்க...உங்களால என்னால நிம்மதியா பஸ் ஏற முடில டா...நாளைல இருந்து நான் வேற பஸ் ஸ்டாண்டுக்கு போறேன் டா` அப்படின்னு எங்க கிட்ட அவங்க முறை இட, அதுக்கு நான் `நீ இமய மலைக்கே போய் பஸ் ஏறினாலும் நாங்க அங்க இருப்போம்` அப்படின்னு பஞ்ச் ரிப்ளை கொடுதேன்..இது மாதிரி தி.நகருக்கு துரத்தி கொண்டு பின் செல்வது, பஸ்சுக்குள் டிக்கெட் எடுக்க கொடத்த காசை லபக்கி கொள்வது...அப்படின்னு அவங்களுக்கு சளைக்காம நம்ம பெர்பார்மன்ஸ் இருந்துது..இத்தன கொலைவெறிக்கு நடுவுலயும் அவங்க என் கூட பேச ஆரம்பிச்சாங்க..(நண்பன் புகழுக்கு நன்றி..) பேச ஆரம்பிச்ச உடனேயே அம்மா கிட்ட சொன்னேன்..`அம்மா, ஒரு அய்யர் பொண்ண உஷார் பண்ண போறேன் மா` நீண்ட நேர அமைதிக்கு பின் வந்த பதில் `எனக்கு தெரியாதுப்பா,இனிமே  நீயாச்சு உங்கபாவாச்சு...என்ன இதுல இழுக்காதீங்க`. என்னோட மிக நெருங்கிய நண்பனான சுரேஷுக்கு இந்த விஷயத்த நான் சொன்னபோது...எங்க உரையாடல்..
அவன்.`டேய் அவ என் பிரெண்டு தங்கச்சி டா.` பதில் `உன் பிரெண்டு தானே டா அவன், எனக்கு இல்லையே..``மறுபடியும் என்ன மடக்க பாத்தான்  ``டேய் அவ ஹைட்டா இருக்கா டா``..பதில், ``நின்னு பாத்துட்டேன் டா ஒரு 4 , 5 சென்டிமீட்டர் கம்மியா தான் டா இருக்கா``..சுரேஷ்`` அவ அய்யர் பொண்ணுடா``... -பதில்-``இது தெரியாமயாடா நான் பின்னாடி சுத்திட்டு இருப்பேன்``.அவன் கடைசி கேள்விய மட்டும் கொஞ்சம் கஷ்டமா,கோபமா கேட்டான்...`` டேய்.......அவ அழகா இருக்கா டா......`` கொஞ்சம் அமைதியா இருந்து நான் சொன்ன பதில்.`` நான் செலக்ட் பண்ணதுக்கான முக்கியமான தகுதியே அதான் டா..``காலைல 7 . 30 & மதியம் 2 . 30 அப்படின்னு காலேஜ் போகும்போதும், வரும் போதும் வெயிட் பண்றது, ஒண்ணா வீட்டுக்கு நடந்து வரது,அத அப்படியே எங்கப்பா கிட்ட எவனாவது ஊதி விடறது இப்படி என் வாழ்க்க -  இருக்கா, இல்லையா அப்படின்ற Cliff  Hanger  படத்துல வர ஸ்டாலன்   மாதிரி மாட்டிட்டு தொங்கிட்டு இருந்துது..

இப்படி போயிட்டு வரதே ஒரு வழக்கமா வெச்சு எனக்கு காலேஜ் முடிஞ்சுது, அவங்க பைனல் இயர் வந்தாங்க. இந்த காலைல 7 . 30 & மதியம் 2 . 30 டைமிங்க்ஸ் மட்டும் கண்டின்யு ஆச்சு..நான் வெட்டியா இருக்குறப்பவே அவங்க காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கும் போக ஆரம்பிச்சுடாங்க..காலைல 7 . 30 & மதியம் 2 . 30 டைமிங்க்ஸ்ல ஒரு சின்ன சேன்ஜ்  வந்துது..காலைலயும், சாயந்தரமும் டைம்  7 . 30 ஆச்சு..இப்படியே எத்தன நாள் சைக்கிள உருட்டிகிட்டு பஸ் ஸ்டாண்டுக்கும் வீட்டுக்கும் ட்ரிப் அடிக்கிறது அடுத்த ஸ்டெப்ப எடுத்த வெக்கலாம்னு முடிவு பண்ணேன்..ஆனா எப்படி சொல்றதுன்னு  தைரியம் வரல...சரி அந்த வருஷ முடியறதுக்குள்ள சொல்லிரணும்னு முடிவு பண்ணேன்..அப்படியும் தைரியம் வரலன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சு ஒன்னு கிறிஸ்துமஸ், இல்ல நியூ இயர் இது 2 ல ஒரு நாள சூஸ் பண்ணி கொஞ்சம் தண்ணிய போட்டு தைரியத்த வர வழிச்சு சொல்ல வேண்டியதுன்னு..என் சாவுக்கு நானே தேதி குறிச்சிகிட்டேன்..அந்த நாள் எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..

இப்போ எங்க ஏரியா கௌன்சிலர் கிட்ட வேலை பாக்குற ஒரு பையன் பஜாஜ் M80 ல ஸ்பீடா நம்ம ஆள இடிச்சு முட்டி கப்ப கழட்டிடான்..ஒரு 15 நாள் பெட் ரெஸ்ட்..எப்படி பாக்குறது,..நாம சும்மா தானே இருக்கோம்..அவங்க வீட்ல வேலைக்கு போய்ட்ட பிறகு போய் பாப்போம், ஆனா வீட்டுக்கு போக தைரியம் இல்ல..இல்லைன்னு சொல்லி நான் நாத்திகம் பேசினாலும்..பக்கத்து தெருவுல அவங்க வீட்டுக்கு நேர்  எதிர்க்க எங்க சொந்த காரங்க வீட்ட வெச்சு எனக்கு உதவி பண்ணினான் ஆண்டவன்.அங்க போய் அவங்கள பாக்குற சாக்குல சிக்னல்ஸ் பாஸ் பண்ணிக்கிட்டோம்..அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு தேறினதும்...தினம் ஒரு துணையோட அவங்க பஸ் ஸ்டான்ட் போக ஆரம்பிச்சாங்க.அந்த துணை லிஸ்ட் ல நானும் ஒருத்தன்..இதுல இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம வீட்டு எதிர் வீடு எங்க தாத்தா வீடு..அந்த வீடு  எங்க தெருவையும் பக்கத்துக்கு தெருவையும் கனெக்ட் பண்ற அளவுக்கு பெரிசு,ஆனா தாத்தா வீட்டு பின் கேட் எப்பவும் பூட்டியே இருக்கும் இந்த சொந்தக்கரங்கள சாக்கா வெச்சு பின் பக்கமா போய் சுவர் எகிறி குதிச்சு என்னோட கனெக்ஷனுக்கு எந்த இடையூறும் வராம நான் பாத்துகிட்டேன்.. கால்ல பட்ட அடி கொஞ்சம் சுமாரானதும் நானும் கொஞ்சா நாள் அவங்க கூட துணைக்கு போயிட்டு இருந்தேன்..( என் கூட ரொம்ப க்ளோசா இருந்த என் மாமா பையனுக்கு கூட இது வரைக்கும் தெரியாது நான் இதுக்கு தான் எகிறி குதிக்கிரேன்னு...2 , 3  தரம் நான் தூக்காதுல சுய நினைவு இல்லாம எங்க தாத்தா வீட்ல நைட் 11 மணிக்கு சுவர் எகிறி குதிச்சு அடியெல்லாம் வாங்கி இருக்கேன்..)

அக்டோபர் 14 ,மழை பயங்கரமா கொட்டுது.. வழக்கம் போல எகிறி குதிக்கும் படலம், வழக்கம் போல அவங்க வெயிடிங், நான் எப்போவும் போல பில்லா அஜித் மாதிரி டிரஸ் போடாம, ஒரு ரவுண்டு நெக் டி ஷர்டும், 3 /4  ஷார்ட்சும் போட்டுட்டு இருந்தேன்..ஆனா அவங்க எனக்கு நேர் மாறா..தக தகன்னு ஜொலிக்கிற மாதிரி லைட் மஞ்சள் கலர் சாரி, கைல ஒரு குடை, ஹான்ட் பேக், தலைகாணி சைஸ்ல 2  புஸ்தகம் (இதெல்லாம் பாத்த உடனே.தல கிரு கிறுன்னு சுத்த ஆரம்பிச்சுருச்சு..என் கண்ணுக்கு அவங்க வழக்கத்த விட பயங்கர அழகா தெரிஞ்சாங்க..நான் வழியுறத கண்டும் பிடிச்சிட்டாங்க.)..நான் அவங்கள பாத்த உடனே..குடையும், புக்கும் என் கைக்கு வந்தது.. என்ன பாத்து..`எப்படி இருக்கு என்னோட டிரஸ் இன்னைக்கு`...என்னோட பதில்..`இவ்ளோ மழை அடிக்குது ஏன் இந்த கோவிந்தா கலர் டிரஸ் போட்ட`..பொண்ணுங்களுக்கா கண்டு பிடிக்க தெரியாது..அதுக்கு ரிப்ளை..` இல்லையே நீ மொதல்ல அப்படி பாத்த மாதிரி தெரியலையே...`அப்படின்னு அத வெச்சு வெட்டியா பேசி சுமார் ஒரு 300 அடி நடந்து தெரு முனைக்கு வந்து ஆட்டோவ கூப்டாங்க...

அவங்க ஆட்டோல ஏற போற நேரத்துல என் திருவாய் மலர்ந்துச்சு..`` இதுக்கு மேல என்னால சொல்லாம இருக்க  முடியாது..எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு அனேகமா இது உனக்கு முன்னாடியே தெரியும்னு நினைக்கிறேன்....``அந்த பக்கம் மௌனம்....திருப்பியும் நான் `` நானும் ஒரு டேட் குறிச்சு தைரியத்த வரவழைச்சு..அப்போ சொல்ல முடியலைன்னாலும், தண்ணிய போட்டு சொல்லலாம்னு தான் நினைச்சேன்.ஆனா இன்னைக்கு உன்ன பாத்த உடனே..எல்லாம் எகிறிடுச்சு அதான் சொல்லிட்டேன்..``ஆட்டோக்காரர் எங்கள வெறிச்சு பாத்துட்டு இருந்தாரு..நல்ல ஆக்ஷன் சீன் ஒன்னு எதிர்பார்த்துட்டு இருந்தாரு போல..என்னோட பில்டிங் & பேஸ்மென்ட் ரெண்டும் வீக் ஆகிடுச்சு..தடதடன்னு கால்,கையெல்லாம் அதுவா ஆடுது..அந்த பக்க பதில்..``இத சொல்றதுக்கு வேற நேரம், இடம் எதுவும் கிடைக்கலியா உனக்கு ..இப்போ வீட்டுக்கு போ..எதுவா இருந்தாலும் சாயந்தரம் பேசிக்கலாம்..நான் இப்போ ஆபீஸ்க்கு போகணும்`.....``.... ``ஓகே  சாயந்தரம் வரைக்கும் தானே, நான் வெயிட் பண்றேன்``...அப்படின்னு சொல்லிட்டு அவங்கள ஆட்டோ ஏத்திட்டு நான் வீட்டுக்கு நடந்து வந்தேன்...எந்த சுவரையும் எகிறி குதிக்காம.....

காதலில் சொதப்பியது எப்படி - 2

நெட்ல ஒரு ஜோக் பாத்தேன்..இந்த ப்ளாக்பெர்ரி & ஆப்பிள் பழங்களா இருக்குற வரைக்கும் மனுஷன் நிம்மதியா இருந்தான் அப்படின்னு, அது மாதிரி தான் எனக்கு அப்போ நோக்கியா 1100 ஒரு பெரிய மாடல், ஆனா இப்போ C7  வாங்கிட்டு சே என்ன டா இது `டச்` சரி இல்லையே...இப்படி சிம்பயான் போன் வாங்கிட்டோமே கொஞ்சம் வெயிட் பண்ணி Android  வாங்கி இருக்கலாம் டா.அப்படின்னு தோணுது......எங்கப்பா 10 ரூபா கொடுப்பாரு TVS பஸ் ஸ்டாப்ல இருந்து ஜாம் பஜார் மார்க்கெட் வரைக்கும் நடந்தே போய் அரியர் வெச்ச Organic Chemistry பாஸ் பண்ணனும்னு நியூ காலேஜ் ப்ரொபசர் கிட்ட கிளாசுக்கு போவேன்..(இன்னைக்கு தேதியில 10 ரூபா வெச்சுட்டு க்ரோம்பேட்ல இருந்து  பக்கத்துல இருக்குற பல்லாவரத்துக்கு கூட போக முடியாது..புரட்சி தலைவியின் புரட்சி.).. இப்போ `டேய் நேரம் போகல டா வா போய் City Diamond ல பிரியாணி சாப்ட்டு வருவோம்`, `வா ப்ளூ சீ போய் டீ சமோசா சாப்பிடுவோம்` அப்படின்னு அதுக்கெல்லாம் 10 , 15 கிலோ மீட்டர் பஸ்ல போய் டீ  கடைல மட்டும் 100 ரூபா செலவு செய்றேன்..ஆப்ஷனே இல்லாம கெடைச்சத வெச்சு குதூகலமா இருந்த காலமெல்லாம் இப்படி பொலம்பும்போது தான் அது எவ்ளோ நல்லா இருந்துதுன்னு நமக்கு புரியும்..அப்போ கெடைச்ச ஒருத்திக்காக பெத்தவங்க முதற் கொண்டு அத்தன பேரையும் மரியாதை இல்லாம பேசினாலும் ஒன்னையும் மனசுல வெச்சுக்காத நெறைய பேர் என் கூட இப்போவும் இருக்குறதால, ஒரிசாவா இல்ல தமிழ் நாடான்னு அப்படின்னு செலக்ட் பண்ற ஆப்ஷன் கெடைக்குற அளவுக்கு நமக்கு இப்போ வசதின்னாலும் , மனுஷனோட முக்கியத்துவம் தெரிஞ்சு,புரிஞ்சு நடந்துக்குறேன்...  சரி விஷயத்துக்கு போவோம்...

காலேஜ் முடிஞ்சு ஒரு ஒன்னரை வருஷம் சும்மா வெட்டியா சுத்திட்டு இருந்தேன்..அப்போ சினிமால அசிஸ்டன்ட் கேமராமேன் ஆக முயற்சி செஞ்சு எங்க ஏரியால ஒருத்தர புடிச்சு `பார்த்திபன் கனவு` டைரக்டர் கரு.பழனியப்பன் அவரோட ஆஸ்தான கேமராமேன் (இப்போ அவரு இல்ல) திவாகரன் கிட்ட சேர்ந்தேன் (ஒரு 20 நாளைக்கு தான்..படம்: சதுரங்கம்) என் கண்ணுக்கு அவங்க 2 பேரும் மணிரத்னம், P . C . ஸ்ரீராம் மாதிரி தெரிஞ்சாங்க..அப்போ பழனியப்பன் அவரோட மலையாள காதலி பத்தி பேசினத கேட்டு புல்லரிச்சு போய்...``ஓஹ் நீங்க மலையாளமா,நான் தெலுங்கு அப்படின்னு இம்ப்ரெஸ் ஆகி நான் எழுதின டைலாக் எல்லாத்தையும் இவங்க கிட்ட யூஸ் பண்ணனும்னு சொல்லி ப்ரிபேர் பண்ணி வெச்சுருந்த அத்தனையும் மறந்து..உளறி கொட்டினது தான் ஆட்டோக்கு முன்னாடி நின்னு அவங்க கிட்ட பேசினது..

சாயந்தரம் 7 . 30 மணி. வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட். இப்போ கொஞ்சம் டீசண்டா டிரஸ் பண்ணி இருந்தேன்...ரிசல்ட் வர போகுதுல்ல..அவங்க வந்தாங்க...ஒன்னும் பேசாம...ஒரு 5 நிமிஷம் கழிச்சு நானே ஆரம்பிச்சேன்..``அப்புறம்...ஆபீஸ் எப்படி போச்சு இன்னைக்கு``...அங்க இருந்து பதில்``எப்படி நல்லா போகும்..``ஆஹா போச்சா அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிட்டே இருந்தேன்..திருப்பியும் அங்க இருந்து..``உங்களுக்கெல்லாம் நேரம் காலமே கிடையாதா..போற நேரத்துல டென்ஷன் பண்ணிட்ட..சுத்தமா வேல ஓடல..(`இல்லனா மட்டும் கிழிசிருவீங்களா` அப்படின்னு கேக்கலாம்னு நினைச்சேன்..விளைவுகள் பயங்கரமா இருக்கும்னு விட்டுடேன்) `சரி சொன்னியே..அதுக்கப்புறம் ஒரு போன் இல்ல ஒரு மெசேஜ்.எதுவும் பண்ணனும்னு தோணலியா உனக்கு`. செல் போன் அப்படீன்ற வார்த்தையே எனக்கு காஸ்ட்லியா காதுல விழுந்த காலம்,எங்கப்பாவோட டாட்டா இண்டிகாம், அப்புறம் பக்கத்து வீட்டு தியாகுவோட மொபைல் இது தான் என்னோட மொபைல் சோர்ஸ். ஒருத்தர் வேலைக்கு போயிட்டாரு , இன்னொருத்தன் காலேஜ் போய்ட்டான்.இப்போ மாதிரி ஆபீஸ் லேப்டாப் வெச்சுகிட்டு Facebook ல மூச்சு விட்றத எல்லாம் Status Update போடற அளவுக்கு நான் அப்போ இல்ல..``என்ன தான் பண்ணிட்டு இருந்த சொல்லு``அப்படின்னு கேட்டாங்க..``இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஹைலைட்ஸ் பாத்தேன், ரேஷன் கடைக்கு போனேன்.அப்புறம்...``...``அப்புறம் என்ன சுரேஷ் வீட்டுக்கு போனியா``....``ஆமா..``...``ஒரு ரோஸ் கொடுக்கணும்னு கூடவா உனக்கு தோணல``அப்படின்னு கேட்டவுடனே தான் அப்பாடா உறுதி ஆயுடுச்சு டா..அப்படின்னு நிம்மதி பெரு மூச்சு விட்டேன்..ஆனாலும் கொஞ்சம் நேரம்.வசை பாடுதல் தொடர்ந்தது..ஓகே ஆன சந்தோஷம் தல கால் புரியாம கொஞ்ச நாள் சுத்தினேன்.உடனடியா அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு வீட்ல ஜிம் சேர்ந்தேன் (நாங்க முன்னாடி குடி இருந்த வீடு) வெயிட் எதுவும் போடாம வெறும் இரும்பு ராட்லையே ஷோல்டர், பைசெப்ஸ் போடறது..(அப்போ என்னால வெயிட் தூக்க முடில), பதிலுக்கு அவங்க பங்குக்கு வீட்டுக்கு வெளில வந்து தலை வாருவது, பல் விளக்குவது,வெங்காயம் அறிவது, வெள்ளை பூண்டு உரிப்பது என வீட்டுக்குள் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் ரோடிலே செய்தார்..(கூட வந்த தியாகு கிட்ட பாரதிராஜா மாதிரி கைலையே frame  பிக்ஸ் பண்ணி ``அங்க பாரு டா, பொண்ணுங்க மட்டும் தான் டா நைட்  ட்ரெஸ்ல கூட செம அழகா இருப்பாங்க..``..``நீங்க ஜிம்முக்கு நானும் வரேன்னு சொல்லும்போதே டௌட் ஆனேன்னா நான்.``அப்படின்னு எனக்கு பஞ்ச் கொடுத்தான்..).``சரி நீ பரதநாட்டியம் டான்ஸ் ஆடுவல்ல எப்படி வணக்கம் வெப்பாங்க வெச்சு காமி`` நான் கேட்டதுக்கு அபிநயம் புடிச்சாங்க, அதுக்கு என்னமோ பத்மா சுப்ரமணியம் மாதிரி டான்சே ஆடிட்டாங்கன்னு நான் புகழ்ந்து தள்ளினேன்..(என் தங்கை கர்நாடக சங்கிதம் கத்துகிட்டு மூணு மணி நேரம் மூச்சு விடாம பாடுவா ஒரே ஒரு தரம் கூட நான் புகழ்ந்ததில்ல)அதுக்கப்புறம் அவங்களுக்கு பிடிச்ச விஜய் என் வாய்ல மாட்டிட்டு முழிச்சாரு, ஏன்னு கேள்வி கேட்ட அப்பா வில்லன் ஆனாரு,.....ஓகே ஆன மூணாவது நாளே அட்வைஸ் ஆரம்பிச்சுருச்சு..எப்போ அரியர் க்ளியர் பண்ண போற, இப்படியே சினிமா சினிமான்னு சுத்திட்டு இருக்க போறியா, ஏன் உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் அப்படி இருக்காங்க..(என்னமோ இவங்க பிரெண்ட்ஸ் அத்தன பேரும் த்ரிஷா, இலியானா ரேஞ்சுக்கு இருக்குற  மாதிரி.).சரி அரியர்க்கு படிக்க ஆரம்பிச்சாச்சு, `சினிமா வேணும்னா நான் வேணாம்னு முடிவு பண்ணுனு சொன்னாங்க`.சரி சும்மா இருந்த காலத்துல Medical  transcription படிச்சேன்.அத வெச்சு ஒரு 2 மாசம் 3  கம்பனில வேல பாத்தேன்..அப்புறம் ஒரு ஷேர் மார்க்கெட் கம்பெனி , அப்புறம் அப்பா மூலமா மெடிக்கல் ரெப், சொந்தகாரன் ஒருத்தன் மூலமா Nittany Desicions  இப்படின்னு மரத்துக்கு மரம் அவங்களுக்காக் தாண்டி...கடைசியா CAMS  ல செட்டில் ஆனேன்..ரொம்ப சந்தோஷமா போச்சு ஓகே இனிமே நாம உருபட்டுடுவோம் அப்படின்னு `நம்பி` சுத்திட்டு இருந்தேன்..Day Shift ல வேலைய முடிச்சிட்டு போய் ஸ்டேஷன்ல நிக்கிறதும், நைட் ஷிப்ட்ல இருந்து வரும்போது தகதகன்னு வர அவங்க முன்னாடி தூங்கின முகத்தோட..முன்னாடி போய் நிக்குரதும்னு போயிட்டு இருந்துது வாழ்க்க..

இதுக்கு நடுவுல அவங்க வீட்ட காலி பண்ணனும்னு முடிவு பண்ணாங்க..இனிமே சுவர் எகிறி குதிக்க வேண்டிய அவசியம் இல்ல அப்படின்னு நினைச்சிட்டு `நம்ம தெருல ஒரு வீடு காலியா இருக்கு உங்கப்பாவ வந்து பாக்க சொல்லு..முடிச்சிரலாம்..அப்படின்னு தேனொழுக பேசி எங்க தெருவுக்கு கூட்டிட்டு வந்தாச்சு..இத அவங்கப்பா எங்க நைனா கிட்ட சொல்ல அவரு க்ரோம்பேட் டு சென்ட்ரல் வரைக்கும் ரயில்ல எல்லாரும் பாக்குற மாதிரி லெக்சர் கொடுக்க... இந்த நண்பன் விஜய் சொல்லுவாரே `என் வாழ்க்கைல மறக்க முடியாத 20 நிமிஷம்` அது மாதிரி என் வாழ்கைலேயே மறக்க முடியாத 45 நிமிஷ அதான்...

என்ன தான் டா ஆச்சு சொல்லி தொலையேன் டா..கேக்குது..நீங்க கேக்குறது கேக்குது...ஸ்கூல்,காலேஜ், பழக்கம்,சுற்று வட்டாரம் இப்படி என்ன சுத்தி எப்பவும் பசங்க மட்டும் தான் இருந்தாங்க,இப்போவும் அப்படி தான், முதல்ல இருந்து இப்போ வரைக்கும் நான் ரொம்ப க்ளோசா இருந்தது 2  பொண்ணுங்க கிட்ட மட்டும் தான்,ஒன்னும் என் மம்மி, இன்னொன்னு பாச மலர் தங்கை..இவங்க 2 பேரும்..தலைல முடி நெறைய இருக்குறவங்க, ரொம்ப மேக் அப் அதெல்லாம் பண்ணாதவங்க, அப்பா ஆபீஸ் ல இருந்து வரும்போது எடுத்துட்டு வர  லக்கேஜ வாங்கிட்டு வந்து உள்ள வெக்குரவங்க..இப்படி இவங்கள பாத்துட்டு பொண்ணுங்கன்னா இப்படி தான் இருப்பாங்க போலருக்கு..அப்படின்னு கற்பனை பண்ணது தப்பு..நம்மாளு நல்லா லெங்க்த் இருந்த தலை முடிய கட் பண்ணிட்டா.., கைல இருக்குற 10 விரலுக்கும் 10 விதமான நைல் பாலிஷ்,அப்படி இப்படின்னு நெறைய சேஞ்சஸ்..அவங்கள தப்பு சொல்லல..இது எதுக்கும் நான் மறுப்பு & எதிர்ப்பு எதுவும் சொன்னதில்ல.. (இதெல்லாம் ஒரு விஷயமாடா அப்படின்னு தோணும்..ஆனா நான் அப்போ அப்படி தான் இருந்தேன்)..அப்போ நான் வேல செஞ்ச இடங்களும் அப்படி தான்..எல்லாரும் என் கண்ணுக்கு குடும்ப பொண்ணுங்க மாதிரியே தெரிஞ்சாங்க..ஜீன்ஸ் போட்ட பொண்ண பாக்குறது..இளையதளபதி விஜய் - அன்பே சிவம் கமல் மாதிரி நடிக்கிறத பாக்குற மாதிரி...அபூர்வம்...(இப்போ ரோட்லேயே தம்மு , தண்ணி அடிக்கிற பொண்ணுங்கள இங்க பாத்து சலிச்சு போச்சு..) எனக்கு எங்க அப்பா அம்மாவை பிடிக்கல, மெட்ராஸ் பிடிக்கல,அப்படி, இப்படின்னு ஏகப்பட்ட பிடிக்கலை இருந்துது...(நல்ல வேல அப்போ என்ன பிடிக்லைன்னு சொல்லல)..திடிர்னு ஒரு நாள் பொண்ணுங்க வழக்கமா போட்ற ஒரு குண்டோடு என் கிட்ட வந்தாங்க, எனக்கு மாப்ள பாக்குறாங்கன்னு சொன்னங்க..நானும் விளையாட்டு தனமா நல்ல இருக்கானுங்களா அப்படின்னு கேட்டேன்.``மாப்ளைங்க எல்லாம் என்ன GRO  ல இருந்து கேட்டாக  , விப்ரோ ல இருந்து கேட்டாக ``.அப்படின்னு சொல்லிட்டு ``நீ எங்க வொர்க் பண்ற CAMS ஆ அது பேரென்ன `` அப்படின்னு கேட்டதும் அதுவரைக்கும் சுருண்டு கிடந்த சுயமரியாதை சுருக்குன்னு அலெர்ட் ஆச்சு...இங்க தான் ஆரம்பிச்சுது..

ஒரு வருஷம் டைம் கேட்டேன், அவங்க வீட்ல கஷ்டம்னாங்க, திடுதிப்புன்னு ஜாதி வேற வந்துருச்சு ( 4 வருஷமா வராதது திடிர்னு எப்படி வந்துதுன்னு இன்னும் யோசிக்கிறேன்)...வேற மாதிரி எதாவது செய்யலாம்னு கூட நான் தின்க் பண்ணேன்..பெத்தவங்களுக்காக இல்லாட்டியும் குறைஞ்ச பட்சம் எனக்கப்புறம் இருக்குற தங்கச்சிக்காக இத செய்ய வேண்டாம்னு முடிவு பண்ணேன்..சண்டை அப்படீன்ற வார்த்தை என்னனே தெரியாத எங்களுக்கு, நாங்க போட்ட முதல் சண்டையே கடைசி சண்டையா மாறும்னு அவங்க நினைச்சாங்களா இல்லையான்னு தெரில, ஆனா நான் நினைக்கல..``நீ மட்டும் தான் பொண்ணா..உன்ன மாதிரியே வெள்ளையா ஒரு பொண்ண எங்கம்மாவ பாக்க சொன்னா முடிஞ்சுரும்..ரொம்ப ஓவரா  பண்ற நீ``அப்படின்னு சொல்லிட்டு வழக்கமா போய் நிக்குற மளிகை கடைல போய் நின்னுட்டேன்..அடுத்த நாள் அங்கேயே நின்னுட்டு சைட் அடிச்சிட்டு இருக்கும்போது..வந்தாங்க..``நேத்து அவ்ளோ பேசினியே..கொஞ்சம் கூட பீல் பண்ணாம அங்க நின்னு சிரிச்சு பேசிட்டு இருக்க..``...``நானா எதுவும் பேசல நீங்க கேட்டதுக்கு நான் பதில் தான் சொன்னேன்`` அப்படின்னு சொன்னதும் வீட்டுக்கு போய்ட்டாங்க..அது தான் கடைசி....இந்த முகத்த தான் முதல் முதல்ல போட்டோ புடிக்கணும்னு வாங்கின சோனி போன் ஒன்னு வாங்கினேன் கடைசி வரைக்கும் ஒரு போட்டோ கூட எடுக்கல...(காமெடி என்னன்னா அந்த போனோட கேமரா 1 .3 MP அதுல படம் புடிச்சா இந்த Voter  ID ல இருக்கும் பாதீங்களா நம்ம போட்டோ, அது மாதிரியே இருக்கும்)..அவங்க வாங்கினப்பவும் என்ன படம் புடிக்க அனுமதிக்கல..( பின்ன நைட் 8  மணிக்கு எடுத்தா எப்படி இருக்கும், எதாவது ஒரு பக்கம் வெளிச்சமா இருக்கணும், 2 பக்கமும் இருட்ட இருந்தா எப்படி..).. ஒரு 10 நாளா கால் பன்னால, மீட் பண்ண ட்ரை பண்ணாலும் நடக்கல..ரொம்ப வெக்ஸ் ஆகி அப்படியே ஒரு வாக் போகலாம்னு நடந்தேன்..(ஆபீஸ் லீவ் போட்டுட்டு தான்)..அப்போ அந்த CAMS  விட்டு வந்து Sify ல சேர்ந்தாச்சு...அப்போ வாத்தியாரோட `அடிமை பெண்` போஸ்டர் பாத்தேன்..நம்ம கவலைய போக்குற ஒரே மருந்து வாத்தியார் கிட்ட தான் இருக்குன்னு போய் டிக்கெட் வாங்கிட்டு உள்ள உக்காந்தேன்..படம் ஆரம்பிச்சுது, பாத்தா பிரகாஷ் ராஜும், ப்ரித்விராஜும்  கீபோர்ட் வாசிச்சிட்டு இருந்தாங்க..``யார்ரா நீங்க வாத்தியார பாக்கலாம்னு வந்தா நீங்க என்ன டா பண்றீங்க இங்க`` அப்படின்னு யோசிச்சேன்,ஒரு வேலை ` அடிமை பெண்` படத்த ரீமேக் பண்ணிட்டாங்களோ..அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கும் போது அது `மொழி` அப்படின்னு புரிஞ்சுது..கால் வந்துது...கட் பண்ணிட்டு மெசேஜ் மட்டும் பண்ணேன்..`I  am  in theatre , watching  Mozhi ` ரிப்ளை..`ok ` இது தான் நாங்க காதலர்களா கடைசியா பேசிக்கிட்டது..

ஒரு நாலஞ்சு மாசம் கழிச்சு...ஒரு சனிகிழமை வீட்ல மல்லாக்க படுத்து விட்டத்த பாத்துட்டு இருந்தேன்..அப்போ கால் வந்துது..மூஞ்சில பிரகாசமா  `பல்பு`  எரிய..எடுத்து அட்டென்ட் பண்ணேன்.. `நான் தான்`அப்படின்னாங்க  `சொல்லுங்க தெரியுது` அப்படின்னு சொன்னேன்..`வீட்லையா` `ஆமா`.....`அப்போ கொஞ்சம் வெளில வாங்க` எழுந்து அரக்க பறக்க ஓடினேன்...(கொஞ்சம் சந்தோஷமா தான்)இத பாத்த என் மம்மி டெர்ரர் ஆயிட்டாங்க..போய் பாத்தா நம்மாளு தெரு முனைல நின்னுட்டு இருந்தாங்க..சந்தோஷமா, ஆனா அத காட்டிக்காம கிட்டக்க போனேன்..

``இந்தாங்க அவசியம் வரணும் ``அப்படின்னு கல்யாண பத்திரிகைய நீட்டினாங்க,...கிழிச்சு அப்படியே மூஞ்சில எறியணும் போல இருந்துது. என்ன பண்ண `மனிதன் ஒரு சமூக மிருகம்` அப்படின்னு Aristotle சொல்லி இருக்காரு.அந்த சமுதாயத்துக்காக நம்ம மிருகம் மெஜாரிட்டி நேரம் தூங்குது..`` இந்த ஏரியவுலேயே உசரமான குழந்தைன்னு பிறந்தா அநேகமா அது உங்க குழந்தையா தான் டா இருக்கும்னு`` முன்னாடி சொன்ன மளிகை கடைகாரரு, என்னமோ அவருக்கு தான் இது நடந்த மாதிரி கண் கலங்க ஆரம்பிச்சுட்டாரு..பத்தரிகைய வாங்கிட்டு அவர் கிட்ட போனேன்..``என்னடா நடக்குது  இங்க`` அப்படின்னு கேட்டாரு ..``விடுங்கண்ணே..அப்புறமா சொல்றேன்`` அப்படின்னு சொல்லிட்டு எந்த தெரு முனைல ஆரம்பிச்சுதோ அதே தெரு முனைல கத முடிஞ்சுது..ப்ராகாசமான `பல்பு` மாதிரி போன நான்..ப்யூஸ் போன மாதிரி `பல்பு` வாங்கிட்டு திருப்பியும் என் வீட்ட பாத்து எந்த சுவரையும் எகிறி குதிக்காம அமைதியா நடந்து வந்தேன்.. போலியோ ட்ராப்ஸ் மாதிரி இடது பக்கமும், வலது பக்கமும் சொட்டு சொட்டா தண்ணி வந்துது..இமேஜ் ஸ்பாயில் ஆயுடுமேன்னு வீட்டுக்கு வெளிலேயே கொஞ்ச நேரம் நின்னுட்டு உள்ள போனப்ப அம்மா ரெடியா இருந்தாங்க..கேள்வி கேக்க..``என்ன டா ஆச்சு..எதுக்கு அப்படி திபு திபுன்னு ஓடின` இந்த பக்கத்துல இருந்து பதில் இல்ல..``என்ன டா கேட்டுட்டு இருக்கேன்,மரம் மாதிரி நின்னுட்டு இருக்க``அப்படின்னு அவங்க முடிக்கிறதுக்கு முன்னாடி..பத்திரிகைய நீட்டினேன்..ஒரு 2  நிமிஷம் அமைதியா இருந்தாங்க அப்புறம் ..``சரி விடு போய் வேலைய பாரு......ஏன் வீட்டுக்கு வந்து கூட கொடுக்க முடியாதம்மா அந்த மகாராணியால `` அப்படின்னாங்க.முடிஞ்சு போச்சு வீட்ல கொடுத்தா என்ன ரோட்ல கொடுத்தா என்ன அப்படின்னு சொல்லி அதோட அந்த கதைய முடிச்சாச்சு..அடிச்சு, அழுது, கத்தி,கதறி..இப்படி பல வழில எனக்கு சொல்லி சொல்லி பாத்தாரு எங்கப்பா, அப்போவெல்லாம் கத்துக்காம ஒரே ஒரு கல்யாண பத்திரிக்கை எனக்கு  வாழ்க்கை, பணம் அப்படின்னா என்னனு கத்து கொடுத்துது..

கொஞ்ச நாள் எல்லா விஷயமும் கொஞ்சம் மப்பா தான் தெரிஞ்சுது.. அதுக்கப்புறம் நமக்குள்ள தூங்கிட்டு இருந்த `பிரேம்ஜி அமரன்` மறுபடியும் முழிச்சிகிட்டான்....வழக்கம் போல நமக்கு ரொமான்ஸ் ரூட் வொர்க் அவுட் ஆகல நமக்கு வர காமெடி ரூட்டையே இனிமே பாலோ  பண்ணுவோம்னு...அப்படீன்னு அந்த பக்கமே நாங்க போறதில்ல...(எப்படியும் நமக்கு எதாவது 10th  அட்டெம்ப்ட் அடிச்சச்து  +2 தேறாதது அப்படின்னு ஏதும் சிக்காமலா போய்டும்....)

ஒரு புக்ல நடிகர் விக்ரம் ஒவ்வொவொரு வித்தியாசாமான கேரக்டருக்கும்   கண்ணாடி முன்னாடி நின்னு வித விதமா நடந்து எப்படி வித்தியாச படுத்தலாம்னு பாப்பாராம்..ஓஹோ இப்படி ஒன்னு இருக்கான்னு அப்படின்னு அந்த வழிய நானும் பாலோ பண்ணி நடந்து பாப்பேன்.(டீசெண்டா நடக்குராரமா) .அதெல்லாம் இப்போ ஒரு MNC ல வொர்க் பண்ணுறதுக்கு யூஸ் ஆகுது.., சரி அவங்க பக்கம் பரதநாட்டியம் இருக்கே நாமளும் எதாவது பண்ணனும்னு சொல்லி கீபோர்ட் கத்துக்க ஆரம்பிச்சேன் ( அவங்களோட பொறந்த நாளுக்கு ஆரம்பிச்சேன்,`பல்புக்கு`அப்புறம் கொஞ்ச நாள் நிறுத்திட்டேன்)..காலைல பாக்குறதுக்கு ஒரு சாக்கா இருக்கணும்னு ஆரபிச்ச பழக்கம் ஜிம்.இப்படி அவங்களுக்காக ஆரம்பிச்ச அத்தனையும், இப்போ எனக்கு அது இல்லாத அளவுக்கு ஒன்னும் நடக்காதுன்ற அளவுக்கு அன்றாட வாழ்க்கையோட கலந்துருச்சு..காலைல எழுந்த உடனே ஜிம், ஒரு `Band ` ஆரம்பிக்கிற அளவுக்கு ஆர்வத்தோட நான் இப்போ கிடார் & கீபோர்ட் கத்துகிட்டேன், வாசிப்பேன்..(என்ன பிரயோஜனம்)...அந்த வகைல அவங்களுக்கு நன்றி..

கடைசியா ஒரு காமெடி: என் தங்கச்சி கல்யாண கிட்டத்துல எங்கப்பா என் கிட்ட வந்தாரு..``அந்த பொண்ணு வருதா``நான்``எந்த பொண்ணு``...திருப்பியும் அப்பா..``அதான் டா..அந்த....`` ``என்ன வேணும் உங்களுக்கு என்னாச்சு...``அப்படின்னு நான் லைட்டா ஆக்டிங்  விட்டேன்..டெர்ரர் ஆயிட்டாரு...அதுக்கப்புறம் அம்மா அத விளக்கி கூறிட்டாங்க...அட பாவி இத்தன நாலா நான் அவங்க கூட சுத்திட்டு தான் இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தியா``சரி போகட்டும் மன்னிச்சு விட்ரலாம்...

விட்ட எடத்துல இருந்தே அடுத்த டாபிக்க ஆரம்பிக்கலாம்....அப்பா......

March 7, 2012

ஜெங்கிஸ் கான்

சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கான், ஜாகிர் கான் தெரியும்...யாரிந்த ஜெங்கிஸ் கான், நாம ஏன் இவன பத்தி இப்போ பாக்க போறோம்..முழுசா மேட்டருகுள்ள போறதுக்கு முன்னாடி..இவன பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போம்

இந்த ஜெங்கிஸ் கான் ஒரு மிக பெரிய மங்கோலிய பேரரசர், சீனா காரன் இந்தாளுக்கு பயந்து, அடிக்கடி வந்து அடிச்சுப்போட்டுட்டு போற இவன தடுக்குரதுக்காக எதாவது பண்ணனும்னு நெனைச்சு என்ன பண்ணனும்னு தெரியாம எதையோ கட்டினாங்க..அது தான் சீனா பெருஞ்சுவர்..அப்படியும் அத எகிறி குதிச்சி போய் அங்க இருந்த `கின்` இன ராஜாவ இவன் மடக்கிட்டான்,அந்த ராஜா இவன் கால்ல விழுந்து எங்கள விட்டுடு அப்படின்னு கெஞ்சி இருக்கான், இப்படி கோவமா வந்த எடத்துல இவன் நம்ம கிட்ட சரணடைஞ்சத பார்த்து ஜெங்கிஸ் கன்பியுஸ் ஆனாலும், நாங்க கோவமா வந்துருக்கோம், உன் நாட்டு இளவரசர்பேர், 500 இளம் வீரர்கள் & யங் லேடீஸ், 3000  குதிரை, 1000  ஒட்டகம் குடு உன்ன மன்னிச்சு விட்டுடறேன் அப்படின்னு சொல்லி, அத வாங்கிட்டும் போனானாம்,மதிக்க மறுத்த ஆப்கானிஸ்தான் மன்னர் அஹமத் ஷாவ நல்லா காய்ச்சுன வெள்ளிய கண், காது, தொண்டைன்னு ஊத்தி கொடுமை படுத்தி இருக்கான்.சரி இவனுங்கலாவது அதர் கண்ட்ரீஸ் பரவால்ல, தன் சொந்த சிப்பாய்களுக்கு இவனுடைய டார்கட் தினமும் 100  மைல் கடக்கணும்..தாகனும்னு கூட வழில எங்கயும் நிக்க கூடாது, எடுத்தா கத்திய வெச்சு குதிரையோட கழுத்த கீறி அந்த இரத்தத்த குடிக்கனும்னு கட்டளை.ரெஸ்ட் எடுத்தா டைம் வேஸ்ட் ஆகுதுன்னு சொல்லி 25 எருதுகள வெச்சு பூட்டி ஒரு மொபைல் கூடாரத்த கட்டி அதுல பயணம் செஞ்சு, சண்டைக்கு பிளான் போடறது, வீரர்கள கவனிக்கிறது இப்படி கொஞ்சம் டெக்னிகலான சைக்கோ வில்லன்..

சரி இப்போ கற்கால பிளாஷ்பேக்ல இருந்து நிகழ்காலத்துக்கு வந்ருவோம், வந்து ஒரு கம்பெனில இருக்குற சில கட்டுபாடுகள ( ரூல்ஸ்) பாப்போம்.
அதாவது காலைல 8 .30  இருந்து சாயந்தரம் 7 .30 மணிக்குள்ள இருக்குற இடைப்பட்ட 11 மணி நேரத்துல நீங்க 8 .30 மணி நேரம் உங்க சீட்ல கம்ப்யுட்டருக்கு முன்னாடி உக்காந்து இருக்கணும்,சாப்ட போறது, டீ குடிக்க போறது, அவ்ளோ ஏன் பாத்ரூம் போறது கூட இந்த Swipe Out பண்ணிட்டு தான் வெளில போகணும், நீங்க போன அந்த நேரம் நீங்க சீட்ல இருக்க வேண்டிய 8 .30 மணி நேர கணக்குல வராது (தல சுத்துதா..), ஒரு வருஷத்துக்கு மொத்தமா 21 நாள் லீவ் இருக்கும்ல அதுல மொத்தம் 12 Earned  லீவ், 5 Casual Leave , 4 Sick  Leave இத எப்படி விளக்கமா சொல்றதுன்னு எனக்கு கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு இருந்தாலும் சொல்றேன்....இந்த லீவெல்லாம் எப்படி மொத்தமா கொடுக்காம மாசத்துக்கு ஒரு earned leave அப்படின்னு மொத்தம் 12 மாசத்துக்கு 12 லீவ்...கணக்கு வந்துச்சா..மிச்சம் இருக்குற Casual , Sick leave ரெண்டும் நாற்பத்தஞ்சு நாளைக்கு ஒரு தரம் சேர்ப்பாங்க..மாசத்துக்கு ஒண்ணுனு ஒரு Earned லீவ் சேரும்..அப்போ நீங்க அந்த லீவ் எடுதுடீங்கன்னா அவ்ளோ தான்,  அதுக்கப்புறம் நீங்க லீவ் போட்டா பரவால்ல, ஆனா உங்களுடைய ஒரு நாள் சம்பளம் அது பாட்டுக்கு LOP ( LOSS of  PAY ) அப்படின்ற பேர்ல தானே புயல் நிவாரண நிதிக்கு போய்டும்..சரிப்பா நான் லீவே போடாம எல்லாத்தையும் சேர்த்து வெச்சுப்பேன்..அப்படி சமாளிப்பேன்.அப்படின்னு சொல்றவங்களுக்கும் ஒரு செக் இருக்கு..ஒரு கால் நீங்க ஆபீஸ் வர வழில அடி பட்டாலோ இல்ல திடிர்னு உடம்புக்கு முடியாம வர முடியாம போனாலோ முடிஞ்சுது சோலி..அடுத்த நாள் நீங்க ஆபீசுக்கு வந்து earned & casual லீவ் அப்ளை பண்ண முடியாது..சிக் லீவ் இருந்தா மட்டுமே அப்ளை பண்ண முடியும்..அது இல்லனா..எத்தன  லீவ் போட்டீங்களோ அத்தன நாளைக்கு உண்டான சம்பளம் ஆடோமேடிக்கா தானே நிவாரண நிதிக்கு போய்டும்..(LOP )...இதுல வெள்ளி மற்றும் திங்கட் கிழமை நீங்க லீவ் போட்டீங்கன்னா இன்னும் விசேஷம்..நடுவுல இருக்குற சனி & ஞாயிறு கணக்குல சேர்ந்துரும்..(சூப்பர்ல...)..இன்னொரு முக்கியாமான விஷயம் இந்த லீவ் பாலிசி எல்லாம் ஏப்ரல் டு மார்ச் தான், அதுக்கப்புறம் உங்களுக்கு லீவ் மிச்சம் இருந்தா அது கான்சல் ஆகிடும்..ஆத்திர அவசர காலத்துக்கு இந்த பெர்மிஷன் அப்படினெல்லாம் சொல்வங்கல்ல அப்படின்னா என்னனே தெரியாத கம்பெனி..திடிர்னு நமக்கோ இல்ல வீட்ல இருக்குரவங்களுக்கோ.....உடம்புக்கு முடியாம போச்சுன்னா ஒன்னு லீவு போடு..இல்ல நிவாரண நிதிக்கு பண கொடு...இது மட்டும் தான் பதில்..இது போக இங்க நடக்குற Annual Appraisal , மத்த விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்கும்னு நீங்களே யூகிச்சு இருப்பீங்க..

மேல சொன்ன விதிமுறைக்கும், ஜெங்கிஸ் கான் கதைக்கும் என்ன சம்பந்தம்..நான் பாக்குறது மொபைல் கேமிங் சம்பந்தமான வேலன்றதால.கிட்ட திட்ட ஆயிர கணக்குல எங்க கிட்ட இந்த மாதிரி கேம்ஸ் இருக்கும்...அதுல ஒரு கேம் தான் இந்த ஜெங்கிஸ் கான்..அந்த பேர விளையாட்டா நான் வேல பாக்குற கம்பெனி MD க்கு வெச்சேன்...ஆனா அதுக்கப்புறம் அவர் நடந்துட்ட விதம் உண்மையான ஜெங்கிஸ் கான் எனக்கு ரொம்ப நல்லவனா தெரிஞ்சான்..Naukari . com கூட தன்னோட Resume  பதிவு பண்ணாம 11 வருஷம் இந்த கம்பனிக்காக உழைச்ச ஒருத்தர வேல செய்ற அத்தன பேர் முன்னாடியும் `கழுத்த புடிச்சு வெளில தள்ளுங்கடா அவன` அப்படின்னு கத்துற அளவுக்கு ஒரு மனிதாபிமானி தான் நம்ம ஜெங்கிஸ் கான். இத்தனைக்கும் நடந்த தப்புக்கும் வெளில போனவருக்கும் சம்பந்தமே இல்லாம...இது நடந்தது...இதே தப்ப அவர் சார்ந்த சமூகத்த ( பச்சையா சொல்லனும்னா `ஜாதி` )யாரவது ஒருத்தன் இப்படி பண்ணி இருந்த கண்டிப்பா இப்படி நடந்துருக்க மாட்டான் நம்ம கான்...நானே ஊருக்கு வரணும்னா என்னோட பாஸ் கிட்ட லீவ் கேக்கனுமேன்னு துளி கூட பயந்தது இல்ல..ஆனா கிளம்பி குறைஞ்சபட்சம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்(அது ஒன்னு இருக்கு, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஆபீஸ்ல இருக்கணும் 7.59 நிமிஷம் இருந்தாலும் உங்க பைசா நிவாரண நிதிக்கு போய்டும் )கவர் பண்ணி லீவ் இல்லாம, LOP  இல்லாம நல்ல படியா ஊருக்கு  போகனும்னு வேண்டிப்பேன்..இப்படி ஒரு சாத்தான் எங்களுக்கெல்லாம் வேதம் ஓதிட்டு இருந்தது பத்தாதுன்னு..இந்த சாத்தனுக்கே வேதம் மற்றும் புது புது விதிமுறைகள சொல்லி கொடுக்க புது சாத்தான் ஒன்னு அப்புறாம வேலைக்கு சேர்ந்துது..HR  அப்படின்ற ரூபத்துல..ஏற்கனவே முள்ளு மேல உக்காந்துட்டு இருந்த எங்களுக்கு அதுல இன்னும் கொஞ்சம் ஆசிட் ஊத்தின மாதிரி இது வந்து சேர்ந்துது..

இந்தியால இருக்குற லேபர் லா எல்லாத்துக்கும் சவால் விடற வகைல இருக்குற இந்த லா பத்தி எந்த பத்திரிகை, டிவியும் கண்டுக்கல அப்படின்றது எனக்கு கொஞ்சம் வருத்தம்..

`அதோ அவனுக்கு டைபாய்ட் வந்துருக்கு, 2  லீவ் தான் இருக்கு, என்ன பண்றது` அப்படின்னு என்னோட பாஸ் எனக்காக போய் லீவ் கேட்டப்ப `அந்த ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு மிச்சத்துக்கு LOP போக சொல்லு` அப்படின்னு சொல்லி நெல்சன் மண்டேலாக்கு அடுத்தபடியா சிறந்த மனிதாபிமானியா என் மனசுல இருக்காரு இந்த ஜெங்கிஸ் கான்..இப்படி டைபாய்ட், தங்கச்சி கல்யாணம் அப்படி இப்படின்னு நானே மொத்தமா ஒரு 6000 க்கு மேல காச எழந்துருக்கேன்...(இத எழுதிட்டு இருக்கப்போ கூட 614 போச்சு)  

உண்மையான  ஜெங்கிஸ் கான் செத்தப்போ மொத்த மங்கோலிய மக்களும் கூடி நின்னு அழுதாங்களாம், ஏன்னா அவன் மத்தவங்கள படுத்தி எடுத்தாலும்..தன் மக்களை நல்ல படியா பாத்துகிட்ட்டான்..ஆனா அது இங்க நடக்குமான்னு தெரில..

உலகம் இந்த ஹிட்லர், முசோலினி, இடி அமீன் இப்படி எத்தனையோ சர்வாதிகாரிகள பாத்துருக்கு..சிகாடிலோ, டாமர், `சிகப்பு ரோஜாக்கள் ` கமல் ஹாசன், அமுதன்,இளமாறன் மாதிரி நிறைய சைக்கோ கொலைகாரங்கள பாத்துருக்கு...இதுல எதுலயுமே சேராம..ஒரு புது விதமான சாடிஸ்ட் & சைக்கோ தான் நம்மாளு..(கூடவே பணம், பதவி, அதிக்கார திமிரும்) ...

நான் போற இடத்துல எல்லாம் இந்த மாதிரி ஆளுங்க எப்படியும் இருப்பாங்க, ஓரளவுக்கு கோபமா, இல்ல முடிஞ்ச அளவுக்கு காமடியா அவங்களுக்கு பதில் சொல்லி இருக்கேன், முறைச்சு இருக்கேன்..(பின்னாடி அவஸ்தையும்  பட்டு இருக்கேன்)..இந்தாளு ரொம்ப பெரிய இடம், ஜாதி பின்னணி, ஒரு பெரிய அரசியல்  வாரிசோட  மிக நெருங்கிய நண்பன்.....நான் என்ன, எவனும் அந்தாள ஒன்னும் பண்ண முடியாது..இப்போதைக்கு...அதான் அந்த இயலாமை, ஆற்றாமை, கோபம் இதெல்லாம் இருக்கு..ஆனா ஒன்னும் பண்ண முடியல..அதுக்கான வடிகால் தான் இது...

இப்போ மட்டும் எப்படி டா உனக்கு இந்த தைரியம் வந்துது அப்படின்னு கேக்க கூடாது...ஏன்னா இந்த மார்ச் மாசத்தோட நான் இங்கே இருந்து கெளம்புறேன்..இவன் ஒருத்தனால ரொம்ப நெருங்கியவங்க கிட்ட இருந்து பிரிய வேண்டியதா போச்சு... 

இப்படி பட்ட ஆளுங்கள ( பெரியவனோ, சின்னவனோ) இனிமே நான் எங்கயும் பாக்க கூடாதுன்னு - இருக்குதா , இல்லையான்னு தெரியாத அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.